ஆண்கள் உடலுறவு கொள்வதற்கு 5 முக்கிய காரணங்கள்!!!

By: Karthikeyan Manickam
Subscribe to Boldsky

ஒரு பெண் ஒரு ஆணுடன் உடலுறவு வைத்துக் கொள்வதற்கான காரணங்களை ஆராய்ந்தால், அந்த ஆராய்ச்சியைக் கொண்டு ஒரு பி.எச்டி. டாக்டர் பட்டமே வாங்கி விடலாம்.

ஆனால், ஒரு ஆண் ஒரு பெண்ணுடன் ஏன் உடலுறவு வைத்துக் கொள்கிறான் என்று எப்போதாவது யோசித்திருப்போமா? பெரும்பாலான ஆண்களுக்கு, காதல் என்பது வேறு, செக்ஸ் என்பது வேறு. இரண்டையும் ஒன்றாகப் போட்டுக் குழப்பிக் கொள்ள மாட்டார்கள்.

இருந்தாலும் ஒரு பெண்ணுடன் எதற்காக ஒரு ஆண் செக்ஸ் வைத்துக் கொள்கிறான் என்பதற்கு 5 காரணங்கள் சொல்லப்படுகின்றன. இந்த செக்ஸ் என்ற வார்த்தை நம்மை எப்படியெல்லாம் யோசிக்க வைக்கிறது என்று பாருங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உடல் சுகத்திற்கு...

உடல் சுகத்திற்கு...

பெரும்பாலான ஆண்கள் தங்கள் உடல் சுகத்திற்காக மட்டுமே பெண்களுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.

மன அழுத்தம் போக்க...

மன அழுத்தம் போக்க...

இன்னும் சில ஆண்கள் பல்வேறு காரணங்களால் மன அழுத்தத்திற்கு ஆட்பட்டிருக்கலாம். அதற்கு ஒரே தீர்வு செக்ஸ் மட்டுமே. ஒரு பெண்ணுடன் உடலுறவு கொண்டால், மன அழுத்தத்திலிருந்து அவர்கள் விடுபடுகிறார்கள்.

நான் ஒரு ஆம்பளடா...

நான் ஒரு ஆம்பளடா...

தான் ஒரு ஆண் என்பதை நிரூபிப்பதற்கு ஒரே ஆயுதம் செக்ஸ் மட்டுமே என்று நினைத்துக் கொண்டிருக்கும் ஆண்களும், இந்த உலகத்தில் இருக்கத் தான் செய்கிறார்கள்.

ஈகோ...

ஈகோ...

பல ஆண்கள் தங்கள் ஈகோவைக் காத்துக் கொள்வதற்காகவே செக்ஸில் ஈடுபடுகிறார்கள் என்பதும் உண்மை தான். அந்த ஈகோ மூலம் பெண்களைத் திருப்திப்படுத்த முடியும் என்றும் அவர்கள் நம்புகிறார்கள்.

உடல் ஆரோக்கியத்திற்கு...

உடல் ஆரோக்கியத்திற்கு...

செக்ஸ் போன்ற ஒரு உடற்பயிற்சி இந்த உலகத்திலேயே கிடையாது என்றும் சில ஆண்கள் நினைக்கிறார்கள். உடலுறவு வைத்துக் கொண்ட மறுநாள் அவர்கள் சுறுசுறுப்பாக இருக்க முடிவதாகவும் அவர்கள் மகிழ்கிறார்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

5 Reasons Why Men Have Intercourse

We never wonder about the reasons why men have intercourse. We thing there is only one reason why men have sex. But actually, there are many different reasons why men have intercourse.
Please Wait while comments are loading...
Subscribe Newsletter