காதலிக்கும் பெண்களை தலைத்தெறிக்க ஓடச் செய்யும் ஆண்களின் குணங்கள்!!!

By: Ashok CR
Subscribe to Boldsky

ஆண்களை ஓட வைக்க பெண்கள் மட்டுமே தவறுகள் செய்வதில்லை. ஆண்கள் கூட செய்யக்கூடாத சில விஷயங்களை செய்து பெண்களை ஓட வைக்கிறார்கள். அதில் சில தவறுகள் ஆண்கள் செய்யும் வழக்கமான தவறுகளே. அந்த தவறுகளை ஆண்கள் செய்யும் போது பெண்கள் தலை தெறிக்க ஓடியே விடுகின்றனர். நீங்கள் சென்றுள்ள சில டேட்டிங் நன்றாக அமைந்திருந்தாலும், உங்கள் காதலி உங்களை விட்டு போய் விடுவார்கள். அப்படியானால் உங்கள் உறவில் நீங்கள் ஏதோ தவறை இழைத்து வருகிறீர்கள்.

உறவில் இப்படி ஆண்கள் செய்யும் தவறுகள், வேண்டுமென்றே செய்யும் தவறுகள் கிடையாது. உங்கள் குணத்திலும், உடல் மொழியிலும் உள்ள ஏதோ சில விஷயங்கள் பெண்களை பயமுறுத்தும். ஆண்களின் தேவைகளுக்கும், பெண்களின் தேவைகளுக்கும் சற்று வேறுபாடு உள்ளது. அதனால் தான் இவ்வகை தொடர்பில் குளறுபடி ஏற்படுகிறது. பெண்களை விரட்டியடிக்கும் ஆண்களின் சில தவறுகளைப் பற்றி இப்போது பார்க்கலாமா?

வசதிக்காக மிகவும் நெருங்குவது

Mistakes Men Make To Drive Women Away

அளவுக்கு அதிகமாக உரிமை எடுத்துக் கொண்டு டேட்டிங்கில் ஈடுபடும் போது, அளவுக்கு அதிகமான நெருக்கத்தோடு இருந்தீர்கள் என்றால் அவர்களுக்கு கோபம் ஏற்படலாம். அதிலும் சீக்கிரத்திலேயே அளவுக்கு அதிகமான உடல் நெருக்கத்தை வலியுறுத்தினீர்கள் என்றால் உங்களை தப்பானவராக அவர் நினைக்கக்கூடும். இதேப்போல் அசிங்கமாக பேசுவதை அனைத்து பெண்களும் செக்ஸியாக எடுத்துக் கொள்ள மாட்டார்கள். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்ளும் நேரத்தில் இவ்வகை விஷயங்கள் தவறாக புரிந்து கொள்ளச் செய்யும்.

கேவலமாக நடந்து கொள்வது

பில் கட்ட உங்கள் காதலியிடம் அவர் பங்கிற்கான பணத்தை கேட்கிறீர்களா? ஒரு பைசா கூட விடாமல் சரியாக தொகையை பிரித்துக் கொள்கிறீர்களா? அப்படியானால் உங்கள் அழைப்பிற்கு அவர் கண்டிப்பாக மீண்டும் செவி சாய்க்க மாட்டார். பெருந்தன்மையான குணத்தை கொண்ட ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள். உங்கள் காதலியை பில் கட்ட சொல்வது மிகவும் கேவலமான ஒன்றாகும்; குறிப்பாக முதல் சில டேட்டிங்கில்.

ரொம்ப பொசஸிவ்வாக இருப்பது

அனைத்து பெண்களுக்கும் அவர்களின் காதலன் சற்று பொசஸிவ் குணத்துடன் இருப்பது பிடிக்கும். ஆனால் பாதுகாக்கும் குணமும், பொசஸிவ் குணமும் ஒன்றல்ல என்பதை தயவு செய்து புரிந்து கொள்ளுங்கள். எதிர்த்த மேஜையில் உள்ளவன் வெறித்து பார்க்கிறான் என்ற காரணத்திற்காக அவளை இழுத்து மூட சொன்னால், கண்டிப்பாக அவள் கடுப்பாகத் தான் செய்வாள்.

வெகு சீக்கிரமாக அளவுக்கு அதிகம்

Mistakes Men Make To Drive Women Away

அவள் நல்ல பெண் என்றால், இரண்டாம் டேட்டிங்கிலேயே அவரை படுக்கைக்கு அழைக்காதீர்கள். அதற்கு அவள் கண்டிப்பாக இணங்க மாட்டாள். அவளிடம் இருந்து செக்ஸை மட்டும் தான் எதிர்ப்பார்க்கிறீர்கள் என்று அவள் நினைப்பாள். அவள் சுலபமாக வளைந்து கொடுக்க கூடியவள் என நீங்கள் நினைத்துள்ளீர்களே என காயப்பட்டும் போவாள். அப்புறம் என்ன, உங்களை விட்டு ஓடியே விடுவாள்.

English summary

Mistakes Men Make To Drive Women Away

Some mistakes that men make drive away women early in relationships. If you don't want to make these relationship mistakes that most men make, then read on...
Please Wait while comments are loading...
Subscribe Newsletter