Latest Updates
-
நெல்லை ஸ்டைல் முருங்கைக்காய் புளிக்குழம்பு ரெசிபி - செஞ்சு பாருங்க, அட்டகாசமாக இருக்கும் -
சுக்கிரனால் விபரீத ராஜயோகத்தை பெறப்போவது இந்த 3 ராசிக்காரங்க தான்.. உங்க ராசி இதுல இருக்கா? -
மாரடைப்பு பற்றிய கட்டுக்கதைகளும், உண்மைகளும்: யாருக்கெல்லாம் மாரடைப்பு வரும் வாய்ப்பு அதிகம் தெரியுமா? -
1 உருளைக்கிழங்கும், 1 கப் தயிரும் இருந்தா.. மதியம் 10 நிமிஷத்துல இந்த சைடுடிஷ் செய்யுங்க.. சாதத்துக்கு அள்ளும் -
டெல்லி-என்சிஆர் புழுதிப் புயல்: வீட்டைப் பாதுகாக்க இந்த 5 வாஸ்து செடிகள் இருந்தா போதும்! -
புதன் மேஷ ராசியில் அஸ்தமனமாவதால் புது சொத்துக்களை வாங்கிக் குவிக்கப்போகும் அதிர்ஷ்டமுள்ள 3 ராசிகள் இவங்கதான் -
Heatwave Alert: கோடையில் உடல் வறண்டு போகாம இருக்கணுமா? அப்ப இதெல்லாம் தினமும் சாப்பிடுங்க.. -
மணி பிளாண்ட் வளர்க்கும் ரகசியம் தெரியுமா? கோடையில் வீட்டை ஜிலுஜிலுவென மாற்றும் இந்த வாஸ்து டிப்ஸ்! -
பாபா வங்கா கணிப்பு படி 2125-ல் ஏலியன்களை சந்திக்கப்போகும் முதல் நாடு எது தெரியுமா? -
மே மாத சூரிய பெயர்ச்சி: இந்த 3 ராசிக்கு தொழில் மற்றும் நிதி நிலையில் நல்ல வளர்ச்சி ஏற்படப்போகுது!
உங்கள் துணை ஃபேஸ்புக்கில் யாரையாவது ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுப்பிடிக்க சில அறிகுறிகள்!!!
நம் வாழ்க்கையில் சோஷியல் மீடியாவின் தாக்கம் மிகவும் முக்கியமானதாக மாறி விட்டது. அதனால் அது எவ்வகையான தாக்கத்தை ஏற்படுத்துகிறது என்பது புரிந்து கொள்ளவும் உணரவும் நாம் தவறவிடுகிறோம். இவ்வகையான பல சோஷியல் நெட்வொர்க் இணையதளங்களால் பல உறவுகள் வீழ்ச்சியடைகிறது.
ஃபேஸ்புக் அல்லது ட்விட்டர் போன்ற தளத்தில் உள்ள நண்பர்கள் என்று வரும் போது சில ஆண்களும், பெண்களும் எந்த ஒரு வரம்பையும் நிர்ணயித்து கொள்வதில்லை. பிற ஆண்கள் அல்லது பெண்களின் படங்களை உங்கள் காதலர் இந்த தளங்களில் போடுவதை நீங்கள் கவனிக்கலாம். இது சற்று விந்தையாக கூட இருக்கலாம்.
'உங்கள் உறவு முடிந்தது' என்பதை சுட்டிக்காட்டும் 7 அறிகுறிகள்!!!
ஃபேஸ்புக்கில் நடக்கும் இவ்வகையான ஏமாற்று வேலைகள் உங்கள் கண்களை திறக்கும் கருவியாக விளங்க வேண்டும். சில நேரங்களில் ஃபேஸ்புக்கில் நடக்கும் ஏமாற்று வேலைகளை அவ்வளவு சுலபத்தில் கண்டுபிடிக்க முடிவதில்லை. அதற்கு காரணம் தங்களின் துணையிடம் மாட்டிக் கொள்ளக்கூடாத உத்தேசத்துடன் அவர்கள் செயல்படுவதால் தான்.
எனவே உங்கள் காதலன்/காதலி ஃபேஸ்புக்கில் யாரையாவது ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுப்பிடிக்க சில அறிகுறிகள் உள்ளது. அதனைப் பற்றி பார்க்கலாமா?
ஃபேஸ்புக்கில் ஏமாற்றுவதற்கான சில அறிகுறிகளை பற்றி பார்க்கலாமா?

