உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிடுவது எப்படி?

By: Ashok CR
Subscribe to Boldsky

முத்தம் என்பது அன்பின் ஓர் பரிமாணம். தாய் ஒரு குழந்தைக்கு கொடுக்கும் முத்தம் அவள் அதன் மீது வைத்துள்ள அன்பையும் பாசத்தையும் வெளிக்காட்டும். அதுவே ஒரு ஆணும் பெண்ணும் முத்தமிடும் போது, அவர்கள் ஒருவர் மீது மற்றவர் வைத்திருக்கும் காதலை வெளிப்படுத்தும். முத்தத்தில் பல வகை உள்ளது. அன்பில் தொடங்கி காமத்தில் வந்து முடியும் பல வகையான முத்தங்கள் உள்ளது.

சரி, முத்தமிடுவதைப் பற்றி கொஞ்சம் பார்க்கலாம். உங்கள் உயரத்தில் இல்லாத ஒருவரை எப்படி முத்தமிடுவது என உங்களுக்கு தெரியுமா? நீங்கள் இருவரும் சரியான ஜோடியாக இருக்கலாம். இருப்பினும் நீங்கள் இருவரும் ஒன்றாக சேர்ந்து நிற்கும் போது உயரத்தில் ஒரு அடி அளவு வித்தியாசமாக இருந்தால் எப்படி இருக்கும்? கவலை கொள்ளாதீர்கள்! அதற்கு ஒரு வழி உள்ளது. உங்கள் உயரத்தில் இல்லாத ஒருவரை நீங்கள் முத்தமிட வேண்டும் என்றால் கீழ்கூறிய முறைகளை முயற்சி செய்யவும்:

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உயரத்தை சரிக்கட்டவும்:

உயரத்தை சரிக்கட்டவும்:

நீங்கள் எட்டி நில்லுங்கள், இல்லை குனிந்து நில்லுங்கள். உயர வேறுபாட்டை குறைக்க கீழ்கூறிய எளிய வழிகளை முயற்சி செய்யுங்கள்:

* நீங்கள் குட்டையாக இருந்தால் உதவியை நாடிடுங்கள். ஸ்டூல் அல்லது நாற்காலியை பயன்படுத்துங்கள், இல்லையேல் சற்று எக்கி நில்லுங்கள். முடிந்தால் ஹீல்ஸ் உள்ள உயரமான ஷூக்களை அணியுங்கள். ஹீல்ஸ் உள்ள செருப்பு தான் சிறந்த தேர்வாக இருக்கும். இது ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருக்கும் உபயோகமாக இருக்கும்.

உயரத்தை சரிக்கட்டவும்:

உயரத்தை சரிக்கட்டவும்:

* நீங்கள் உயரமானவர்களாக இருந்தால், குட்டையாக இருக்கும் உங்கள் துணையை பள்ளமான இடத்தில் நிற்க வையுங்கள். நீங்கள் உறவின் ஆரம்ப கட்டத்தில் இருந்து, உங்கள் துணை சற்று தயங்கினால், மெதுவாக முயற்சி செய்யுங்கள்.

உயரத்தை சரிக்கட்டவும்:

உயரத்தை சரிக்கட்டவும்:

* ஈர்க்கத்தக்க தோரணையில் நிற்பதற்கு, உங்கள் கால்களை விரித்து, சுவற்றின் மீது சாய்ந்து கொள்ளவும். உங்கள் கால்கள் சாய்ந்த வாக்கில் தரையில் இருக்க வேண்டும். உங்கள் துணை உங்கள் கால்களின் நடுவே நிற்க வையுங்கள். இதனால் உங்கள் இருவருக்குமே போதிய சமநிலை கிடைக்கும். பின் சுவற்றில் இருந்து ஒற்றை காலின் மீது உங்கள் எடையை கொண்டு வந்து, பின்னே சாய்ந்து, மற்றொரு முட்டியை மடக்கி வைத்து ஹாலிவுட் போஸ் ஒன்றை ஸ்டைலாக கொடுங்கள். இது போதும், செய்ய வேண்டிய வேலையை உங்கள் துணையே செய்து முடித்து விடுவார்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மையத்தில் சந்தியுங்கள்:

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மையத்தில் சந்தியுங்கள்:

உங்கள் துணை உங்களை விட உயரமானவர் என்றால், அவர்களுக்கு சௌகரியமாக இருக்கும் பட்சத்தில், அவர்களின் கால்களின் மீது உங்களை ஏறி நிற்க சொல்வார்கள். ஒரு வேளை, நீங்கள் குட்டையாக இருந்தால், குதிங்காலை சற்று உயர்த்தி, மேலே சென்றிடுங்கள். முடிந்தவரை உங்கள் பெருவிரலை மட்டும் ஊன்றி, உடலை அப்படியே உயர்த்திடுங்கள். ஒரு வேளை, நீங்கள் உயரமாக இருந்தால், சற்று குனிந்து கொள்ளுங்கள். உங்கள் கால்களை சற்று விரித்துக் கொண்டால், உயரத்தை குறைத்துக் கொள்ளலாம்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட செட்டிலாகுங்கள்:

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட செட்டிலாகுங்கள்:

