இந்திய திருமணத்தை வரையறை செய்யும் சில விஷயங்கள்!!!

By Ashok CR

இந்திய திருமணங்களை விசித்திரமான பல விஷயங்கள் விவரிக்கிறது. உதாரணத்திற்கு சொல்ல வேண்டுமானால் மணப்பெண்ணை தேர்ந்தெடுக்கும் போது சருமத்தின் நிறத்தின் மீது மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. இரண்டாவதாக, பெண்ணை பார்த்துக் கொள்வதற்கு மணமகனுக்கு வங்கியில் அதிக இருப்பும், அதிக சம்பளத்தை கொடுக்கும் வேலையும் இருந்தாக வேண்டும். இவைகளை போன்ற சில விஷயங்கள் தான் இந்திய திருமணங்களை வரையறை செய்கிறது. இதனைப் பற்றி யோசிக்க உட்கார்ந்தால், இவையெல்லாம் உண்மை என்பதும் உங்களுக்கு புரியும்!

எண்ணிலடங்கா மரபுகளையும், சடங்குகளையும் கொண்டுள்ளதால், இந்திய திருமணங்கள் முக்கியமாக கருதப்படுகிறது. ஆனால் இந்திய திருமணங்களை இப்படிப்பட்ட விஷயங்கள் வரையறை செய்துள்ளது என்பது பரந்த மனப்பான்மை உடையவர்களை வருத்தமடைய செய்யும்.

பல இந்தியர்கள் நன்றாக படித்து நல்ல சம்பளத்தில் இருந்தாலும் கூட, கூசாமல் அதிக வரதட்சணையை எதிர்ப்பார்க்கிறார்கள். இந்திய திருமணங்களில் இது ஒரு அதிமுக்கிய அங்கமாக மாறியுள்ளது. இருப்பினும் இந்திய திருமணங்களை வரையறை செய்திருக்கும் இவ்வகையான விஷயங்களை அறவே ஒழிக்க சில ஜோடிகள் விரும்பவும் செய்கின்றனர்.

இந்திய திருமணங்களை முழுமையாக்கும் சில விஷயங்களைப் பற்றி தான் இப்போது பார்க்க போகிறோம். தொடர்ந்து படியுங்கள்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வரதட்சணை அமைப்பு

வரதட்சணை அமைப்பு

இந்திய திருமணங்களை வரையறை செய்யும் விஷயங்களில் ஒன்று தான் வரதட்சணை அமைப்பு. ஒவ்வொரு இந்திய திருமணத்திலும் மாப்பிள்ளை வீட்டார் பெண் வீட்டாரிடம் வரதட்சணையாக சில தொகையை வாங்கி கொண்டு தான் இருக்கின்றனர்.

நீங்கள் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்

நீங்கள் வெள்ளை நிறமாக இருக்க வேண்டும்

நீங்கள் வெள்ளை நிறத்துடன் இல்லாத பெண் என்றால், நீங்கள் உடனடியாக நிராகரிக்கப்படுவீர்கள். வெள்ளை நிறத்துடன் இருக்கும் பெண்ணை தேர்ந்தெடுப்பது முக்கியம் என்றாலும், இந்திய சமுதாயத்தில் மாப்பிள்ளையின் நிறத்தை யாரும் பெரிதாக கருதவதில்லை.

நகைகள்

நகைகள்

திருமண ஏற்பாடுகளில் நகைகள் ஒரு பகுதியாக இருக்க வேண்டும். மணப்பெண்ணின் மீது எடை கணக்கில் நகைகள் இல்லாமல் அந்த திருமணம் முழுமை அடையாது.

வங்கியில் அதிக இருப்பு

வங்கியில் அதிக இருப்பு

தினசரி வாழ்க்கையை பிரச்சனை இல்லாமல் நகர்த்த மணமகனின் வங்கி கணக்கில் அதிக இருப்பு இருக்க வேண்டும். திருமணத்திற்கு ஒப்பு கொள்வதற்கு முன்னாள், மாப்பிள்ளையின் குடும்பம் நல்ல நிதி நிலைமையுடன் இருக்கிறார்களா என்பதை பெண்ணின் குடும்பம் பார்ப்பார்கள். இருப்பினும் பையனின் நன்னடத்தை எல்லாம் அதற்கு பிறகு தான்.

