Latest Updates
-
1/4 கிலோ மட்டன் வாங்குனா.. இப்படி மசாலா அரைச்சு தண்ணி குழம்பு வையுங்க.. ஊத்தி ஊத்தி குடிப்பாங்க.. -
செப்டம்பர் 27, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு ஆபத்துகள் துரத்தும் நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (27 September 2026- 26 October 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டமா இருக்கும்! -
4 முட்டை இருந்தா.. இந்த பக்குவத்துல மசாலா செய்யுங்க.. சப்பாத்திக்கு செமயா இருக்கும்.. -
நீங்க இந்த தேதிகளில் பிறந்தவங்களா? அப்ப 40 வயசுக்கு அப்புறம் உங்களுக்கு குபேர யோகம் தான்! -
கேரட்டை ஒருடைம் இப்படி செய்யுங்க.. பிடிக்காதவங்க கூட கேட்டு வாங்கி சாப்பிடுவாங்க.. -
தொப்பை குறையணுமா? அப்ப ஊட்டச்சத்து நிபுணர் சொல்ற இந்த பானத்தை மதிய உணவுக்கு முன் குடிங்க.. -
சனி நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபரில் மகரம் உள்ளிட்ட 3 ராசிக்கு கடின உழைப்புக்கான பலன் கிடைக்கப்போகுது! -
ரவா பன் தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
செப்டம்பர் 26, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டும் நாளாக இருக்குமாம்
உங்க கேர்ள் ஃபிரண்ட் ஏன் அவங்க 'செல்'லைத் தொட விட மாட்டேங்குறாங்கன்னு தெரியுமா?
பெண்களின் ஹேண்ட் பேக்கை நாம் தோண்டித் துருவிக் கொண்டிருந்தால் அவர்களுக்குப் பயங்கரக் கோபம் வரும். அதில் அவர்கள் 1008 சமாச்சாரங்களை வைத்திருப்பார்கள். அந்தப் பிரைவஸியை அடுத்தவர்கள் தெரிந்து கொள்வதை விரும்ப மாட்டார்கள்.
அதுபோல் தான், மொபைல் போனும்! ஒரு பெண் தன் ஆண் துணையிடம் பொசஸ்ஸிவ்வாக இருந்த காலம் எல்லாம் மலை ஏறிவிட்டது. அதுவும் கடந்த 15 ஆண்டுகளில் ஏற்பட்டுள்ள மொபைல் போன் புரட்சியைத் தொடர்ந்து பெரும்பாலும் பெண்களின் முதல் துணை மொபைல் போன்தான்!
ஹேண்ட் பேக்கை விட பல மடங்கு விஷயங்களை மொபைல் போனில் வைத்திருப்பார்கள் பெண்கள்! அதில் தான் அதிகப் பிரைவஸியை அவர்கள் மெய்ண்டெய்ன் பண்ணி வைத்திருப்பார்கள். அதை வேறு யார் தொட்டாலும் பெண்களுக்குப் பயங்கரக் கோபம் வந்துவிடும். எனவே, உங்கள் கேர்ள் ஃபிரண்டின் மொபைலை தேவையில்லாமல் நோண்டி, வாங்கிக் கட்டிக் கொள்ளாதீர்கள்!
இப்போது பெண்களின் மொபைல் போனை ஏன் தொடக்கூடாது என்பதற்கான 10 காரணங்களைப் பார்க்கலாம்!

கண்காணிப்பது போல் உணர்வார்கள்
உங்கள் கேர்ள் ஃபிரண்டின் மொபைலை நீங்கள் நோண்டுவதை அவர்கள் பார்த்து விட்டால், தேவையில்லாமல் அவர்கள் வருத்தப்படுவதோடு, பிரைவஸி போய்விட்டதைப் போலும், தன்னை யாரோ கண்காணித்துக் கொண்டிருப்பதாகவும் அவர்கள் நினைப்பார்கள். மேலும் அவர்களிடம் உங்கள் மேலுள்ள நம்பிக்கையும் போய்விடும். பின் உங்களை மதிக்கவே மாட்டார்கள்.

மர்மம்!
தங்கள் போனில் விஷயம் ஒன்றுமே இல்லாவிட்டாலும், அதை ஒரு மர்மமான பொருளைப் போன்றே பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருப்பார்கள் பெண்கள். நீங்கள் எவ்வளவு தான் சிரத்தை எடுத்துக் கொண்டாலும், அவர்களுடைய மொபைல் போனைத் தொடுவதை மட்டும் அவர்கள் அனுமதிக்கவே மாட்டார்கள்.

