Latest Updates
-
1 கப் தட்டப்பயறும், 2 உருளைக்கிழங்கும் இருந்தா.. இப்படி கிரேவி செய்யுங்க.. எல்லாத்துக்கும் செமயா இருக்கும்.. -
விந்தணுக்களின் நிறமும், அதற்கான அர்த்தங்களும் - விளக்கும் டாக்டர்! -
மழைக்காலத்தில் மணி பிளாண்ட் செடியை இப்படி வைங்க! பணவரவு குறையாமல் இருக்க வாஸ்து ரகசியங்கள் இதோ -
செவ்வாய் நட்சத்திர பெயர்ச்சியால் ஜூன் 16 முதல் இந்த 4 ராசிக்கு தொட்டதெல்லாம் வெற்றி கிட்டும்! -
ஜவ்வரிசி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 11 ஜூன் 2026: இன்று உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
ஜூன் 11-ல் நிகழும் 3 கிரகங்களின் அரிய சேர்க்கை: இந்த 4 ராசிக்காரர்களுக்கு சகல நன்மைகளும் கிடைக்கப்போகுதாம் -
விவாகரத்து இனி சுலபம்! உச்ச நீதிமன்றத்தின் அதிரடி தீர்ப்பு தம்பதிகளுக்குக் கொடுக்கும் நிம்மதி என்ன? -
தக்காளி இருந்தா இந்த மாதிரி ஹைதராபாத் தக்காளி சட்னி அரைச்சு பாருங்க - இட்லி, தோசைக்கு அட்டகாசமா இருக்கும் -
ஹனிமூனுக்குப் பெற்றோரையும் கூட்டிச் சென்ற கணவர்! விவாகரத்து கோரி நீதிமன்றம் சென்ற மனைவி - என்ன நடந்தது?
திருமண வாழ்க்கையில் மகிழ்ச்சியாக இருக்கணுமா? இதோ இந்த வாஸ்து டிப்ஸை ஃபாலோ பண்ணுங்கள்.. !
பிரச்சனைகள் இல்லாத திருமண வாழ்க்கையே கிடையாது.. எல்லோருடைய திருமண வாழ்க்கையும் பிரச்சனைகள் நிறைந்தது. குடும்பத்தில் கருத்து வேறுபாடுகள் ஏற்படுவது இயற்கையானது.. ஆனால் சில சமயங்களில் வீட்டில் வாஸ்து தோஷம் குடும்ப வாழ்க்கையில் இடையூறுகளை ஏற்படுத்தும். ஆம் அதற்கு சில வாஸ்து குறிப்புகளை நாம் பின்பற்றினால் இந்த தோஷத்தில் இருந்து விடுபடலாம்..
பலருக்கு இது குறித்து தெரியாமல் இருக்கலாம். அதனால் தாம்பத்திய வாழ்க்கையில் ஏற்படும் பிரச்சனைகள் விலகி மகிழ்ச்சியான வாழ்க்கையை நடத்த இந்த சில வாஸ்து குறிப்புகளை பின்பற்றுவது மிகவும் அவசியம். இது சம்பந்தமாக, வாஸ்து நிபுணர்கள் குடும்பத்தில் வலுவான பிணைப்பை கொண்டுவர 10 குறிப்புகளை வழங்கியுள்ளனர். அது என்னென்ன குறிப்புகள் என்பது பற்றி இந்த பதிவில் தெரிந்துக் கொள்ளலாம் வாங்க...

நல்ல பிணைப்பான திருமண உறவுக்கான 10 வாஸ்து குறிப்புகள்
1. கணவன்-மனைவி இடையே பகை இருந்தால் அது அவர்கள் தூங்கும் திசை காரணமாக இருக்கலாம். எனவே திருமணமான தம்பதிகள் தென்கிழக்கு திசை நோக்கிய அறையில் வசிக்கக் கூடாது என்கிறது வாஸ்து சாஸ்திரம். வாஸ்து படி இது திருமண உறவுக்கு தீங்கு விளைவிக்குமாம்..
