Latest Updates
-
World Asthma Day 2026: ஆஸ்துமா குணமாக இந்த கசாயத்தை 30 நாட்கள் குடிங்க..- கூறும் ஆயுர்வேத டாக்டர்! -
அமேசான் சம்மர் சேல்: உங்கள் வீட்டில் செல்வத்தை அள்ளித்தரும் வாஸ்து ரகசியங்கள் இதோ! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: மே 17 முதல் அடுத்த 5 மாதம் இந்த 3 ராசிக்கு பொற்காலமா இருக்கப்போகுது.. -
இந்த கஞ்சியை தினமும் 1 கப் குடிங்க.. உடலில் உள்ள கெட்ட நீர் வெளியேறி, எடை மடமடன்னு குறையும்.. -
இன்றைய ராசிபலன் 05 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு பணமழை கொட்டும் நாளாக இருக்குமாம் -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு சொத்தும், வெற்றியும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 4 ராசிக்காரங்க வாழ்க்கையில் புயலடிக்கப் போகுதாம் -
ஆந்திரா ஸ்டைல் பாலக் கீரை தொக்கு ரெசிபி - செஞ்சு பாருங்க, டிபன், சாதத்துக்கு செமையா இருக்கும் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா.. ஒருவாட்டி இந்த தொக்கு செய்யுங்க.. இட்லி, தோசை, சாதத்துக்கு செமயா இருக்கும்.. -
ஐபிஎல் மோகத்தால் உறவில் விரிசலா? கிரிக்கெட் ஜுரத்திலும் குடும்ப அமைதியை காப்பது எப்படி?
ஆண்களிடம் பெண்கள் மிகவும் எதிர்பார்க்கும் 8 விஷயங்கள்!!!
'பொதுவாக சொல்லும் போது பெண்கள் ஆபத்தானவர்கள். குறிப்பிட்டு சொன்னால் அவர்கள் மிகவும் மோசமானவர்கள்' என்று யாரோ ஒருவர் சொல்லியிருக்கிறார்.
எனினும், பெண்களுக்கு என்ன தேவை என்ற கேள்விக்கு உலகெங்கிலும் தேடிப்பார்த்தும் பதில் கிடைக்கவில்லை. மேலும், இழக்காத ஒரு விஷயத்திற்காக ஆண்கள் நம்பிக்கையை விட்டு விடத் தேவையில்லை. பெண்கள் மிகவும் விரும்பக்கூடிய குணங்கள் நம்மிடமும் இருக்கத் தான் செய்கின்றன.
ஆண்கள் பெண்களிடம் விரும்பும் 8 விந்தையான விஷயங்கள்!!!
இந்த நீண்ட பட்டியலில் உள்ள சில முக்கியமான விஷயங்களைப் பற்றி நீங்கள் தெரிந்து கொண்டால், உங்களுடைய மனதில் உள்ள காயத்தை ஆற்றுப்படுத்த முடியும். இவற்றில் உங்களுக்கு ஏற்ற விஷயத்தைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு, அவளை மகிழ்ச்சிப்படுத்துங்கள்.

சூப்பர் மேன்
பெண்கள் பாதுகாப்பாக இருப்பதை மிகவும் விரும்புவார்கள். எனவே, மோசமான விஷயங்கள் மற்றும் இன்னல்களிலில் இருந்து அவளை காக்கும் வல்லமை உங்களிடம் இருப்பதை நிரூபித்துக் காட்டுங்கள்! பிரச்சனைகள் தலையெடுக்கும் போது துணையாக வந்து நிற்கும் ஆண்களை பெண்கள் பெரிதும் வரவேற்பார்கள். எனவே, இந்த வகையில் உங்களிடம் வரும் எந்தவொரு வாய்ப்பையும் சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் தவறாதீர்கள்.

நறுமணம்
பெண்களின் பர்ஃப்யூம்களால் ஆண்கள் ஈர்க்கப்படுவது போன்று காட்டப்படும் விளம்பரங்களைக் கண்டு ஆண்களுக்கு போரடித்துப் போயிருக்கும். ஆனால், இதனை உங்களுடைய இடத்திலிருந்து கவனித்துப் பாருங்கள். உங்களுக்கு ஏற்ற டியோவை தேர்வு செய்து பயன்படுத்துங்கள். அதுவும் முதல் முறை டேட்டிங் செல்லும் போது, சோதனை முயற்சியாக டியோவை பயன்படுத்தாமல், முன்பே தேர்வு செய்து பயன்படுத்துங்கள். உங்களுடைய சருமத்தில் எந்த டியோ நல்ல நறுமணத்தைத் தருகிறது என்று அறிந்து கொள்ளுங்கள். நீங்கள் டியோடரண்டை உங்களுடைய உடலில் ஸ்ப்ரே செய்யும் போது, அதன் மணமும், உங்களுடைய உடல் மணமும் சேர்ந்து தான் முழுமையான நறுமணம் வெளிவரும். எனவே புத்திசாலித்தனமாக தேர்வு செய்யுங்கள்.

ஆச்சரியப்படுத்துங்கள்
ஒரு சாக்லெட்டோ, காதல் கவிதையோ, பரிசுப் பொருளோ அல்லது ஒரு பூங்கொத்து என ஏதாவதொன்றை திடீரென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் கொடுப்பதால் பெண்கள் மகிழ்ச்சியடைவார்கள். இவற்றை ஆண்களிடமிருந்து பெண்கள் பெரிதும் எதிர்பார்க்கிறார்கள். இந்த வழிமுறையில் நீங்கள் 100-க்கு 100 எடுப்பது நிச்சயம்!

வெளிப்படையாக இருத்தல்
நேர்மையாக இருப்பது இன்றளவும் கடைப்பிடிக்க வேண்டிய நல்ல கொள்கையாகும். நீண்ட நாட்களுக்கு நல்ல வகையில் உறவை நீடித்து வைத்திருக்க விரும்பினால், அவளிடம் பொய் சொல்ல வேண்டாம். ஆரம்பத்தில் இது உங்களுக்கு சில தடைகளை கொடுத்தாலும், காலப்போக்கில் அன்பை உறுதிப்படுத்தும்.

சரியான உடலமைப்பு
6-பேக் அல்லது 8-பேக் உடற்கட்டு இருப்பதைக் கண்டு மயங்காத பெண்கள் யாரும் இருப்பதில்லை. இவ்வாறு கட்டுமஸ்தாக பராமரிக்கப்பட்டு வரும் உடலமைப்பைக் கொண்ட ஆண்களை பெண்கள் பெரிதும் விரும்புவர்கள். எனவே, தொடர்ந்து உடற்பயிற்சி செய்வதை ஒரு வழக்கமாகக் கொண்டு, உங்களை மேம்படுத்திக் கொள்ளுங்கள்.

டிரெஸ்ஸிங்
மோசமாக உடையணிந்திருக்கும் ஆண் மகனை எந்த பெண்ணும் ஏறெடுத்தும் பார்க்க மாட்டாள். அவ்வப்போது வரும் ஸ்டைல்களை பயன்படுத்திப் பாருங்கள், ஸ்டைலாக பேசுங்கள், உங்களுக்கு எது சரியாக வருகிறது என்பதை கவனியுங்கள். ஆள் பாதி, ஆடை பாதி என்பதை முழுமையாக உணருங்கள்.

ஹேர் ஸ்டைல்
அழகான ஹேர் ஸ்டைலை கவனிக்காத பெண்கள் இருப்பதில்லை. சிறப்பான ஹேர் ஸ்டைல் ஒட்டுமொத்தமாகவே ஒரு மாறுபட்ட தோற்றத்தை உங்களுக்கு அளிக்கும். இன்னும் எதற்காக காத்திருக்கிறீர்கள்? பலவகையில் குவிந்து கிடக்கும் ஹேர் ஸ்டைல்களில், கண்களுக்கு குளிர்ச்சியாக இருக்கும் பாணியை தேர்ந்தெடுத்து தயாராகிக் கொள்ளுங்கள்.

கைகள் செய்யும் ஜாலம்
அவள் மிகவும் பசியாக இருக்கும் போது, நகரத்திலுள்ள மிகவும் சிறப்பான உணவு விடுதிக்கு அழைத்துச் செல்லலாம் அல்லது அவளுக்குப் பிடித்த உணவை நீங்கள் சமைத்துக் கொடுப்பதையும் கூட முயற்சி செய்யலாம். இந்த செயல்பாடுகள் எளிதில் மறக்க முடியாத நினைவுகளாக இருக்கும்.
'ஆண்களுடைய மனதை விட பெண்களுடைய மனது எப்பொழுதும் சுத்தமாக இருக்கும், ஏனெனில் அவள் அதை அடிக்கடி மாற்றிக் கொள்வாள்' என்றொரு ஜோக் உள்ளது. எனினும், பெண்களின் மனதில் மேற்கண்ட விஷயங்கள் நிலையாக இருப்பதை யாரும் மறுக்கப் போவதில்லை.



Click it and Unblock the Notifications