Latest Updates
-
புதன்-சுக்கிரனால் உருவாக்கப்படும் லட்சுமி நாராயண யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
எம தீபத்தை எப்போது ஏற்ற வேண்டும்? எந்த இடத்தில் மற்றும் திசையில் ஏற்றி வைக்க வேண்டும்? -
இந்தியாவின் 'ஐஸ்க்ரீம் தலைநகரம்' என்று அழைக்கப்படும் நகரம் எது தெரியுமா? இங்க தினமும் ஐஸ்க்ரீம் சாப்பிடணுமாம் -
தீபாவளி ஸ்பெஷல் பாய் வீட்டு ஆட்டுக்கால் பாயா - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
தீபாவளி ஸ்பெஷல் காரசாரமான மட்டன் குழம்பு ரெசிபி - இந்த பக்குவத்தில் செஞ்சு பாருங்க - தீபாவளியே ஸ்பெஷலாகிரும் -
தீபாவளி பலகாரங்களால் சுகர் அதிகரிக்கக்கூடாதா? அப்ப டாக்டர் சொல்ற இந்த வழிகளை ஃபாலோ பண்ணுங்க.. -
தாஜ் மஹால் கட்டப்பட்ட நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் தெரியுமா? அவர் ஏன் நிலத்தை கொடுத்தார் தெரியுமா? -
தந்தேராஸில் உருவாகியுள்ள 2 ராஜயோகங்கள்: இந்த 5 ராசிக்காரர்களுக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கும்! -
பச்சை பயறு தேங்காய்ப்பால் அரிசி கஞ்சி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணி பாருங்க.. -
நவம்பர் 06, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மனஅழுத்தம் நிறைந்த துயரமான நாளாக இருக்குமாம்
ஆண்களை பற்றி பெண்கள் தவறாக எண்ணும் 7 விஷயங்கள்!
ஆண்கள் பற்றி பெண்கள் தவறாக எண்ணுவதும், பெண்கள் பற்றி ஆண்கள் தவறாக எண்ணுவதும் மனித குணாதிசயங்களுள் இயல்பானவையாக மாறிவிட்டன. ஆனால், சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் குற்றம் குறை கூறிக் கொண்டு திரிவது நல்லதல்ல.
அழகான பொண்ணுகள லவ் பண்றதுல 12 சிரமங்கள் இருக்காம்!!!
நண்பர்களுடன் வெளியே சென்று வந்தால் நம்ம வீட்டு அம்மணிகளுக்கு சுத்தமாக பிடிக்காது. அதே மனைவிகள் பிறந்து வீட்டு சொந்த பந்தங்களுடன் ஓரிரு நிமிடங்கள் அதிகமாக நேரம் செலவழித்தால் ஆண்களுக்கு பிடிக்காது. இதை மாற்றுவது என்பது சற்றுக் கடினம் தான்.
அவள் உங்களை கிறுக்குத்தனமாக காதலிக்கிறார் என்பதை வெளிப்படுத்தும் 7 விஷயங்கள்!
ஆனால், ஆண்கள் சில விஷயங்களை சாதாரணமாக செய்தாலும் கூட பெண்கள் அதை தவறாக தான் பார்க்கிறார்கள். அவற்றை பற்றி இனிக் காண்போம்...

அனுமானம்
பெரும்பாலும் ஆண்கள் யாராவது எதையாவது கூறிக் கொண்டிருக்கும் போதே அவர்கள் என்ன முடிவாக கூற வருகிறார்கள் என்பதை அனுமானம் செய்துவிடுவார்கள். இது பெண்களுக்கு பிடிக்காது. ஏனெனில், பெண்கள் முழுவதுமாக கேட்டப் பிறகு தான் தங்கள் பதிலை அளிப்பார்கள்.

சிறிய பதில்கள்
ஆண்கள் மணிரத்னம் போல, பெண்கள் பழைய புராணத்தை போல. ஏன் தாமதம் என்ற கேள்விக்கு ஆண்கள் "டிராபிக்" என்ற ஒற்றை வார்த்தையில் பதிலை முடித்துவிடுவார்கள். ஆனால், பெண்கள், "நான் இன்னிக்கி காலையில எழுந்து.." என ஆரம்பித்து, தன்னுடன் பயணித்தவர்கள் வரை என விலாவாரியாக தான் பதிலளிபார்கள். பதிலை இப்படி தான் மற்றவரிடம் இருந்து எதிர்பார்ப்பார்கள்.

கேட்பது
ஆண்களால் வெறுமென காதுக் கொடுத்து கேட்டுக் கொண்டே இருக்க முடியாது. பெண்கள் பேசும் போது, டிவி பார்த்துக் கொண்டே கேட்பது, மொபைலை நோண்டிக் கொண்டே கேட்பது என இருப்பார்கள். இதை பெண்கள் வேண்டா வெறுப்பாக ஆண்கள் நடந்துக் கொள்வதாய் எண்ணுகின்றனர்.

அபூர்வம்
ஆண்கள், பெண்களிடம் கேள்வி கேட்பது என்பது மிகவும் அரிது. ஆனால்,. பெண்கள் அப்படி இல்லை. கேட்ட கேள்வியையே ஆயிரம் தடவை கேட்பார்கள்.

நேருக்கு நேர்
பெரும்பாலும் ஆண்களால் எதையும் மனதுக்குள் மறைத்து வைத்துக் கொள்ள முடியாது. ஏதேனும் சந்தேகம், பிரச்சனை என்றால் முகத்திற்கு நேராக கேட்டுவிடுவார்கள். இது, அநாகரிகமான செயல், பொறுமையாக இருக்க கற்றுக் கொள்ள வேண்டும் என பெண்கள் சிலர் கருதுவதுண்டு.

ஒரே கேள்வி
ஒரே விஷயத்தை பற்றி பலநூறு தடவை யோசிப்பது பெண்களிடம் மட்டும் தான் சாத்தியம். நிகவுகளுக்கு செல்லும் பொது புடவை தேர்வில் இருந்து காலை உணவு சமைப்பது வரையில் பெண்கள் சின்ன சின்ன விஷயத்திற்கு எல்லாம் பலமுறை யோசிப்பார்கள். இதே விஷயங்களை ஆண்கள் வேகமாக செய்தால், அவசர குணம் படைத்தவர்கள் என கூறுவார்கள்.

சோகம்
பெண்கள் சோகமாக இருக்கும் போது யாராவது அரவணைப்பாக பேச வேண்டும் என எதிர்பார்பார்கள். ஆனால், ஆண்கள் தனிமையான சூழலுக்கு சென்றுவிடுவார்கள். இதை பெரும்பாலும் பெண்கள் தவறாக எண்ணுதல் உண்டு.



Click it and Unblock the Notifications