கண்ணீருடன் பிறந்த வீட்டை விட்டு பிரிதல்

கண்ணீருடன் பிறந்த வீட்டை விட்டு பிரிதல்

புகுந்த வீட்டிற்கு செல்ல பிறந்த வீட்டை விட்டு பிரியும் போது, கண்ணீர் விடவில்லை என்றால் கெட்ட சகுனமாக பார்க்கப்படுகிறது. திருமண நாளின் போது கண்ணீர் சிந்தவில்லை என்றால், துரதிர்ஷ்ட திருமணமாக அது பார்க்கப்படுகிறது.

குழந்தைகள்

குழந்தைகள்

இந்திய திருமணங்களை வரையறை செய்யும் மற்றொரு விஷயம் தான் குழந்தைகள். குழந்தை பெறுவதை நீண்ட நாள் தள்ளிப் போட்டால், அதை வீட்டு பெரியவர்கள் விரும்ப மாட்டார்கள்.

தலைக்கு மேல் கூரை

தலைக்கு மேல் கூரை

சந்தோஷத்தை விட, உங்கள் தலையின் மேல் ஒரு கூரை இருப்பது இந்த திருமணங்களின் மற்றொரு வரையறையாகும். திருமணத்தின் போது மணப்பெண்ணை நல்லபடியாக வைத்து வாழ மணமகனுக்கு சொந்தமாக மாளிகை இருக்க வேண்டும்.

குடும்பமே பெருசு

குடும்பமே பெருசு

உங்களுக்கு குடும்பமே பெரிசு; நாங்கள் உங்கள் குடும்பத்தைப் பற்றி பேசவில்லை. உங்கள் கணவனின் குடும்பத்தைப் பற்றி கூறுகிறோம். அதுவே உங்களுக்கு முதன்மையான முன்னுரிமை.

ஜாதி மதம்

ஜாதி மதம்

இந்தியாவில் ஜாதி அமைப்புகள் மிகவும் கடினமானதாக இருக்கிறது. பெண்ணோ அல்லது பையனோ ஒரே ஜாதியை சேர்ந்தவர்கள் இல்லையென்றாலே பிரச்சனை தான். திருமணம் நீடித்து நிலைத்திட நீங்கள் இருவரும் ஒரே ஜாதியை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். இந்திய திருமணங்களை வரையறை செய்யும் பல விஷயங்களில் இதுவும் ஒன்று.

கனவுலக முதலிரவு

கனவுலக முதலிரவு

ஒவ்வொரு இந்திய திருமணத்திலும் முதல் இரவை அனைத்து இரவுகளை விட தூய்மையானதாக பார்க்கின்றனர். ஆனால் உண்மை என்னவோ இதற்கு அப்பாற்பட்டவையாக தான் உள்ளது.

பொருந்தும் ஜாதகங்கள்

பொருந்தும் ஜாதகங்கள்

இந்திய திருமணங்களை வரையறை செய்யும் விஷயங்களில் ஜாதக பொருத்தமும் ஒன்றாகும். பையனுக்கும் பெண்ணுக்கும் பல ஒற்றுமைகள் இருந்தாலும், திருமண வாழ்க்கை வெற்றிகரமாக முடிய அவர்களின் ஜாதகமும் கண்டிப்பாக பொருந்தியிருக்க வேண்டும்.

காதல் திருமணங்கள்

காதல் திருமணங்கள்

காதல் திருமணம் என்றாலே இந்திய சமுதாயத்தில் அச்சத்தை ஏற்படுத்துகிற ஒன்றாகும். இந்திய குடும்பங்களை பொறுத்த வரையில் என்னவாக இருந்தாலும் சரி, வீட்டில் பார்த்து நடத்தப்படும் திருமணமே நிலைக்கும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion