Latest Updates
-
2027-ல் ஏழரை சனியில் இருந்து விடுபடும் ராசிகளும்.. அதில் சிக்கி தவிக்கப்போகும் ராசிகளும்.. -
தங்கத்தை விட 2 லட்சம் மடங்கு விலையுயர்ந்த உலோகம் - இதன் ஒரு கிராமை வைத்து 200 கிலோ தங்கம் வாங்கிறலாம் -
2 கையளவு சின்ன வெங்காயம் இருந்தா.. இப்படி சட்னி செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க. -
செப்டம்பர் 22, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப்போறாங்களாம் -
சந்திர பெயர்ச்சியால் இன்று முதல் அடுத்த 2 நாட்கள் இந்த 3 ராசிக்காரங்க கொஞ்சம் கவனமா இருக்கணும்.. -
அக்டோபரில் நடக்கப்போகும் குருபெயர்ச்சியால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
ஹைதராபாத் குஸ்கா ரெசிபி - லன்ச் பாக்ஸ்-க்கு இதை செஞ்சு பாருங்க - எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
மழை நேரத்துல 1/2 கிலோ சிக்கனை வாங்கி இப்படி கிரேவி செய்யுங்க.. சப்பாத்திக்கு சும்மா தாறுமாறா இருக்கும்.. -
இந்த 4 ராசி ஆண்களும் சரி, பெண்களும் சரி மோசமான காதலர்களாக இருப்பார்களாம் - உங்க லவ்வர் ராசி இதுல இருக்கா? -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: இன்று முதல் இந்த 4 ராசிக்காரர்களின் பேன்க் பேலன்ஸ் அதிகரிக்கும்! உங்க ராசி என்ன?
எப்போதும் நெஞ்சோடு.. என்றென்றும் விலகாமல்.. உங்களவர் உங்களுடனேயே இருக்கனுமா?
ஒரு உறவை நிலைத்து நீடிக்க வைப்பது என்பது தான் ஒரு உறவில் உள்ள மிகவும் கஷ்டமான விஷயமாகும். ஒரு உறவு நிலைத்து நீடிக்க வேண்டுமென்றால், அதற்கு பல காரணிகள் உள்ளது. உங்கள் வாழ்க்கையில் கஷ்டங்கள் வந்தாலும் அல்லது தடங்கல்கள் பல வந்தாலும் சரி, காதல் மட்டும் வாடாமல் பார்த்துக் கொள்ள வேண்டும்.
ஒரு உறவு சந்தோஷமானதாகவும், வெற்றிகரமானதாகவும் அமைய பெண்கள் என்ன செய்ய வேண்டும் என்பதில் தான் இப்போது கவனம் செலுத்த போகிறோம். உங்கள் காதலன் அல்லது கணவன் உங்களை எப்போதும் காதலிப்பதற்கான சில வழிகளை தான் இப்போது பார்க்க போகிறோம். ஒரு உறவை நீடித்து நிலைக்க வைத்திட இவைகள் எல்லாம் நிரூபிக்கப்பட்ட வழிகளாக உள்ளது. இவைகளை பின்பற்றி உங்களவரை எப்போதும் சந்தோஷமாகவும், குதூகலமாகவும் வைத்திருங்கள். மேலும் இந்த வழிகளை பின்பற்ற வேண்டியது ஒவ்வொரு பெண்ணுக்கும் மிகவும் அவசியமாகும்.
உங்க பாய் ஃப்ரெண்ட் இப்படியெல்லாம் நடந்துக்குறாரா? நீங்க ரொம்ப லக்கிதான்!!
உங்கள் உறவில் உங்கள் காதலன் அல்லது கணவன் சந்தோஷம் மற்றும் திருப்தியை அடைவதற்கான அந்த அருமையான 10 வழிகளை தெரிந்து கொள்வோமா? இதோ!

ஆதரவுடனும் வளைந்து கொடுக்கும் குணத்துடனும் இருங்கள்
ஒரு பெண்ணாக, உங்கள் கணவன் அல்லது காதலனை ஆதரிப்பது, உங்கள் உறவை சந்தோஷமாக வைத்திருப்பதற்கான அதிமுக்கிய பங்காகும். எப்போதும் அவரின் தொழில் ரீதியான முன்னேற்றம் அல்லது மற்ற பிற செயல்களுக்கு ஆதரவாக இருங்கள். திடமான பெண்மணிக்கு தேவையான அதிமுக்கிய குணங்களில் இதுவும் ஒன்றாகும்.

