Latest Updates
-
உலகமே 2026-ல் இருக்கும்போது இந்த நாடு மட்டும் 2018-ல்தான் இருக்காம் - எந்த நாடு? ஏன் தெரியுமா? -
ராகு-சந்திர சேர்க்கை: இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க ஜாக்கிரதையா இருக்கணும்! -
அரிசி உப்புமா - 15 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
செப்டம்பர் 23, 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களின் குடும்பத்தில் பல பிரச்சினைகள் வரப்போகுதாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 01 வரை இந்த 3 ராசிக்காரங்க கவனமா இருக்கணும்! உங்க ராசி இதுல இருக்கா? -
சூரியனின் நட்சத்திர மாற்றத்தால் சகல நன்மைகளையும் பெறப்போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
2 கேரட்டும், தயிரும் இருந்தா இந்த ஆந்திரா ஸ்டைல் கேரட் பச்சடியை செஞ்சு பாருங்க - வேற லெவல் சைடிஷா இருக்கும் -
3 கேரட் இருந்தா.. இப்படி கீ ரோஸ்ட் ட்ரை பண்ணுங்க.. சப்பாத்திக்கு அல்டிமேட்டா இருக்கும்.. -
இந்தியாவின் முதல் போட்டோகிராபர் யார்? அவர் எந்த ராஜாவிடம் வேலை செய்தார் தெரியுமா? -
வீட்டில் கொசுக்கள் வரக்கூடாதா? அவற்றை விரட்ட இந்த செடிகளை வீட்டுல வாங்கி வையுங்க..
பெண்களை மதி மயங்கச் செய்யும் ஆண்களின் 7 குண நலன்கள்!!!
காலம் போகிற போக்கில் சில ஆண்களிடமிருந்து பெண்கள் எப்படித் தங்களைக் காத்துக் கொள்ள வேண்டும் என்பதைத் தெரிந்து கொள்வது மிகவும் அவசியம். ஆனாலும், வயது மற்றும் ஹார்மோன் செய்யும் சேட்டைகளினால் பெண்கள் ஏமாந்து போய் தெருவில் நிற்பதை நாள்தோறும் நாம் செய்திகளில் பார்த்துக் கொண்டு தான் இருக்கிறோம்.
இந்த நிலையில், பெண்களைக் கவர்ந்து இழுப்பதற்காகவே ஆண்கள் பல்வேறு விதங்களில் முயற்சித்துக் கொண்டிருக்கின்றனர். ஆனாலும் அவர்களுடைய தோற்றமோ அல்லது சிக்ஸ்-பேக்கோ கை கொடுப்பதில்லை. எந்த ஆண் தன்னை மிகவும் நேசிக்கிறானோ, எவன் ஒருவன் தன்னிடம் மிகவும் பொசஸிவ்வாக இருக்கிறானோ அந்த ஆணிடம் தான் ஒரு பெண் (அல்லது பல பெண்கள்?) விழுகிறாள்.
முதல் பார்வையில் ஆண்கள் பெண்களிடம் கவனிக்கும் 7 விஷயங்கள்!!!
இதுப்போன்ற குண நலன்கள் தான் ஆண்களுக்குப் பெரும்பாலும் வெற்றியைத் தேடிக் கொடுக்கின்றன. அவற்றைப் பற்றி இப்போது நாம் பார்க்கலாம்.

புத்திசாலித்தனம்
ஆண்களின் புத்திசாலித்தனத்தை எப்போதுமே பெண்கள் மதிப்பார்கள்; அதில் மதி மயங்கவும் செய்வார்கள். இருவரும் நன்றாகப் பேசிக் கொண்டிருக்கும் போது, தன்னுடைய கருத்துக்கு அந்தப் பெண்ணின் பதில் என்ன என்பதை புத்திசாலியான ஆண் உன்னிப்பாகக் கவனிப்பான். அவளை சுதந்திரமாகப் பேச விட்டுக் கேட்பான். அவ்வப்போது நகைச்சுவையாகவும் பேசி, அவளைச் சிரிக்க வைப்பான். அவனுடன் இருப்பதால் அந்தப் பெண்ணுக்கு எப்போதுமே போரடிக்காது.

