எத்தனை வழிகள் மூலம் பெண்கள் உச்சக்கட்டம் அடையலாம்? அதை எப்படி செய்ய வேண்டும் தெரியுமா?

தோலின் உச்சி என்பது உங்கள் பாலியல் ஆசையை தூண்டும் பாடலைக் கேட்கும்போது மற்றும் பார்க்கும்போது உங்கள் உடலில் மேலும் கீழும் கூச்சம் ஏற்படும். அப்போது நீங்கள் ஒருவிதமான இன்பத்தை உணரலாம்.

உச்சக்கட்டம் என்பது உடலுறவில் ஆணும் பெண்ணும் இணைந்து மகிழ்ச்சியான செயல்பாடுகள் மூலம் பெரும் ஓர் அற்புதமான உணர்வு. பெரும்பாலும் உடலுறவில் ஆண்களுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அவர்கள், விரைவில் உச்சக்கட்டம் அடைந்து விடுவார்கள். அவர்களின் விருப்பம் மற்றும் ஆசைகளே அதிகம் நிறைவேறுகிறது. பெரும்பாலான பெண்கள் உடலுறவில் உச்சக்கட்டம் அடையாமலே இருக்கிறார்கள். தங்கள் துணைக்காக போலியாக உச்சக்கட்டம் அடைந்ததாக கூறுவதாக பல புள்ளி விவரங்கள் தெரிவிக்கிறன. ஏனெனில், ஆண்கள் பெரும்பாலும் பெண்களின் உச்சக்கட்டத்தை பற்றி கவனம் செலுத்துவதில்லை, அதற்கு என்ன செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிந்து கொள்வதில்லை.

Types Of Female Orgasms; How To Get One in tamil

பெண்களின் உடல் ஒரு புத்தகம் போல. ஆண்கள் அதை சரியாக கையாண்டு வாசிக்க வேண்டும். இவை இருவருக்கும் மகிழ்ச்சியை அளிக்கும். பெண்கள் சில வலிகளின் மூலம் உச்சக்கட்டம் அடைகிறார்கள். பெரும்பாலும் பெண்குறிமூலம் உச்சக்கட்டம் அடையப்படுகிறது. வரும் மகளிர் தினத்தில், பல்வேறு வகையான உச்சக்கட்டம் பற்றி நீங்கள் அறிந்துகொள்ளவும், அவற்றை நீங்கள் எப்படி அனுபவிக்கலாம் என்றும் இக்கட்டுரையில் தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
பெண் புணர்ச்சியின் வகைகள்

பெண் புணர்ச்சியின் வகைகள்

உடலுறவு கொள்ளும்போது பாலுறவு தூண்டுதலினால் தசைகள் இறுக்கமடையும் போது, தாளச் சுருக்கங்களின் விளைவாக ஓய்வெடுக்கும்போது உச்சக்கட்டம் ஏற்படுகிறது. புணர்ச்சி அல்லது உச்சக்கட்டம், உணர்ச்சி மற்றும் உடல் ரீதியாக இன்பத்தை உங்களுக்கு வழங்குகிறது. புணர்ச்சியின் போது ஆக்ஸிடாஸின் வெளியீட்டைத் தவிர, உடலுறவின் போது தோலோடு தோல் தொடர்புகொள்வதும் உங்கள் துணையுடன் உணர்வுபூர்வமாக இணைய உதவுகிறது. யோனி உடலுறவு கொள்பவர்கள் வெவ்வேறு வகையான உச்சியை அனுபவிக்க முடியும்.

கிளிட்டோரல் ஆர்கசம்

கிளிட்டோரல் ஆர்கசம்

யோனி திறப்பின் உச்சியில் அமைந்துள்ள கிளிட்டோரிஸ் ஒரு சிறிய, நரம்பு அடர்த்தியான அமைப்பாகும். இது பாலியல் இன்பத்தை மட்டுமே உங்களுக்கும் வழங்கும். நீங்கள் ஒருபோதும் உச்சக்கட்டத்தை அடையவில்லை என்றால், கிளிட்டோரிஸ் தொடங்குவதற்கு ஒரு நல்ல இடம். இந்த இடத்தை நீங்கள் தூண்டுவதன் மூலம் உச்சக்கட்டத்தை அடையலாம்.

க்ளிட்டோரல் ஆர்கஸம் பெறுவது எப்படி?

முதலாவதாக, நீங்கள் எப்படி பாலியல் தூண்டுதலை விரும்புகிறீர்கள் என்பதை அடையாளம் காண வேண்டும். அதாவது, பெண்குறியை நேரடியாக அல்லது லேபியா மற்றும் கிளிட்டோரல் ஹூட் மூலம் தொடவும். தொடங்குவதற்கு, பெண்குறிமூலத்தை சுற்றி சுழல் வடிவில் உங்கள் விரல்களால் தேய்க்க வேண்டும். அல்லது உங்கள் துணை விரல்களை மற்றும் வாயை பயன்படுத்தி அந்த இடத்தில் செயல்படலாம்.

