For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

உங்கள் செக்ஸ் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும் 8 விஷயங்கள்!

ஏதோ காரணத்தால் நீங்கள் தொலைத்த செக்ஸ் வாழ்க்கையை மீட்டெடுக்க உதவும் வழிகள்!

|

சினிமாவில் காண்பிப்பது போல ரொமான்ஸ் என்பது திரைப்படங்களை காணும் போதோ, ஜோவென்று பெய்த மழையில் நனைந்து வந்த பிறகு ஏற்படும் உணர்வல்ல. ஒரு மனம் இன்னொரு மனதின் பால் கொள்ளும் சௌகரிய உணர்விற்கு பிறகு ஏற்படும் ஒரு உன்னதமான இணைப்பு தான் ரொமான்ஸ்.

சிலரது ரொமான்ஸ் காற்றில் அடித்து செல்லப்பட்ட கருமேகத்தை போல, ஆற்றில் அடித்து செல்லப்பட்ட நீரினை போல எங்கோ மறைந்தோ, கரைந்தோ போய்விடும். இதை எப்படி மீட்டெடுப்பது.... அதற்கு 8 விஷயங்களை நீங்கள் பின்பற்ற வேண்டும்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

தீண்டுதல் கலந்த அரவணைப்பு - தீண்டுதல் இல்லாத கூடல் நடக்க வாய்ப்பே இல்லை. ஆனால், அந்த தீண்டலில் அன்பும், அரவணைப்பும் கலந்திருக்க வேண்டும். உங்கள் மீது அவர் பாதுகாப்பை உணர்வதாக இருக்க வேண்டும்.

#2

#2

இணைப்பு, ஒற்றுமை, நெருக்கம் - ஒரே வீட்டில் ஒன்றாக இருப்பது மட்டும் இணைந்திருப்பது என்று ஆகாது. உங்கள் துணையுடன் மன ரீதியாக இணைந்திருக்க வேண்டும். அவரது கருத்துக்களுடன் ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் அவரது காதலுடன் ஒற்றுமையாக இருக்க வேண்டும். நெருக்கம் குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.

#3

#3

இருவர் மத்தியிலான இணக்கம் - இருவர் மத்தியிலான பாண்டிங் எனப்படும் அந்த இணைப்புடன் சேர்ந்து அவரது வாழ்க்கை மற்றும் அவர் மீதான ஒரு இலகுவான உணர்வு, இணக்கம் பிறக்க வேண்டும். அது எப்போதும் மழலையாகவே இருக்க வேண்டும்.

#4

#4

உணர்ச்சி வெளிபடுத்தல் - உங்கள் உணர்ச்சிகளை நூறு சதவீதம் வெளிபடுத்துங்கள். அது அன்பு, பாசம், அக்கறை, கோபம் எதுவாக வேண்டுமானாலும் இருக்கட்டும். இரண்டு வார்த்தை திட்டுவது கூட தம்பதி மத்தியில் பெரிய தவறில்லை. ஆனால், தவறை உங்கள் பக்கம் வைத்துக் கொண்டு ஒரு வார்த்தை கூட பலமாக உயர்த்துவது பெரிய தவறு. உணர்ச்சிகள் தான் உறவுகளை உருவாக்கும்.

#5

#5

உணர்வுகளை புரிந்துக் கொள்தல் - உங்க மனைவி / கணவன் என்ன சூழலில் இருக்கிறார், அவர் என்ன உணர்வின் வெளிப்பாட்டில் இருக்கிறார்? அவரது மனநிலை எப்படி இருக்கிறது என்பதை அவர் கூறாமலே உணரும், புரிந்துக் கொள்ளும் திறன் இருக்க வேண்டும்.

#6

#6

இரக்கம், அனுதாபம் - அவர் உணர்வு ரீதியாக, மன ரீதியாக, உடல்நல ரீதியாக சரியாக இல்லாமல் இருந்தால் அலுவலகத்திற்கு இரண்டு நாள் லீவ் போட்டு அவருடன் நேரம் செலவழியுங்கள். அவரை அவருக்கு பிடித்த இடங்களுக்கு கூட்டி செல்லுதல், அவருக்கு பிடித்த மாதிரி நடந்துக் கொள்தல் போன்றவை அவரை பழைய நிலைக்கு கொண்டு வர உதவும்.

#7

#7

மகிழ்ச்சி, நகைச்சுவை - உர்ர்ர் என்று முகத்தை வைத்துக் கொள்ளாமல் கோமாளி போல தெரிந்தாலும் பரவாயில்லை புன்னகையை முகத்தில் படர விடுங்கள். மொக்கை ஜோக்காக இருக்கலாம், பழையதாக கூட இருக்கலாம் பேச்சுக்காவது நகைச்சுவை ட்ரை பண்ணுங்க. சில சமயம் நீங்க ட்ரை பண்றது கூட நகைச்சுவையாக மாறலாம்.

#8

#8

பாதுகாப்பு, சௌகரியம், நம்பிக்கை - ஒட்டுமொத்தத்தில், உங்கள் உறவை அவர் பாதுகாப்பாக, உங்களுடன் இருப்பதை சௌகரியமாக, உங்கள் மீது நம்பிக்கையுடன் இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Eight Things That Helps To Bring Back Your Intimacy Life!

Eight Things That Helps To Bring Back Your Intimacy Life!
Story first published: Monday, June 12, 2017, 13:20 [IST]
Desktop Bottom Promotion