உங்கள் துணை எப்போதும் FB பயன்படுத்துகிறாரா?
உங்கள் துணை எப்போது பார்த்தாலும் ஃபேஸ்புக்கே கதியென இருக்கிறாரா? அப்படியானால் ஏதோ வில்லங்கம் இருக்கிறது. இதுவே ஃபேஸ்புக் மூலமாக ஏமாற்றுவதற்கான முதல் அறிகுறியாகும்.

எப்போது பார்த்தாலும் FB பற்றியே பேசுகிறாரா?
ஃபேஸ்புக் தவிர அவர் மனதில் எதுவும் ஓடாமல், எப்போது பார்த்தாலும் அதனை பற்றியே பேசிக்கொண்டிருக்கிறாரா? அப்படியானால் அவர் உங்களை கண்டிப்பாக ஏமாற்றிக் கொண்டிருக்கிறார். அதனை நிவர்த்தி செய்ய முயற்சி செய்யுங்கள்.

FB சாட்டிங் முக்கியத்துவத்தை பெற்றுள்ளதா?
உங்களை விட FB சாட்டிங் தான் அவர் வாழ்க்கையில் முக்கியத்துவத்தை பெற்றுள்ளதா? உங்களுடன் செலவழிக்கும் நேரத்தை விட ஃபேஸ்புக்கில் அதிகமாக செலவிட விரும்புகிறாரா? அப்படியானால் அது ஏமாற்று வேலையின் அறிகுறியாகும்.

தன் படங்களை FB-யில் மாற்றிக் கொண்டே இருக்கிறாரா?
உங்கள் மனைவி எப்போது பார்த்தாலும் தன் படங்களை FB-யில் மாற்றிக் கொண்டே இருக்கிறாரா? ஃபேஸ்புக் மூலமாக ஏமாற்றுவதற்கான பொதுவான அறிகுறிகளில் இதுவும் ஒன்றாகும்.

இரவு நீண்ட நேரம் FB சாட்டிங் செய்வது
உங்கள் துணையின் கைப்பேசி இரவு நீண்ட நேரம் பிஸியாக உள்ளதா? அவரின் அழைப்பிற்காக நீங்கள் காத்துக் கொண்டே இருக்கிறீர்களா? இதுவும் ஃபேஸ்புக் மூலமாக ஏமாற்றுவதற்கான அறிகுறிகளில் ஒன்றாகும்.

அவர் கைப்பேசியை தொட உங்களை அனுமதிப்பதில்லை
உங்கள் துணையின் கைப்பேசியை நீங்கள் எடுக்க முயற்சித்தால், அவர் கண்களில் டென்ஷனை காண முடிகிறதா? ஆம் எனில், அவர் உங்களிடம் மறைக்கும் ஏதோ ஒரு விஷயம் உள்ளது.

பல FB கணக்குகள்
ஒருவர் பல FB கணக்குகளை உருவாக்கி வைத்திருப்பது இயல்பான ஒரு விஷயம் அல்ல. கண்டிப்பாக அது உங்களை ஏமாற்றும் வேலையே. ஃபேஸ்புக் பயன்படுத்தி உங்களை உங்கள் துணை ஏமாற்றுகிறாரா என்பதை கண்டுபிடிப்பதற்கான வழிகளில் இதுவும் ஒன்று.

ஒன்றுமே செய்யாதிருத்தல்
அவரின் டைம்லைனில் அவர் எதுவுமே செய்யாமல் இருந்தாலும் கூட அவர் உங்களை ஏமாற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது. அப்படியானால் அவர் உங்களை ஒதுக்கி வைத்துள்ளார் என பொருள் தரும். இதுவும் கூட இயல்பானது அல்ல.

உங்கள் துணையின் பலதரப்பட்ட படங்கள்
உங்கள் துணை வேறு சில ஆண்கள் அல்லது பெண்களுடன் நெருக்கமான பல படங்களை FB-யில் காண்கிறீர்களா? இதுவும் கூட நீங்கள் ஏமாறுவதற்கான அறிகுறியே.

அவர் நண்பர்கள் மறைத்து வைக்கப்பட்டிருப்பார்கள்
உங்கள் துணையின் நண்பர்கள் பட்டியல் மறைத்து வைக்கப்பட்டிருக்கிறதா? அவரின் உண்மையான நண்பர்கள் யார் என உங்களுக்கு தெரிவதில்லையா? அப்படியானால் நீங்கள் ஏமாறுவதற்கான அறிகுறிகளில் இதுவும் ஒன்றே.



Click it and Unblock the Notifications