உங்கள் துணையை தழுவிக் கொண்டு முதலில் நிலையை சரியாக்குங்கள். ஒருவரை ஒருவர் நெருக்கமாக அணைத்துக் கொள்ளும் போது, அதுவே அனைத்திற்கும் வழி அமைத்து தரும். இதனால் யாருடைய உயரத்திற்கு யார் இறங்க வேண்டும் அல்லது யார் ஏற வேண்டும் என்ற பிரச்சனையே ஏற்படாது. முத்தமிடாத போது, தழுவி கொண்டிருக்கும் குட்டையான துணை, தன் துணையின் நெஞ்சின் மீது தன் தலையை திருப்பி வைத்துக் கொள்வார்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட வேறு அங்கங்களில் முத்தமிடவும்:

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட வேறு அங்கங்களில் முத்தமிடவும்:

உடலின் மற்ற அங்கங்களிலும் முத்தமிடுங்கள்! உங்கள் துணையின் நெற்றி, கழுத்து, நெஞ்சு, கைகள், தோள் அல்லது வயிற்றில் முத்தமிடுங்கள். அனைத்து நல்ல முத்தங்களும் உதட்டின் மீதோ அல்லது கன்னங்களின் மீதோ கொடுத்தால் தான் கிடைக்கும் என்றில்லை.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட சுவாரசியமான முறையை கையாளுங்கள்:

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட சுவாரசியமான முறையை கையாளுங்கள்:

உயர வேறுபாட்டை பயன்படுத்தி, உங்கள் முத்தங்களை சுவாரசியமானதாக மாற்றுங்கள். இப்படி செய்வதால் புதுமையான வழியில் பல முத்தங்களைப் பெறலாம், கொடுக்கலாம். ஆனால் அப்படி செய்யும் போது, உங்கள் துணையின் முகத்தில் காயம் ஏதும் ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். முரட்டுத்தனமாக் செய்வது சில பெண்களுக்கு பிடிப்பதில்லை.

ஒரு வேளை, நீங்கள் குட்டையாக இருந்தால், உங்கள் முகம் ஒரே அளவில் வரும் அளவிற்கு, அவரின் கைகளில் பாய்ந்து குதித்திடுங்கள். பின் உங்கள் கால்களை உங்கள் துணையின் இடுப்பின் மீது சுற்றிக் கொண்டு, முத்தத்தை தொடங்குங்கள்.

நீங்கள் உயரமாக இருந்தால், உங்கள் துணையை தூக்கிடுங்கள். அவர்களை கட்டிப்பிடிக்கும் போது, அவர்களை மறுப்பக்கமும் சுற்றி விட்டு முத்தமிடுங்கள். உங்கள் உயரத்திற்கு மேலேயும் அவர்களை தூக்கிடுங்கள். உங்களைச் சுற்றி அவர்கள் தங்கள் கால்களால் சுற்றிக் கொள்ள வேண்டியது முக்கியமாகும்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

1. நீங்கள் குட்டையாக இருந்து, உங்கள் துணை லேஸ் வைத்த கோட் அணிந்திருந்தால், அதனை பிடித்து அவர்களை உங்களருகில் இழுத்துக் கொள்ளுங்கள்.

2. நீங்கள் ரொம்பவும் குட்டையாக இருந்தால், உங்கள் கைகளை அவர்களின் கழுத்தை சுற்றி போட்டு, மெதுவாக கட்டிப்பிடிக்கவும். நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை இது எடுத்துக்காட்டும்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

3. ஆய்வு செய்ய தயக்கம் காட்டாதீர்கள். எதிர்ப்பார்ப்புகளை எது பூர்த்தி செய்யும் என்பதையும் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எது தோதாக இருக்கும் என்பதையும் கண்டு பிடியுங்கள்.

4. சந்தோஷமாக இருங்கள்! ஒரு வேளை சரியாக அமையவில்லை என்றால், ஒரு சிரிப்பு சிரித்து கொண்டு, இன்னும் கொஞ்சம் பயிற்சி எடுத்து பழகுங்கள்.

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

உங்கள் உயரத்தில் இல்லாதவரை முத்தமிட மற்ற பயனுள்ள டிப்ஸ்...

5. நீங்கள் தயாராக உள்ளீர்கள் என்பதை உங்கள் துணைக்கு சூடான முறையில் சொல்ல ஆசைப்பட்டீர்கள் என்றால், அவரிடம் ஒரு ரகசியம் சொல்வதை போல் மெல்ல அருகில் சென்று, அவர் காதருகே "உன்னை முத்தமிட வேண்டும்" என கூறுங்கள்.

6. உங்கள் துணை தான் முதலில் முத்தம் பெற ஆசைப்படுவார் என்ற எண்ணத்தை எப்போதும் மனதில் வைத்துக் கொள்ளுங்கள்.

7. குட்டையாக இருக்கும் உங்கள் துணைக்கு, நீண்ட நேரம் முத்தம் கொடுக்கும் போது கழுத்தை வருட வேண்டும் என்றால், அவர்களின் தலையை சுவற்றின் மீது சாய்த்துக் கொள்ளவும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

How to Kiss Somebody Who Is a Different Height?

If you’re tall, give your shorter partner the preference by standing on lower territory at whatever point conceivable. In case you’re in the early phases of a relationship and/or your partner is reluctant, try to do this subtly.
Story first published: Monday, January 19, 2015, 14:54 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter