Latest Updates
-
1 வருடம் கழித்து சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இன்று முதல் 12 ராசிக்காரர்களுக்கும் எப்படி இருக்கும் தெரியுமா? -
வாடகைக்கு மனைவி கொடுக்கும் வினோத நாடு? இதற்கு எவ்வளவு கட்டணம் வாங்குறாங்க தெரியுமா? -
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்!
ஆண்கள் தங்கள் காதலியை கட்டுப்படுத்த மட்டுமே விரும்புகிறார்கள் என்று உணர்த்தும் அறிகுறிகள் இதுதான்...
காதலில் ஆணும், பெண்ணும் இருவரும் ஒருவரையொருவர் மதித்து அவரவர் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் அந்த உறவு ஆரோக்கியமான உறவாக இருக்கும்.
காதல் என்பது ஒரு அற்புதமான உணர்வாகும். அனைவரின் வாழ்க்கையிலும் நிச்சயம் காதலிக்கும் ஒரு பருவம் வரத்தான் செய்யும். காதலால் உங்களுக்கு கிடைக்கும் நன்மைகளும், மகிழ்ச்சியும் ஏராளம். ஆனால் இதற்கு எதிர்மறையாக சில காதல்கள் அவ்வளவு சுலபமாக இருந்து விடுவதில்லை. சில காதல்களில் மகிழ்ச்சியை விட சுமைகளே அதிகமாக இருக்கும்.

காதலில் ஆணும், பெண்ணும் இருவரும் ஒருவரையொருவர் மதித்து அவரவர் உரிமைகளை பாதுகாக்கும் போதுதான் அந்த உறவு ஆரோக்கியமான உறவாக இருக்கும். பொதுவாக காதலில் ஆண்கள் அக்கறை காட்டுகிறேன் என்ற பெயரில் தங்கள் காதலிகள் மீது அதிக அதிகாரம் செலுத்துவார்கள். இதுதான் அவர்களின் காதல் முறிவுக்கு தொடக்கப்புள்ளியாக மாறுகிறது. ஆண்கள் இந்த செயல்களை அக்கறை என்று நியாயப்படுத்தினாலும் இது அவர்களின் ஆணாதிக்கத்தின் வெளிப்பாடுதான்.

நண்பர்களிடம் இருந்து தனிமைப்படுத்துவது
இது ஆரம்பத்தில் இனிமையாகவும், அக்கறையாகவும் இருக்கும், ஆனால் இது உண்மையில் ஒரு தீவிரமான மன விளையாட்டு ஆகும். முதலில், அவர் உங்களுடன் அதிக நேரம் செலவிட விரும்புகிறார் என்று நீங்கள் நினைப்பீர்கள். ஆனால் உண்மையில் இதன் பின்னால் இருக்கும் மனவிளையாட்டு என்னவெனில் உங்களை உங்கள் நண்பர்கள் மற்றும் குடும்பத்தினரிடமிருந்து தனிமைப்படுத்தியவுடன், அவர் உங்களை கட்டுப்படுத்துவது மிகவும் எளிதாக இருக்கும். இதுபோன்ற அறிகுறிகள் தெரிந்தால் ஆரம்பத்திலேயே அதனை பேசி தீர்த்து விடுவது நல்லது, இல்லையெனில் இது உங்கள் எதிர்காலத்தில் பல சிக்கல்களை உருவாக்கும்.

உங்களை அடிக்கடி சோதிப்பார்கள்
இதுவும் உங்களுக்கு ஆரம்பத்தில் இனிமையானதாக தோன்றலாம் ஆனால் உண்மை அதுவல்ல. ஒரு நாளைக்கு ஒரு முறை உங்களைச் சரிபார்ப்பது பரவாயில்லை, ஆனால் அவர் தொடர்ந்து உங்களுக்கு குறுஞ்செய்தி அனுப்பி அழைப்பது, நீங்கள் எங்கிருக்கிறீர்கள், ஒவ்வொரு நொடியிலும் நீங்கள் என்ன செய்கிறீர்கள் என்பதை அவர் அறிய விரும்புவது அக்கறையால் அல்ல. இது உங்களை கட்டுப்படுத்த அவர்கள் கையிலெடுக்கும் ஆயுதமாகும். அவர்கள் உங்கள் மனதுடன் விளையாட முயற்சிப்பார்கள், ஆனால் எந்த சூழ்நிலையிலும் நீங்கள் அவர்களை அனுமதிக்க மாட்டீர்கள் என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தினால், அவர்கள் உங்களை எளிதாக கட்டுப்படுத்த முடியாது என்பதை அவர்கள் உணருவார்கள்.