2. படுக்கையறை நன்கு வெளிச்சமாக இருக்க வேண்டும். சூரியனின் ஒளி படும்படியாக இருத்தல் மிகவும் நல்லது.. படுக்கையறையில் சூரிய ஒளி இருப்பது மனதை அமைதிப்படுத்தும்.. மேலும், படுக்கையறைக்கு கருப்பு அல்லது அடர் வண்ணங்கள் தீட்டுவதை தவிர்க்கவும், வெளிர் நீலம், வெள்ளை, வெளிர் பச்சை மற்றும் பிற வண்ணங்கள் மிகவும் பொருத்தமானவை.
3. உங்கள் வீட்டிற்குள் எந்த விதமான இரைச்சல் சத்தமும் இருக்கக்கூடாது. இரைச்சலான வீடு அதிகமான எதிர்மறை ஆற்றலை அழைக்கிறது. இது வீட்டில் உள்ளவர்களிடையே ஒற்றுமையின்மையை உருவாக்குகிறது. அதனால் அதிகமான சண்டைகள் வரும்.. குறிப்பாக கணவன் மனைவிக்கிடையே சண்டைகள் வரும்..
4. திருமணமான தம்பதிகள் ஒன்றாக அதிக நேரம் செலவிட வேண்டும். தூங்கும் போது உங்கள் அறையை எப்போதும் இருட்டாக வைத்திருப்பதைத் தவிர்க்கவும். உங்கள் படுக்கையறைக்குள் எதிர்மறை ஆற்றல் நுழைவதைத் தடுக்க, தவறாமல் பூஜை செய்து தூபம் போடுவது நல்லது.
5. வாஸ்து படி, கணவன் மனைவி இடையே நல்ல திருமண உறவுக்கு, கணவன் வலது பக்கமும் மனைவி இடது பக்கமும் படுக்க வேண்டும்.
6. எந்த குடும்பப் படங்களையும் அறையின் தென்மேற்கு திசையில் வைக்க வேண்டும். அது எதிர்மறையான ஆற்றலை உங்களின் வீட்டிற்கு தரும்..
7. குடும்பத்தில் யாரும் படுக்கையில் சாப்பிடக்கூடாது. இது எதிர்மறை ஆற்றலை அழைக்கிறது. இது ஒரு நல்ல பழக்கமும் அல்ல, டைனிங் டேபிளில் ஒன்றாக சேர்ந்து சாப்பிட்டால் மிகவும் நல்லது.. அப்படி சாப்பிடுவது குடும்ப உறுப்பினர்கள் அனைவரையும் ஒருவருக்கொருவர் நெருக்கமாக்குகிறது.
8. வீட்டின் சுவர்களில் ஏதேனும் விரிசல் ஏற்பட்டால், அவற்றை உடனேயே சரி செய்யவும். சுவர்களில் ஏற்படும் விரிசல்கள் உடன் பிறப்புகளுக்கிடையேயான தகவல் தொடர்பு பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும்.
9. வீட்டில் நிறைய செடிகள் வைத்திருப்பது நிறைய நேர்மறை ஆற்றலைக் கொண்டு வருகிறது. மேலும் அது கணவன் மனைவி உறவையும், குடும்ப உறவையும் செழுமையாக இது குடும்பத்தில் நம்பிக்கையையும் அன்பையும் வளர்க்க உதவுகிறது.
1o. உங்கள் அறையில் கண்ணாடி இருந்தால், தூங்கும் போது கணவனும் மனைவியும் பார்க்காத வகையில் அதை வைக்கவும். நீங்கள் தூங்கும் போது கண்ணாடி உங்களை எதிர்கொள்வது உங்கள் உறவுக்கு நல்லதல்ல. கண்ணாடியின் நிலையை மாற்றுவது சாத்தியமில்லை என்றால், நீங்கள் தூங்கும் போது கண்ணாடியை துணியால் மூடி வைக்கவும்.



Click it and Unblock the Notifications