அவரை பாராட்டுங்கள்
அவரை அடிக்கடி பாராட்டுங்கள். ஒருவரை ஒருவர் பாராட்டி கொள்வது ஆரோக்கியமான உறவிற்கு மிகவும் முக்கியமாகும்.

அவருடைய அந்தரங்கதிற்கு கொஞ்சம் இடம் கொடுங்கள்
சில நேரங்களில் நமக்கென சற்று தனிமை தேவைப்படும். அப்படி அவருக்கு தேவைப்படும் நேரங்களில், அதற்கு நீங்கள் தடங்கலாக இல்லாமல் பார்த்துக் கொள்ளுங்கள். தனிமையில் நேரம் கழிப்பதாலும் கூட, நாளடைவில் உங்கள் உறவின் பந்தம் திடமாகும்.

சில நேரம் அவரை ஜெயிக்க விடுங்கள்
அனைத்தையும் விட இது குதூகலத்தை அளிக்கும். சில நேரங்களில் உங்கள் கணவன் அல்லது காதலனை வெல்ல விடுங்கள். அவருடைய சிரிப்பும் தான் கொஞ்சம் நேரம் நீடிக்கட்டுமே. நீங்கள் வேண்டுமென்றே தான் விட்டுக் கொடுத்தீர்கள் என்று அவருக்கு அதிகம் தெரியப் போவதில்லை.

பொசஸிவ் குணத்துடன் இருங்கள் - ஆனால் சற்று குறைவாக...
பொசஸிவ் குணத்துடன் இருப்பது முக்கியம். இதனால் அவருக்கு நீங்கள் அளிக்கும் முக்கியத்துவத்தையும், அவர் மீதான உங்கள் காதலையும் அவர் உணர்வார். ஆனால் அது அளவுக்கு மீறி போக கூடாது. அப்படி போகையில், தேவையில்லாத குழப்பங்களையும், பிரச்சனைகளையும் ஏற்படுத்தும்.

அவருடைய நட்பு மற்றும் உறவு வட்டாரத்தை மதியுங்கள்
அவருடைய நட்பு மற்றும் உறவு வட்டாரத்தை மதித்தால் நம்பிக்கையை அதிகரித்து, உங்கள் இருவருக்கும் இடையே உள்ள பந்தம் மேம்படும். கூடுதலாக, அவருடைய நட்பு மற்றும் உறவு வட்டாரத்தை மதிக்கும் உங்கள் நடவடிக்கைகளால், அவரும் அதையே பின்பற்றுவார் அல்லவா?

வீட்டு பொறுப்பை எடுத்துக் கொள்ளுங்கள்
பொறுப்புகளை பிரித்து கொள்வது முக்கியமானது தான். ஆனால் அதே நேரத்தில், ஒரு பெண்ணாக, வீட்டில் சில விஷயங்களில் நீங்கள் பொறுப்பை எடுத்துக் கொள்ள வேண்டும். உதாரணத்திற்கு, அவருடைய தொழில் மற்றும் குடும்ப வாழ்க்கையை சமநிலைப்படுத்த நீங்கள் உதவுவதால், அவருடனான உங்களின் பந்தம் வலுவடையும்.

படுக்கையறையில் அவருடைய கற்பனைகளுக்கு வழி கொடுங்கள்
உங்கள் கணவனை சந்தோஷமாகவும், திருப்தியாகவும் வைத்திருக்க உதவும் முடிவெடுக்க கூடிய காரணிகளில் இதுவும் ஒன்றாகும். உணர்ச்சிமிக்க ஒரு பெண்மணியின் குணம் என்னவென்று தெரியுமா? உங்கள் கணவனின் படுக்கையறை ஆசைகளுக்கு இசைந்து கொடுப்பது.

அவர் விருப்பத்திற்கு முடிவெடுக்க அனுமதியுங்கள்
அவர் விருப்பத்திற்கு முடிவெடுக்க அனுமதியுங்கள். இதனால் தன் முக்கியத்துவத்தை உணரும் அவருக்கு தன் பொறுப்புகளும் நினைவில் வரும். ஒரு பெண்ணாக, தன்னுடைய பொறுப்புகளை நன்கு அறிந்து வைத்திருக்கும் ஆண்களால் அவர்கள் நன்மையே உண்டாகும்.

தவறு செய்யும் போது மன்னிப்பு கேளுங்கள்
நீங்கள் தவறு செய்யும் போதெல்லாம் மன்னிப்பு கேளுங்கள். அப்படி செய்யாமல் விட்டு விட்டால், அது தேவையில்லாத மனஸ்தாபங்களைத் தான் வளரச் செய்யும்.



Click it and Unblock the Notifications
