Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
பெண்களே... உங்களை மனைவியாக்க விரும்புபவர் வெளிப்படுத்தும் 12 சூப்பர் அறிகுறிகள்!!
தன்னைக் காதலிக்கும் பையன் உண்மையிலேயே தன்னைக் கல்யாணம் செய்து கொள்வானா என்று ஏராளமான பெண்கள் கவலைப்பட்டுக் கொண்டு தான் இருக்கிறார்கள். அந்தப் பெண்கள் நினைப்பது போலவே, சில ஆண்கள் ஆசை தீரக் காதலித்துப் பழகி விட்டு, கல்யாணம் என்று வரும் போது 'குட் பை' சொல்லிவிட்டுப் போய் விடுவார்கள்.
பெண்களே... உங்களின் காதலர்களின் சில நடவடிக்கைகளைக் கொண்டே அவர் உங்களைக் கைகழுவி விடுபவரா அல்லது உங்களைத் திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையைத் தொடங்கத் தயாராக உள்ளாரா என்பதை எளிதாகத் தெரிந்து கொள்ளலாம். பல ஆண்கள் தங்களுடைய உணர்ச்சிகளை அவ்வளவாக வெளிக்காட்ட மாட்டார்கள். நீங்கள் தான் அவர்கள் மனத்திற்குள் ஊடுருவி அவர்கள் எண்ணங்களைத் தெரிந்து கொள்ள வேண்டும்.
உங்கள் காதலர் உங்களை உண்மையிலேயே திருமணம் செய்து கொள்வார் என்பதை அவர் வெளிப்படுத்தும் இந்த அறிகுறிகளை வைத்தே நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள்.

நீயே என் எதிர்காலம்...
நீங்கள்தான் தன்னுடைய எதிர்காலம் என்று உறுதியாக நம்புவார். கனவிலேயே குடும்பம் நடத்தி, குழந்தை பெற்று, அதற்குப் பேரும் வைத்திருப்பார். அவர் போலவே நீங்களும் நினைத்தால் இருவரும் இல்லறத்தில் இணையலாம்.

ஒன்றோடு ஒன்றாக...
நீங்கள் பயன்படுத்தும் பொருட்களையே மிகவும் உரிமையோடு அவரும் உபயோகிக்க விரும்புவார். உணவருந்தி முடித்து நீங்கள் உங்கள் கைத்துண்டால் வாயைத் துடைத்த பின், அதை உங்களிடமிருந்து வாங்கி தன் வாயைத் துடைத்துக் கொள்வார்.

குழந்தைகள் பற்றி...
உங்களிடம் அடிக்கடி குழந்தைகள் பற்றியும், அவர்கள் செய்யும் சேட்டைகள் பற்றியும் அதிகம் பேசுவார். அப்படியென்றால், அவர் உங்களை அதிகம் விரும்புகிறார் என்று அர்த்தமாகும்.

வீடு வாங்கும் படலம்...
அவர் தன் (உங்களுடனான) வாழ்க்கையைத் தொடங்கும் விதமாக, திருமணத்திற்கு முன்பே வீடு ஒன்றை வாங்குவதற்கான அனைத்து முயற்சிகளிலும் ஈடுபடுவார். அவரை நம்பி நீங்கள் கழுத்தை நீட்டலாம்.

உங்கள் பெற்றோர்களுடன்...
அவர் உங்களை அதிகம் விரும்பும்போது, உங்களுடைய பெற்றோர்களுடன் மிகவும் உரிமையுடனும், அன்புடனும் பழகத் தொடங்குவார். அவர்கள் அன்பையும் நட்பையும் பெற்று விட்டால் நீங்களும் கிடைத்து விடுவீர்கள் என்று முழுமையாக நம்புவார்.

உங்கள் குடும்பம் பற்றி...
உங்கள் பெற்றோர்களுடன் பழகுவது மட்டுமன்றி, உங்கள் குடும்பம் குறித்தும் குடும்பத்தில் உள்ளவர்கள் குறித்தும் அதிக அக்கறையுடன் உங்களிடம் கேட்பார். இது உங்கள் எதிர்காலத்துக்கு மிகவும் நல்லது.

உங்களுக்காக மியூச்சுவல் ஃபண்ட்...
தன்னுடைய சேமிப்பை மியூச்சுவல் ஃபண்டுகளில் முதலீடு செய்யும்போது, அவர் உங்களுடைய பெயரை நாமினியாக சேர்த்துக் கொள்வார்.

திருமண நாள்...
சில காதலர்கள் தங்கள் காதலியைத் திருமணம் செய்து கொள்ளாமல் இழுத்தடித்துக் கொண்டே செல்வார்கள். ஆனால் உங்களவர் அப்படியிருக்க மாட்டார். "எப்போது கல்யாணம் செய்து கொள்ளலாம்?" என்று அடிக்கடி உங்களிடம் கேட்டு அனத்திக் கொண்டே இருப்பார்.

இன்பத்திலும் துன்பத்திலும்...
உங்களுடைய எந்தச் சூழ்நிலையிலும் அவர் உங்களுடனேயே இருப்பார். உங்களுக்கு ஏற்படும் துன்பங்களைக் கண்டு பதறுவார்; கதறுவார். உங்களுடைய இன்பத்திலும் முழுமையாகப் பங்கெடுத்துக் கொள்வார்.

இரண்டும் ஒன்றோடு...
தன்னுடைய ஒவ்வொரு பொருளையும் நீங்களும் பயன்படுத்திக் கொள்ள அவர் உங்களுக்கு உரிமை கொடுப்பார். இந்த விஷயத்தில் அவர் கொஞ்சம் சீரியஸாகவே நடந்து கொள்வார்.

தன் குடும்ப விசேஷங்களில்...
தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் சின்னச் சின்ன விசேஷங்களில் கூட நீங்களும் வந்து கலந்து கொள்ள வேண்டுமென்று உங்களவர் விரும்புவார். 'இவள்தான் என் வருங்கால மனைவி' என்று மறைமுகமாக அனைவரிடமும் அவர் உணர்த்துவார்.

அறிமுகப் படலம்...
தன்னுடைய குடும்பத்தினர், உறவினர், நண்பர்கள் என்று அனைவரையும் தேடித் தேடி உங்களை அவர்களிடம் அறிமுகப்படுத்தி வைப்பார்.



Click it and Unblock the Notifications
