Latest Updates
-
அக்டோபர் 22, 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமா இருக்கணும் - ஜாக்கிரதை -
12 ஆண்டுகள் கழித்து சிம்ம ராசியில் உருவாகும் குரு மங்கள யோகம்: இந்த 3 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது! -
நவராத்திரிக்கு பின் உருவாகும் இரட்டை ராஜயோகத்தால் ஜெயிக்கிற குதிரையாக போகும் 3 ராசிகள் யார் தெரியுமா? -
ஐயங்கார் ஸ்டைல் முருங்கைக்காய் ரசம் ரெசிபி - இந்த மாதிரி ரசம் வைச்சு பாருங்க - ஆரோக்கியமா சூப்பரா இருக்கும் -
வாஸ்துப்படி அதிர்ஷ்டத்தை ஈர்க்க இந்த ஓவியங்களை வாங்கி வீட்டுல வையுங்க.. பண கஷ்டமே வராது! -
ஆயுத பூஜைக்கு வாங்குன பொரியும், 2 முட்டையும் இருந்தா.. நைட் இப்படி செஞ்சு சாப்பிடுங்க.. அள்ளும்.. -
Skin Care: இந்த பழங்களை அடிக்கடி சாப்பிடுவது அதிக முகப்பருக்களை ஏற்படுத்துமாம் - கவனமா சாப்பிடுங்க -
இந்த 4 ராசி ஆண்கள் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்று வாழும் நேர்மையான கணவராக இருப்பார்களாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
அக்டோபர் 24-ல் வக்ரமடையும் புதன்: இந்த 5 ராசிக்காரங்க பேச்சால் பல பிரச்சனைகளை சந்திப்பாங்க.. உஷார்.. -
உங்கள் பழைய வெள்ளி நகைகளை செலவே இல்லாமல் வீட்டிலேயே புதிது போல மாற்றும் எளிய வழிகள் - ட்ரை பண்ணி பாருங்க
நீங்க உங்க கணவன் அல்லது மனைவியோட ரொம்ப சந்தோஷமா இருக்க... இந்த விஷயங்கள தெரிஞ்சிகிட்டா போதுமாம்!
ஆரோக்கியமான மகிழ்ச்சியான உறவுக்கான ரகசியத்தை நாம் அனைவரும் தெரிந்துகொள்ள வேண்டும். இருப்பினும், நம்மை சுற்றி பார்க்கும்போது, பெரும்பாலும் தோல்வியுற்ற மற்றும் ஆரோக்கியமற்ற உறவுகளில் இருக்கும் தம்பதிகளைத்தான் நாம் அதிகம் காண்கிறோம். எனவே, தம்பதிகளிடையே பிணைப்பை வலுப்படுத்தும் அத்தியாவசிய விஷயங்களை கண்டறிவது கடினம்.

உலகில் உள்ள எந்த உறவும் எப்போதும் சுமூகமாக இருக்காது. எனவே, தம்பதிகளுக்குள் அடிக்கடி சண்டைகள், வாக்குவாதங்கள் போன்றவை எப்போது வேண்டுமானாலும் எழலாம். இது ஒரு உறவில் அல்லது ஒரு தனிநபராக இருக்கும் போது ஒருவர் உணரும் பாதுகாப்பின்மையிலிருந்து வருகிறது.
வாதங்கள் சிறிய விஷயங்களில் இருந்து பெரிய விஷயங்கள் உட்பட பலவற்றைப் பற்றியதாக இருக்கலாம். இது சண்டையைப் பற்றியது அல்ல, ஆனால் அடிப்படையாக ஒரு கேள்வியை நமக்குள் உருவாக்கலாம். அந்த கேள்வி தம்பதிகள் இருவரும் ஒருவருக்கொருவர் வாழ்க்கையில் எவ்வளவு ஈடுபாடு கொண்டுள்ளனர் என்பதுதான்.
