Latest Updates
-
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம் -
உங்க ராசியை சொல்லுங்க? இந்த வாரம் உங்களுக்கு எப்படி இருக்கும்னு நாங்க சொல்றோம்! -
சிக்கன் வாங்குனா இந்த ஆந்திரா சிக்கன் 555 செஞ்சு பாருங்க - காரசாரமா சூப்பரா இருக்கும்
ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை இந்த அறிகுறிகள் மூலம் தெரிஞ்சிக்கலாமாம்... ட்ரை பண்ணி பாருங்க...!
பொய் சொல்வது என்பது மனிதர்களால் தவிர்க்க முடியாத ஒன்றாக மாறிவிட்டது. சின்ன சின்ன விஷயங்களுக்குக் கூட பொய் சொல்லும் மோசமான வழக்கம் இப்போது அனைவரிடமும் பெருகி வருகிறது. ஆனால் பொய்கள் எப்போதும் நீண்ட காலம் நீடித்து நிற்காது. விஞஞானத்தின் படி 54% பொய்களை அவை சொல்லப்பட்ட உடனேயே கண்டறிந்து விடலாம்.
உங்களிடம் ஒருவர் பொய் சொல்லும் போது அதனை சில அறிகுறிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம், மேலும் ஒருவர் பொய் சொல்லும் போது, உங்கள் உள்ளுணர்வை பயன்படுத்தி அதனை தெரிந்து கொள்ளலாம். உளவியல் நிபுணர்களின் ஆய்வுகளின் படி, பொய் சொல்பவர்களை அவர்களின் செயல்பாடுகள் மற்றும் உடல்மொழிகள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அவை என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம்.

தெளிவின்றி பேசுவது
ஒருவர் பேசும்போது வேண்டுமென்றே சில விஷயங்களை தவிர்ப்பது, சில விஷயங்களை மாற்றி மாற்றி பேசினால் அவர்கள் சில விஷயங்களை மறைக்கிறார்கள் அல்லது பொய் சொல்கிறார்கள் என்று அர்த்தம்.
அதிகம் சிந்தித்து பேசுவது
நீங்கள் எதையாவது சொல்லும்போது அல்லது யாரிடமாவது எதையாவது சொல்லும்போது, நீங்கள் அதை நன்கு அறிந்திருப்பதாலும், அதைச் சரியாகச் சொல்ல விரும்புவதாலும் ஒழுக்கமான முறையில் பேசுவீர்கள். இருப்பினும், பொய் சொல்பவர்களால் அப்படி பேச இயலாது, அவர்கள் எவ்வளவு பயிற்சி செய்திருந்தாலும் பொய் சொல்லும்போது தடைபடாமல் அவர்களால் பேச முடியாது. அதிகமாக சிந்தித்து நிதானமாக பேசுவார்கள்.
குறுக்கு கேள்வி கேட்டால் குழப்பம்
ஒருவர் நம்மிடம் பேசும்போது அவர்கள் பொய் சொல்கிறார்கள் என்ற சந்தேகம் வந்தால், அவர்களிடம் குறுக்குக் கேள்வி கேட்பது சிறந்தது. பொய் சொல்பவர்கள் மாறி மாறி விவரங்களைக் கொடுத்தால், முன்பு சொன்னதில் மாற்றம் இருந்தால், அது பொய் என்று நீங்கள் தெரிந்து கொள்ளலாம். ஏனெனில் பொய் சொல்வது மூளையை மிகவும் பாதிக்கிறது மற்றும் வெகு சிலரே விரைவாக சிந்திக்க முடியும், அதனால் பொய்யை நிலையாக கூற இயலாது.
வார்த்தைகள் மீண்டும் மீண்டும் வருவது
பொய் சொல்லும் போது, மக்கள் தங்கள் வார்த்தைகள் அல்லது சொற்றொடர்களை மீண்டும் மீண்டும் சொல்ல முனைகிறார்கள். உங்களுக்கு எதிரே இருப்பவர்கள் பொய் சொல்கிறார்களா? இல்லையா? என்பதை அவர்கள் ஒரே வார்த்தையை எதனை முறை உபயோக்கிறார்கள் என்பதை வைத்தே தெரிந்து கொள்ளலாம்.
அதிகளவு தகவல்களை கூறுவது
நீங்கள் பொய் சொல்லும்போது, உங்கள் தடங்களை மறைக்க முயற்சிக்கிறீர்கள் மற்றும் தேவையானதை விட அதிகமான தகவல்களை வழங்க முனைகிறீர்கள். அதேபோல்தான் மற்றவர்களும் பொய் கூறுவார்கள். எனவே உங்களிடம் பேசுபவர்கள் நீங்கள் கேட்காமலே அதிக தகவல்களை கூறினால் அவர்கள் உங்களிடம் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம்.
கேட்காமலேயே பேசுவது
பொய் சொல்வது ஒரு கலை, மிகச் சிலரே அதில் தேர்ச்சி பெற்றிருக்கலாம். தேவைப்படும் போது மட்டுமே பொய் சொல்ல வேண்டும். புதிதாக பொய் சொல்பவர்கள் ஒருவரிடம் கேட்காமலேயே போய் பேசுவார்கள். நீங்கள் கேட்காமலேயே ஒருவர் உங்களிடம் வந்து தேவையில்லாத விஷயங்களை பேசினால் அவர்கள் பொய் பேசுபவராக இருக்கலாம்.
பேசும் விதத்தில் மாற்றம்
உளவியல் நிபுணர்களின் கருத்துப்படி, நீங்கள் பொய் சொல்லும்போது அதிக குரல் சுருதியுடன் பேசுவீர்கள் அல்லது நீங்கள் வழக்கமாக பேசுவதுடன் ஒப்பிடும்போது சத்தம் மிகவும் குறைவாக இருக்கும். உங்களிடம் வழக்கமாக பேசுபவர்களின் பேசும் தொனியில் மாற்றங்கள் இருந்தால் அவர்கள் உங்களிடம் பொய் கூறுகிறார்கள் என்று அர்த்தம்.



Click it and Unblock the Notifications
