Latest Updates
-
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க அசாத்திய தைரியசாலிகளாம் - எந்த விஷயத்தை பார்த்தும் பயப்பட மாட்டார்களாம் -
வீட்டுல காய்கறி இல்லையா? தக்காளி மட்டும் இருக்கா? அப்ப இப்படி சாம்பார் செய்யுங்க.. எல்லாத்துக்கும் அள்ளும்.. -
கொங்குநாடு கொள்ளு குருமா ரெசிபி - இந்த மாதிரி குருமா வைச்சு பாருங்க - ஆரோக்கியமாவும், டேஸ்டாவும் இருக்கும் -
இந்த 10 அறிகுறிகளை ஒருபோதும் அசால்ட்டா எடுக்காதீங்க.. எச்சரிக்கும் அமெரிக்க டாக்டர்! -
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம்
அழகான பொண்ணுகள லவ் பண்றதுல 12 சிரமங்கள் இருக்காம்!!!
கண்டிப்பாக காதலிக்கும் போது இளமை வயதில் அனைவரும் தங்களுக்கு ஓர் அழகான துணை வேண்டும் என்று தான் விரும்புவார்கள். ஆனால், அதன் பின்னணியில் பல சிரமங்கள் இருப்பது பின்னாட்களில் தான் தெரியவரும். இதற்கு சில சமயங்களில் பெண்களும், பல சமயங்களில் ஆண்களும் காரணமாக இருக்கிறார்கள்.
அழகு என்பதை முகத்தில் இருந்து அகற்றிவிட்டு, அகத்தில் கண்டால் இங்கு எந்த சிரமும், பிரச்சனையும் வராது. ஆனால், அனைவரும் முகத்திலும், உடல் வடிவத்திலும் மட்டுமே கண்டு மனதை அலைபாயவிடுவதால் தான் சிரமங்கள் சிகை அலங்காரம் போல தலைக்கு மேல உட்கார்ந்து கொள்கின்றன....

அழகு எனும் பெருமிதம்
தான் அழகு என்ற பெருமிதம் அவர்களிடமும், அதனால் சில சமயங்களில் உங்களை மதிக்க மாட்டார்களோ என்ற அச்சம் உங்களிடமும் நிலவிக் கொண்டே இருக்கும்.

காக்கை கண்கள் வட்டமிடும்
சுமாரான பெண்களை ஆண்களின் கண்கள் கழுகை போல வட்டமிடும். சூப்பரான பெண் என்றால் வடையை சுட்டு செல்ல காக்கையை போல வட்டமிட்டுக் கொண்டே இருப்பார்கள்.

நம்பகத்தன்மை
பல சமயங்களில் ஆண்கள் செய்யும் தவறு இது தான். தங்களுக்கு மிகவும் அழகான பெண் காதலியாக, மனைவியாக அமைந்துவிட்டால். ஒருவேளை ஏதேனும் கசப்பான முன் அனுபவம் இருக்குமோ, அதனால் தான் நம்மளை தேர்வு செய்துவிட்டாளோ என்ற அச்சம் இருந்துக் கொண்டே இருக்கும்.

ஹாட்டான பெண்கள்
தான் ஹாட்டான பெண் என்று அவர்களே அறிந்திருப்பது. இதனால் நீங்கள் பல சமயங்களில் அவர்கள் கூறுவதை கேட்டு தான் ஆகவேண்டும் என்ற கட்டாயம்.

ஹாட்டான பெண்கள் என்றால்
மேலும், அவர்கள் ஹாட்டாக இருப்பதால் தான் நீங்கள் விரும்புகிறீர்கள் என்று அவர்கள் அறிந்துவிடுவார்களோ என்ற பதட்டம்.

வேறு நபரை அணுகும் எண்ணம்
"அதற்காக" மட்டும் அழகான, ஹாட்டான பெண்களை விரும்பும் நபர்களுக்கு குரங்கை போல மனம் எங்கும், இங்கும் தாவிக் கொண்டே இருக்கும். வேறு சில அழகான பெண்களை காணும் போது அவர்களுக்கு ரூட்டு விடலாமா என்ற ஆசை வரும். இது சத்தியமாக உங்களை யாருடனும் உறவில் நிலைக்க வைக்காது.

உங்களைவிட ஸ்மார்ட்
அழகான பெண்களுடன் உறவில் இருப்பதில் இருக்கும் பெரும் சிரமமே, அவர்கள் உங்களை விட ஸ்மார்டாக இருப்பார்கள். அறிவிலும், அழகிலும்.

செலவாகுமோ என்ற அச்சம்
மேலும், அழகான பெண்களுடன் உறவில் இருந்தால் பணம் நிறைய செலவாகும். வெளியிடங்களுக்கு சென்றால் காஸ்ட்லியான இடங்களுக்கு தான செல்ல வேண்டும், பர்ஸ் கிழிஞ்சி போகுமோ என்ற பயமும் கூட உறவை சீர்குலைத்துவிடும்.

அக்கா தங்கை
மேலும், சில ஆண்களுக்கு அழகான பெண்களின் சகோதரிகள் மீதும் ஆசை வரும். ஆண்களால், இந்த ஆசைகளை கட்டுப்படுத்தாமல் இருக்க முடியாது.

போருக்கு தயாராகுங்கள்
சும்மாவே நிறைய சண்டை வரும். இதுவே சுமாரான பையன், சூப்பரான பெண்ணுடன் உறவில் இருந்தால் அழகின் காரணமாகவே நிறைய சண்டை வரும். இதை எதிர்கொள்ள எப்போதும் தயாராக இருக்க வேண்டும்.

பதட்டம்
எப்படா பிச்சுக்கிட்டு போகும் என்ற பதட்டம் உள்ளுக்குள் இருந்துக் கொண்டே இருக்கும்.

உரசல்களில் அச்சம்
மேற்கூறியவாறு, கண்டிப்பாக மற்ற ஆண்களின் பார்வை இவர்கள் மீது எப்போதுமே இருந்துக் கொண்டிருக்கும். யாராவது உரசிவிடுவார்களோ, சீண்டி விடுவார்களோ என்ற பதட்ட நிலையிலேயே இருக்க வேண்டும்.



Click it and Unblock the Notifications
