உங்க காதலில் இந்த விஷயங்கள ஒருபோதும் எதிர்பார்க்காதீங்க... ஏனா கண்டிப்பா இதெல்லாம் கிடைக்காது...!

நீங்கள் திரைப்படங்களில் வருவது போன்று காதலிக்க விரும்பினால் நிச்சயம் ஏமாற்றமே உங்களுக்கு மிஞ்சும். இதனால் உன்னால் காதலில் விரிசல்கள் கூட ஏற்படலாம்.

ஒருவரை காதலிப்பதோ அல்லது ஒருவரால் காதலிக்கப்படுவது என்பதோ அற்புதமான உணர்வாகும். ஒருவரை உங்களுக்கு பார்த்து பிடிக்கத் தொடங்கும்போது அவருடனான உங்கள் எதிர்காலத்தை நினைத்து நீங்கள் பல கற்பனைகளை வளர்க்கத் தொடங்கிவிடுவீர்கள். தரமான நேரத்தை ஒன்றாகச் செலவிடுவது உங்கள் பிணைப்பை வலிமையாக்கும் என்பதில் சந்தேகமில்லை.

Things You Should Not Expect In A Relationship

காதலில் பிரச்சினைகள் ஏற்படத் தொடங்கும் தருணமே ஒருவரிடம் நீங்கள் அதிகம் எதிர்பார்க்கும்போதுதான். ஏனெனில் நமது திரைப்படங்கள் காதலை திட்டமிட்ட ட்ராமா போலவே காட்டுகிறது, ஆனால் எதார்த்தத்தில் காதல் அவ்வாறு இருப்பதில்லை. எனவே நீங்கள் திரைப்படங்களில் வருவது போன்று காதலிக்க விரும்பினால் நிச்சயம் ஏமாற்றமே உங்களுக்கு மிஞ்சும். இதனால் உன்னால் காதலில் விரிசல்கள் கூட ஏற்படலாம். இந்த பதிவில் நீங்கள் காதலில் கண்டிப்பாக எதிர்பார்க்கக்கூடாத விஷயங்கள் என்னென்ன என்று பார்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
உங்கள் துணை பர்பெக்ட்டாக இருப்பார்

உங்கள் துணை பர்பெக்ட்டாக இருப்பார்

எந்த மனிதனும் பர்பெக்ட்டானவராக இருக்க முடியாது. அனைவருக்குமே சில குறைபாடுகள் இருக்கத்தான் செய்யும். உங்கள் காதலர்/காதலி பர்பெகட்டாக இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்த்தால் அது முட்டாள்தனமாகும். காதலில் முக்கியமானது என்னவென்றால், நீங்கள் ஒருவருக்கொருவர் குறைபாடுகளை எவ்வளவு அழகாக ஏற்றுக்கொண்டு அதைச் செயல்படுத்துகிறீர்கள் என்பதுதான். சில நேரங்களில், உங்கள் கூட்டாளியின் குறைபாடுகள் மற்றும் பலவீனங்களை நீங்கள் வெளிப்படுத்துவீர்கள். அவர்கள் யார் என்பதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள், அவர்கள் என்னவாக இருக்க வேண்டும் எதிர்பார்த்து காதலிக்காதீர்கள்.

காதல் மாயாஜாலங்கள் நிறைந்ததாக இருக்கும்

காதல் மாயாஜாலங்கள் நிறைந்ததாக இருக்கும்

வாழ்க்கை எப்போதும் ரோஜாக்கள் நிறைந்த படுக்கையாக இருக்காது. ஒவ்வொரு காதல் கதையும் அவற்றின் சொந்த வழியில் மாயாஜாலமாக இருந்தாலும், நீங்களும் உங்கள் துணையும் சந்திக்கும் போது படங்களில் வருவது போல பறவைகள் பாடுவது, வயலின் இசை கேட்பது போன்ற அப்தங்களி எதிர்பார்க்காதீர்கள், எதார்த்தத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். உங்கள் துணையைப் பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்பதுதான் முக்கியம். உங்கள் துணைக்காக நீங்கள் எப்போதும் ஒரு மாயாஜால சூழலை உருவாக்க முடியும், ஆனால் காதல் எளிமையாகவும் நேர்மையாகவும் இருக்கும்போது மட்டுமே அது உங்கள் இதயத்தைத் தொடும்.