உறவை மகிழ்ச்சியாக வைத்திருப்பதற்கு எந்த விதிப்புத்தகமும் இல்லை. ஆனால் வெளிப்படையாகவும் நேர்மையாகவும் இருப்பது பிரச்சனைகளை உடனடியாக தீர்க்க உதவும். எல்லா உறவுகளும் தனித்துவமானவை என்றாலும், அவற்றை உண்மையிலேயே ஆரோக்கியமாக மாற்றும் சில முக்கிய கூறுகள் உள்ளன. அவற்றை பற்றி இங்கே தெரிந்துகொள்ளுங்கள்.
ஆரோக்கியமான அணுகுமுறை
உங்கள் உறவை ஆரோக்கியமான வழியில் அணுகுவது முக்கியம். உங்கள் துணை பகிர்ந்து கொள்ளும் விஷயங்கள் மற்றும் கவலைகளுக்கு ஏற்ப ஆறுதல் கூறுவது, அவர்கள் தொடர்பு கொள்ளும்போது கவனம் செலுத்துதல் மற்றும் உங்களைத் தொடர்புகொள்வது போன்ற சிறிய விஷயங்களில் கவனம் செலுத்துவதை இது குறிக்கிறது.
தம்பதிகளுக்கு இடையே சண்டை ஏற்பட்டாலும், நெருக்கடியான நேரத்தில் இருந்தாலும், எதிர்மறை உணர்ச்சிகளைக் காட்டுவதற்குப் பதிலாக அதைப் பற்றி வெளிப்படையாக பேசவோ இருக்க முயற்சி செய்யுங்கள். ஆரோக்கியமான உறவுக்கு ஆரோக்கியமான தகவல் தொடர்பு அவசியம்.
பதிலளிப்பதன் மூலம் தொடர்ந்து இணைந்திருத்தல்
ஆரோக்கியமான உறவைப் பேணுவதற்கு இது முக்கியமான கூறுகளில் ஒன்றாகும். எனவே, உங்கள் கணவன் அல்லது மனைவி உங்களிடம் ஏதாவது கேட்கும்போது, அவர்களுக்கு சரியான பதிலளிக்க வேண்டும். உங்கள் துணைக்கு நம்பிக்கையளிக்கும் விதமாக அவர்களின் பிரச்சினைகளும் உங்களுக்கு முக்கியம் என்பதை அவர்களுக்குத் தெரியப்படுத்துங்கள்.
தம்பதிகள் இருவரும் கஷ்டப்படும் நேரத்தில் ஒருவருக்கொருவர் தோள் கொடுக்க வேண்டும். ஏனென்றால் அது உறவை மேலும் வலுவாக்கும். இதன் விளைவாக, உங்கள் உறவு மிகவும் மகிழ்ச்சியானதாக மாறும். உறவில் பிணைப்பை வலுவாக வைத்திருக்க, ஒருவருக்கொருவர் மனம்விட்டு பேசவும், பிரச்சனைகளுக்குத் தீர்வு காணவும் வேண்டும். இது நீங்கள் இருவரும் ஒன்றாக இணைந்திருக்க உதவும்.
உணர்ச்சிப்பூர்வமாக ஈடுபாடுடன் இருத்தல்
ஆரோக்கியமான உறவுகளில், உணர்ச்சிபூர்வமான ஈடுபாடு அவசியம் மற்றும் அன்பு அதன் இன்றியமையாத பகுதியாகும். தம்பதிகள் எவ்வளவு அதிகமாக இணைக்கப்படுகிறார்களோ, அந்த அளவுக்கு அவர்களின் பிணைப்பு வலுவடைகிறது. வாக்குவாதங்கள், சண்டை சச்சரவுகள் ஏற்பட்டாலும், அவற்றை சமாளிப்பதும், பாதுகாப்பின்மைகளைக் கடந்து செல்வதும் எளிதாக இருக்கும்.
உங்கள் உறவில் சிக்கல்கள் இருந்தால், சண்டைகளில் ஈடுபடுவதற்குப் பதிலாக, அடிப்படைப் பிரச்சினைகளைக் கண்டறிந்து அவற்றைத் தீர்க்க முயற்சி செய்யுங்கள். உங்கள் உறவில் முழுமைக்கான இடத்தை நீங்கள் உருவாக்கினால், தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஆழமாக நேசிக்கும் மகிழ்ச்சியான வாழ்க்கையை வாழலாம்.



Click it and Unblock the Notifications