பெஸ்ட் ஃபிரண்ட்
நீங்கள் எவ்வளவு தான் உங்கள் கேர்ள் ஃபிரண்டுடன் நெருக்கமாக இருந்தாலும், அவர்களுக்கென்று சில பெஸ்ட் ஃபிரண்டுகள் இருப்பார்கள். அவர்கள் எப்போதுமே வாட்ஸ் அப்பில் எவ்வளவோ விஷயங்களைப் பரிமாறிக் கொள்வார்கள். ஆனால், அவற்றையெல்லாம் நீங்கள் அறிவதை அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

வெகுளியான சாட்ஸ்!
தம்முடைய நண்பர்களிடமோ, குடும்பத்தினரிடமோ பெண்கள் படு குழந்தைத்தனமாகவும், வெகுளித்தனமாகவும் சாட் செய்திருப்பார்கள். அவற்றையெல்லாம் பார்த்து நீங்கள் கேலி, கிண்டல் செய்வீர்கள் என்ற வெட்கம் காரணமாகவும் அவர்களுடைய மொபைலை நீங்கள் தொடுவதை அவர்கள் அனுமதிக்க மாட்டார்கள்.

குண்டக்க மண்டக்க போட்டோக்கள்!
தன் பாய் ஃபிரண்டான உங்களிடம் கூடக் காட்ட முடியாத சில அந்தரங்கமான போட்டோக்களை பெண்கள் தங்கள் மொபைலில் வைத்திருப்பார்கள். அவை அவர்களுக்கு மிகவும் பிடித்தமான போட்டோவாக இருக்கும். அழித்து விடவும் மனமில்லாமல் வைத்திருப்பார்கள். பிறகு எப்படி தன் மொபைலைத் தொட உங்களை அனுமதிப்பார்கள்!?

திருட்டு பயம்!
தம் தொழில் அல்லது அலுவலகம் தொடர்பான பல விஷயங்களைப் பெண்கள் தம் மொபைலில் சேகரித்து வைத்திருப்பார்கள். அவை தொலைந்து போனால் அல்லது திருட்டுப் போனால ஏராளமான நஷ்டம் ஏற்படும் சூழல் இருக்கும் நிலையில், அதைத் தொட அவர்கள் உங்களை அனுமதிக்கவே மாட்டார்கள். இது தொடர்பான ஒரு மோசமான முன் அனுபவம் கூட இதற்குக் காரணமாக இருக்கலாம்.

தவறாகப் பயன்படுத்தலாம்!
இந்த உலகத்தில் யாரையுமே அவ்வளவு எளிதாக நம்பிவிட முடியாது. சிலர் கூடவே இருந்து குழி பறித்து வைத்திருப்பார்கள். இவற்றையெல்லாம் மனதில் வைத்திருக்கும் பெண்கள், தன் மொபைல் போனைத் தவறாகப் பயன்படுத்தி விடக் கூடாது என்பதற்காக அதைத் தொட யாரையும் அனுமதிக்க மாட்டார்கள்.

வங்கிக் கணக்கு விவரங்கள்!
என்னதான் நெருக்கமாக இருந்தாலும், பெரும்பாலான பெண்கள் பண விஷயத்தில் தன் பாய் ஃபிரண்டிடம் எச்சரிக்கையாகத் தான் இருப்பார்கள். அவர்கள் தங்கள் போனில் வங்கிக் கணக்கு தொடர்பான விஷயங்களைப் பதிவு செய்து வைத்திருக்கும் நிலையில், அந்த போனை யாரும் டச் பண்ணக் கூட முடியாது!

நீங்க ஒரு டுபாக்கூர்!
தன் பாய் ஃபிரண்டு ஒரு சரியான டுபாக்கூட் பேர்வழி என்று பல பெண்கள் ஒரு மதிப்பிட்டு வைத்திருப்பார்கள். பல நேரங்களில் அதை உண்மையென்றும் நீங்கள் நிரூபித்திருப்பீர்கள். இப்படிப்பட்ட ஒரு சூழ்நிலையில் அவர்களுடைய மொபைலை நீங்கள் தொட முடியுமா?

எதிரியுடன் தொடர்பு!
அறிந்தோ அறியாமலோ உங்கள் எதிரி அந்தப் பெண்ணுக்கு நல்ல நண்பனாய் அல்லது தோழியாய் இருக்கலாம். அவர்களுடன் தினமும் நிறைய சாட் செய்து கொண்டும் இருப்பார்கள். இது உங்களுக்குத் தெரிந்தால் தேவையில்லாத கஷ்டம் தானே! அந்த நல்ல எண்ணத்திற்காகவே தன் மொபைலைத் தொட அவள் உங்களை அனுமதிக்க மாட்டாள்!



Click it and Unblock the Notifications