ஜி-ஸ்பாட் உச்சி

ஜி-ஸ்பாட் உச்சி

ஜி ஸ்பாட் என்பது புரோஸ்டேட் சுரப்பிக்கு சமமான பெண் புள்ளியாகும். மேலும் இது சிறுநீர்க்குழாயின் முன் யோனி சுவரில் அமைந்துள்ளதாக கருதப்படுகிறது. இந்த பகுதியை உங்கள் கணவன் தூண்டும்போது, நீங்கள் எளிதில் உச்சக்கட்டத்தை அனுபவிக்கலாம். இது, பெண்களின் பாலியல் தூண்டலை அதிகமாக தூண்டும் ஓர் இடம்.

சி-ஸ்பாட் உச்சி

சி-ஸ்பாட் உச்சி

சி-ஸ்பாட் கருப்பை வாயில் மற்றும் கருப்பையைச் சுற்றி அமைந்துள்ள பகுதி. மேலும் அவை நரம்பு முடிவுகளுடன் தொடர்புடையவை. அறுவைசிகிச்சை வரலாறு மற்றும் உடற்கூறியல் வேறுபாடுகள்-அதாவது, கருப்பை வாயை அகற்றுவதை உள்ளடக்கிய கருப்பை நீக்கம் ஆகியவை இந்த உச்சக்கட்டத்தில் ஈடுபடும் திறனைப் பாதிக்கலாம். அதே போல், இது உங்கள் துணையின் ஆணுறுப்பின் அளவை பொருத்தும் உங்களை பாதிக்கும். உடலுறவு உங்களுக்கு வலிமிகுந்ததாக இருக்கலாம். எனவே கர்ப்பப்பை வாய் தூண்டுதலின் போது நீங்கள் எப்படி உணருகிறீர்கள் என்பதைப் பற்றி உங்கள் துணையுடன் தொடர்புகொள்வது அவசியம்.

மார்பகக்காம்பு உச்சி

மார்பகக்காம்பு உச்சி

மார்பகக்காம்புகளின் தூண்டுதலின் போது, ஆக்ஸிடாஸின் வெளியிடப்படுகிறது. இது கருப்பை மற்றும் யோனி சுவர்களின் சுருக்கங்களை ஏற்படுத்துகிறது. இதன் விளைவாக உச்சக்கட்டத்தை உங்களுக்கு ஏற்படுத்துகிறது.

எப்படி உச்சியை அடைவது?: உங்களுடைய இன்பத்தில் கவனம் செலுத்த வேண்டும், மார்பகங்களில் விரல்கள் எங்கு செல்கிறது என்பதைப் பார்க்கவும். அதன்படி, உச்சியை நீங்கள் பெறலாம்.

தோல் உச்சி

தோல் உச்சி

தோலின் உச்சி என்பது உங்கள் பாலியல் ஆசையை தூண்டும் பாடலைக் கேட்கும்போது மற்றும் பார்க்கும்போது உங்கள் உடலில் மேலும் கீழும் கூச்சம் ஏற்படும். அப்போது நீங்கள் ஒருவிதமான இன்பத்தை உணரலாம். உங்கள் பிறப்புறுப்பில் சில வித்தியாசங்களை உணரலாம். பாடலைத் தவிர, திரைப்படங்களில் உள்ள உணர்ச்சிகரமான காட்சிகள், கலைப் படைப்புகள் அல்லது ஒருவருடன் உணர்ச்சியான தொடர்பை உணரும் நபர்கள் கூட தோலின் உச்சியை தூண்டலாம். இருப்பினும், இந்த தூண்டுதல் கணிக்க முடியாததாக இருக்கலாம்.

இறுதிக் குறிப்பு

இறுதிக் குறிப்பு

பெண்ணுறுப்புப் புணர்ச்சி என்பது பெரும்பாலும் யோனி வழியாக மேற்கொள்ளப்படும் உடலுறவில் அணுகக்கூடிய மற்றும் விருப்பமான உச்சக்கட்டமாகும். இருப்பினும், உங்களுக்கு உச்சக்கட்ட உணர்வு என்பது மிகவும் தனிப்பட்டதாக இருக்கலாம். எனவே பெண்களே வெட்கப்படாதீர்கள்! உங்களால் முடிந்தவரை எது உங்களை உச்சக்கட்டம் அடைய வைக்கிறது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Friday, February 24, 2023, 20:52 [IST]
Desktop Bottom Promotion