நம்பிக்கை
இத்தகைய ஆண் சுய நம்பிக்கைக்கு மட்டுமல்ல, அந்தப் பெண்ணின் நம்பிக்கைக்கும் பாத்திரமாக இருப்பான். தான் எடுக்கும் முடிவில் உறுதியாக இருப்பான். அது அவளுக்கு மிகவும் பிடிக்கும். அந்தப் பெண்ணுடன் வேலைப் பார்க்கும் மற்ற ஆண்களிடமும், அந்தப் பெண்ணின் வேறு ஆண் நண்பர்களிடமும் பொறாமைப்பட மாட்டான். இந்த ஆண்களிடமும் பெண்கள் நிச்சயம் மயங்கிப் போவார்கள்.

படைப்பாற்றல்
இதுபோன்ற ஆண்கள் சுயமாக இயங்குபவர்கள். அந்த நிமிடத்தில் வாழ்பவர்கள். கதை, கவிதை, பேச்சு, பெயிண்ட்டிங் என்று தன்னுடைய படைப்பாற்றலை பெண்ணிடம் வெளிப்படுத்துவார்கள். அந்தக் காலத்து பாலசந்தர் படங்கள் போலத் தான் இருக்கும். ஆனாலும், இந்தப் படைப்பாற்றல் மிக்க ஆண்களின் 'வலை'யில் பெண் மீன்கள் சிக்குவது நடக்கத்தான் செய்கிறது.

கவர்ச்சி
பெண்கள் எந்த அளவுக்கு ஆண்களைக் கவர்ந்து இழுக்க முயற்சிப்பார்களோ, அதே அளவுக்கு சில ஆண்களும் தங்கள் கவர்ச்சியால் பெண்களை விழ வைப்பார்கள். அவன் வேறு ஊரிலிருந்து, அல்லது வேறு மாநிலத்திலிருந்து, ஏன் வேறு நாட்டிலிருந்து வந்திருப்பான். ஆனாலும், ஒரு பெண்ணைக் கவர தனக்கென ஒரு தனி பாணியை அந்த ஆண் வைத்திருப்பான். அதில் சிறிது நகைச்சுவையும் கலந்திருப்பது அவனுடைய ப்ளஸ்!

அன்பு, பரிவு, மரியாதை
இவன் தன் பெண் துணையிடம் அன்பு கலந்த மரியாதையுடன் எப்போதும் நடந்து கொள்வான். அவளுக்காக கார் கதவைத் திறந்து விடுவான்; அவள் உட்காருவதற்காக சேரை இழுத்துக் கொடுப்பான்; காபி போட்டுக் கொடுப்பான்; கால் அமுக்கி விடுவான். இப்படி காலை எழுந்தது முதல், இரவு தூங்கப் போகும் வரை அந்தப் பெண்ணிடம் அவன் காட்டும் அன்பும், பரிவும், மரியாதையும் அளவிட முடியாதவை ஆகும். சில பெண்களுக்கு இவற்றைப் புரிந்து கொள்ள சிறிது காலம் எடுக்கும். ஆனாலும் ஒரு நாள் கண்டிப்பாகப் புரிந்து கொள்வாள்.

'ஸ்பெஷல்' காதல்
இந்த ஆண் 'க்ளாசிக்' காதலை நம்புபவன். அவளுக்காக அவன் பூக்களையும், சாக்லெட்டுகளையும் (நம்மூர் மல்லி & அல்வா?) வாங்கி வராத நாட்களே இருக்காது. அடிக்கடி அவளைக் கூப்பிட்டு 'ஐ லவ் யூ' சொல்வான். கண்ணோடு கண் நோக்கி, தன் காதலை அவளுக்குப் புரிய வைப்பான். அனைத்து விதமான காதல் அசைவுகளையும், அவளுக்காக செய்து காண்பிப்பான். ஒரு பெண்ணுக்கு இவ்வளவு போதாதா?

சாகசம், வீரம்
காற்று போகிற திசையில் இவன் போவான். இந்த ஆணிடம் வீரமும், சாகசமும் நிறைந்திருக்கும். அருமையாக பைக் ஓட்டியே பெண்களை மயக்குவான். திடீரென்று அவளைக் கூட்டிக் கொண்டு மலையேற்றத்திற்குக் கிளம்பி விடுவான். பின் விளைவுகளைப் பற்றி சிறிதும் பயமிருக்காது. இதுப்போன்ற ஆண்களுக்கும் சில பெண்கள் மயங்கத்தான் செய்கிறார்கள். அதே துணிச்சலைக் கொண்டு வர அவர்களும் முயற்சிப்பார்கள்.
இதுப்போன்று சுவாரஸ்யமான வேறு தகவல்களைப் பெற எங்கள் ஃபேஸ்புக் பக்கத்தை லைக் செய்து தொடர்பில் இருங்கள்...



Click it and Unblock the Notifications
