Latest Updates
-
5 லட்ச ரூபாய்க்கு விற்கப்படும் உலகின் காஸ்ட்லியான ஐஸ்கிரீம் - அப்படி இதுல என்னதான் ஸ்பெஷல் தெரியுமா? -
1 கப் பச்சரிசி இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை செய்யுங்க.. பசங்க கேட்டு விரும்பி சாப்பிடுவாங்க.. -
World Heart Day 2026: 1 சிகரெட் அடிச்சா 20 நிமிஷத்துல இதயத்துல என்ன நடக்கும்? - விளக்கும் இதய நிபுணர்! -
4 பிரெட் இருந்தா இந்த மாதிரி சுவையான புலாவ் செஞ்சு பாருங்க - வீட்ல எல்லோரும் விரும்பி சாப்பிடுவாங்க -
சூரியனின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் 11 வரை இந்த 5 ராசிக்கு பணமும், வெற்றியும் குவியும்! -
லாயருக்கும், அட்வகேட்டுக்கும் உள்ள வித்தியாசம் என்ன தெரியுமா? அப்ப ரெண்டும் ஒன்னு இல்லையா? ஷாக் ஆகாதீங்க -
அவலும், முட்டையும் இருந்தா.. காலையில் இந்த டிபனை ட்ரை பண்ணி பாருங்க.. -
செப்டம்பர் 29, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்ட செலவுகள் தேடிவரப்போகுதாம் -
புதன் துலாம் ராசியில் வக்ர பெயர்ச்சியை தொடங்கப்போவதால் இந்த 3 ராசிகளின் கனவுகள் பலிக்கப்போகுதாம் -
1 கப் சின்ன வெங்காயம் இருந்தா இந்த மாதிரி ஆந்திரா ஸ்டைலில் தொக்கு செஞ்சு பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும்
உங்களுடன் பணி புரிபவரை நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை வெளிப்படுத்தும் சில அறிகுறிகள்!!
காதல் உங்கள் அறிவுக்கும் தெரியாமல் மலரக் கூடியது. அது என்றுமே ஒரு திட்டமிட்ட உறவாக இருந்ததில்லை. யாரும், எவரும் எப்பொழது அல்லது யாரை காதலிக்க வேண்டும் என்று முடிவு செய்வதில்லை. இன்றைய காலகட்டங்களில், ஒரே அலுவலகத்தில் பணிபுரிவர்களில் ஒத்த மனதுடையவர்கள் சந்தித்துக் கொள்ளவும், காதலில் விழவும் பல்வேறு வாய்ப்புகள் உள்ளன. பலரும் தங்கள் வீட்டை விட அதிகமான நேரம் காதல் வயப்பட்டிருக்க பயன்படுத்தும் இடங்களில் ஒன்றாகவே பணியிடங்கள் இருப்பது தவிர்க்க முடியாத விஷயமாக உள்ளது. பெரும்பாலானவர்களுக்கு 2-வது வீடாகவே இருக்கும் பணியிடங்களில், ஒன்றாக வேலை செய்து கொண்டே வாழ்நாளின் உன்னத உறவிற்கு அடித்தளமிடுவதை ஆச்சரியம் என்றும் சொல்ல முடியாது.
இதை பாஸிட்டிவ் என்று எடுத்துக் கொண்டால், உங்களுடன் பணி புரிபவருடன் நீங்கள் காதல் வயப்பட்டிருப்பீர்கள். அது தானாகவே நடக்கும். நீங்கள் இவ்வாறு காதல் வயப்பட்டிருப்பதை, அவர்/அவள் உங்களுக்கு அருகே வரும் போது உங்கள் இதயத் துடிப்பு அதிகரிப்பதைக் கொண்டு உணர்ந்திட முடியும். மீண்டும் நாம் விஷயத்திற்கு வருவோம், இந்த சூழலில் தனிப்பட்ட ஈர்ப்பு மற்றும் ஆர்வம் ஆகியவை நீங்கள் உடனடியாக அவரிடம் கேட்கவோ அல்லது வெளியே அழைத்துச் செல்லவோ மிகவும் உதவியாக இருக்கும் என்பதை மறக்க வேண்டாம். நீங்களிருவரும் நெருங்கிப் பணி புரியும் வேளைகளில் ஒருவர் மீது மற்றொருவருக்கு ஈர்ப்பு ஏற்படுவது இயற்கையான உணர்வு தான். இவ்வாறு காதல் அரும்புவதை உணர்த்தும் சில செயல்களை இங்கே உங்களுக்கு தெரியப்படுத்துகிறோம்.