அவருக்கு கீழ்ப்படியாதபோது பதற்றமடைகிறார்கள்
அவர்கள் சொல்வதை நீங்கள் கேட்காதபோது அவர்கள் ஏன் பதற்றமடைகிறார்கள் என்று நீங்கள் எப்போதாவது சிந்தித்து உள்ளீர்களா? உங்களின் ஆசைகளை அவர்களிடம் கூறினால் அவர்கள் கோபப்படுவார்களா? ஆம் எனில், நீங்கள் உங்களை கட்டுப்படுத்தும் ஒருவரை காதலிக்கிறீர்கள் என்று அர்த்தம். ஒரு நல்ல ஆரோக்கியமான உறவில், நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்யலாம், சொல்லப்போனால் உங்கள் காதலர் உங்களின் எண்ணங்களுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். அவ்வாறு செய்யவில்லையெனில் விரைவில் தப்பித்துக் கொள்வதுதான் உங்களுக்கு நல்லது.

உங்களின் பாஸ்வேர்டுகளை கேட்பது
உங்களின் பாஸ்வேர்டுகளை விளையாட்டாக கேட்கிறேன் என்று கூறினால் ஒருபோதும் அவர்களை நம்பிவிடாதீர்கள். உங்கள் கூட்டாளருக்கு உங்கள் கடவுச்சொற்களைக் கொடுப்பதில் உங்களுக்கு விருப்பம் இல்லை என்றால், நீங்கள் அவரை எவ்வளவு நேசித்தாலும் அதைச் செய்ய வேண்டாம். அவர் உங்கள் கடவுச்சொற்களைப் பெற்றதும், அவர் உங்கள் சமூக ஊடக தளங்களையும் உங்கள் மின்னஞ்சல்களையும் சோதித்து பார்ப்பார்கள். அதைப்பற்றி உங்களிடம் ஆயிரம் கேள்வி கேட்பார்கள். இதனால் உங்களுக்குள் பல பிரச்சினைகள் எழும், நீங்கள் பாஸ்வேர்டுகளை தராவிட்டால் அவர்கள் உங்களிடம் நடந்து கொள்ளும் விதமே மாறுபடும். இது சரியான காதலருக்கான அடையாளம் அல்ல.

பாராட்டுவது போல கிண்டல் பண்ணுவது
உங்களை பாராட்டுவது போலவே கிண்டல் செய்வது ஆண்கள் கையாளும் ஒரு உத்தியாகும். உதாரணத்திற்கு நீ அழகாக இருக்கிறாய், ஆனால் இதனை மாற்றினால் இன்னும் அழகாக இருப்பாய் என்று கூறுவது உங்களின் தோற்றம் அவர்களுக்கு திருப்திகரமானதாக இல்லை என்பதன் வெளிப்பாடாகும். பெண்களும் அவர்களின் கருத்துக்கு பின்னால் இருக்கும் உண்மையான எண்ணத்தை தெரிந்து கொள்ளாமல் அவர்களின் கருத்தை அப்படியே ஏற்றுக்கொள்வார்கள். இது அவர்களின் சுயத்தை கொஞ்சம் கொஞ்சமாக இழக்க செய்யும்.

கருத்து வேறுபாடு எழும்போது வெறுப்பது
கட்டுப்படுத்தும் ஆண்கள் உங்களின் எண்ணங்கள் முதற்கொண்டு அனைத்தையும் கட்டுப்படுத்த நினைப்பார்கள். நீங்கள் அவர் கருத்துடன் உடன்படவில்லை என்று நீங்கள் அவரிடம் கூறும்போது அவர்கள் கொந்தளிப்பார்கள். அவரின் கருத்துக்கு முரணான கருத்துக்களை நீங்கள் கூறும்போது அவர்கள் நீங்கள் நினைப்பது தவறு என்று உங்களுக்கு கூற முயலுவார்கள். அவர்கள் நினைப்பதைத்தான் நீங்களும் நினைக்க வேண்டும், செய்ய வேண்டும் என்று எதிர்பார்ப்பார்கள்.



Click it and Unblock the Notifications