எந்நேரமும் அவளை/அவரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருத்தல்
உங்களுடன் பணி புரிபவருடன் காதல் கொண்டிருந்தால் நீங்கள் அவரைப் பற்றியே யோசித்துக் கொண்டிரப்பீர்கள் என்பதை சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமென்பதில்லை. காதல் வயப்பட்டவர்கள் தங்களுடைய காதலரைப் பற்றியே யோசித்துக் கொண்டிருப்பார்கள். அவர் தான் உங்களுடைய மனதை எப்பொழுதும் ஆக்கிரமித்துக் கொண்டிருப்பார் - கனவுகள், கற்பனைகள் என எல்லாவற்றிலும். இந்நேரங்களில் உங்களுடன் பணி புரியும் பாசத்திற்குரியவரை உங்களால் நினைக்கமால் இருக்க முடிவதென்பது கடினமாக இருக்கும்.

தொடர்பில் இருந்தல்
உங்களுடன் பணி புரிபவருடன் அலுவலக முடிந்த பின்னரும் மற்றும் வார விடுமுறை நாட்களிலும் கூட தொடர்பில் இருக்க நினைப்பது அவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்பதை உணர்த்தும் முக்கியமான அறிகுறியாகும். குறுந்தகவல்கள், செல்போன் கடலை மற்றும் சமூக வலைத்தளங்களில் சாட் செய்தல் போன்ற ஏதாவதொரு வழிமுறையில் நீங்கள் அவருடன் தொடர்பில் இருந்து வருவீர்கள்.

சிறு சிறு விஷயங்களையும் நினைவில் கொள்ளுதல்
அலுவலகத்தில் காதல் என்று வரும் போது, அவரைப் பற்றிய சின்னச் சின்ன விஷயங்களையும் கூட நீங்கள் நினைவுபடுத்தி வைத்திருப்பதை மற்றுமொரு காதல் அறிகுறியாக சொல்லலாம்

பரிசுகள் வாங்குதல்
உங்களுடன் பணி புரிபவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கியிருந்தால் அவருடைய பிறந்த நாளுக்கு பரிசுகள் வாங்கிக் கொடுப்பீர்கள். பிறந்த நாள் வாழ்த்து அட்டைகள் வாங்குதல், கேக் அல்லது ஏதாவதொரு பரிசு என்று சில வழிகளில் அவருடைய பிறந்த நாளைக் கொண்டாட வழி கண்டுபிடிப்பீர்கள்.

பணிகளை முடிக்க உதவுதல்
உடன் பணி புரிபவரை விரும்பும் போது, அலுவலகத்தில் அவருடைய பணிகளை முடித்துக் கொடுக்க உதவி செய்வீர்கள். மேலும் உதவி என்பதற்கு மேலும் சில வழிகாட்டுதல்களையும் செய்து கொடுப்பீர்கள்.

பொறாமை
உங்களவருடன் மட்டுமே மென்மையாக நடந்து கொள்வதும், மற்றவர்களை வேறு விதமான நடத்துவதும் கூட காதலின் அறிகுறி தான். மேலும், அவள்/அவர் வேறு யாருடனும் பேசினாலோ, பழகினாலோ உங்களுக்கு பொறாமை ஆறாக ஊற்றெடுக்கும்.

தகவல்களைத் தோண்டியெடுத்தல்
அவளுடைய அல்லது அவருடைய வாழ்க்கையைப் பற்றி தெரிந்து கொள்ள நீங்கள் மிகவும் ஆர்வமாக இருப்பீர்கள் மற்றும் அது பற்றிய தகவல்களை கண்டறிய உங்களால் முடிந்த வரையிலுமான முயற்சிகளையும், சக பணியாளர்களிடமும் கூட கேட்க முயற்சிப்பீர்கள்.

புன்னகை
நீங்கள் கடுமையான நெருக்கடியில் உள்ள போதும் அல்லது மோசமான நிலைமையில் பணியில் இருக்கும் போதும் கூட, உங்களவரைப் பார்க்கும் வேளைகளில் புன்னகை உங்கள் முகத்தை அலங்கரிக்கும். உங்களவரின் தோற்றம், திறமை மற்றும் குணங்களை கண்டறிந்து அவரை பாராட்டச் செய்வதற்கான வழிமுறைகளையும் நீங்கள் கண்டறிவீர்கள்.
இங்கே தரப்பட்டிருக்கும் வழிமுறைகளில் சில உங்களுடன் பணி புரிபவரை நீங்கள் காதலிக்கத் தொடங்கி விட்டீர்கள் என்பதை உணர்த்தும் அறிகுறிகளாகும்.



Click it and Unblock the Notifications