உங்கள் காதல் கதை விசித்திரமானதாக இருக்கும்

உங்கள் காதல் கதை விசித்திரமானதாக இருக்கும்

விசித்திர கதைகள் படிக்க சுவாரஸ்யமானதாக இருக்கும், ஆனால் அதையே உங்கள் காதலிலும் நீங்கள் எதிர்பார்த்தால் அந்த யோசனையை கைவிடவும். உங்கள் காதலை விசித்திரமான கதையாக மாற்ற உங்கள் இருவரின் முயற்சியுமே தேவைப்படும். உங்களுக்கும் உங்கள் கூட்டாளருக்கும் கருத்து வேறுபாடுகள் மற்றும் மோதல்கள் தோன்றும் தருணங்கள் ஏற்படலாம். ஆனால் நீங்கள் இருவரும் ஒன்றாக வேலை செய்ய முடிவு செய்தால்தான் உங்கள் உறவு வலுவாக மாறும் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

உங்கள் துணை ஒருபோதும் உங்களை காயபடுத்தமாட்டார்கள்

உங்கள் துணை ஒருபோதும் உங்களை காயபடுத்தமாட்டார்கள்

மனிதர்கள் ஒருபோதும் என்ன செய்வார்கள் என்பதை கணிக்க முடியாது, இதற்கு உங்கள் துணை ஒன்றும் விதிவிலக்கல்ல. ஒருவரின் மனதில் என்ன இருக்கிறது என்பதை யாரும் சொல்ல முடியாது. உங்களின் துணையை நீங்கள் அவர்கள் எதிர்பாராத தருணத்தில் அணைக்க விரும்புவீர்கள், ஆனால் அந்த தருணத்தில் அவர்கள் அதனை விரும்பாமல் இருக்கலாம். அதனால் அவர்கள் அதனை தவிர்க்க முயலலாம், இதனால் அவர்களுக்கு உங்கள் மீதான காதல் குறைந்து விட்டது என்று அர்த்தம் அல்ல. இது மட்டுமின்றி கோபத்தில் சிலசமயம் அவர்கள் தங்கள் கோபத்தால் கடும் சொற்களால் உங்களை காயப்படுத்தலாம். காதலில் இது மிகவும் சாதாரணமான ஒன்றுதான். எனவே காதலில் இன்பத்தை மட்டுமே எதிர்பார்த்தால் அது தவறானதாகும்.

உங்களுக்குத்தான் முன்னுரிமை எப்போதும் கொடுப்பார்கள்

உங்களுக்குத்தான் முன்னுரிமை எப்போதும் கொடுப்பார்கள்

உங்கள் துணையுடன் நீங்கள் பேச நினைப்பது மட்டுமே காதல் அல்ல, அவர்கள் உங்களிடம் என்ன பேச நினைக்கிறார்கள் என்பதும் முக்கியம். அனைத்து நாட்களும் ஒரே மாதிரியானதாக இருக்காது, சிலசமயங்களில் அவர்களின் தனிப்பட்ட பிரச்சினை காரணமாக அவர்கள் தங்களின் எண்ணங்களை வெளிப்படுத்த முடியாமல் போகலாம். அவர்களின் பிரச்சினை காரணமாக அவர்கள் உங்களுக்கு கொடுக்கும் கவனத்தில் குறைவு ஏற்படலாம். எனவே எப்பொழுதும் உங்கள் துணைக்கு நீங்கள்தான் முன்னுரிமை கொண்டவராக இருப்பீர்கள் என்று எதிர்பார்க்காதீர்கள்.

உங்கள் உறவில் எந்த மோதல்களும் இருக்காது

உங்கள் உறவில் எந்த மோதல்களும் இருக்காது

உங்கள் உறவு சீராக இயங்க வேண்டும், சண்டைகள் இல்லாமல் இருக்க வேண்டும் என்று நீங்கள் எதிர்பார்ப்பது நல்லதுதான். ஆனால் கண்டிப்பாக உங்கள் காதலில் மோதல்கள் வரும் சூழல்கள் ஏற்படலாம். நீங்களும் உங்கள் கூட்டாளியும் வெவ்வேறு பின்னணி, கலாச்சாரங்கள், வெவ்வேறு கண்ணோட்டங்கள் மற்றும் வளர்ப்பிலிருந்து வந்திருப்பதால் இது இருக்கலாம். இது மோதல்களுக்கும் உராய்விற்கும் வழிவகுக்கும், ஆனால் நீங்கள் அமைதியாக இருந்து நிலைமையை புத்திசாலித்தனமாகக் கையாள வேண்டும். மோதல்கள் இல்லாமல் காதல் என்பது இருக்க வாய்ப்பில்லை.

உங்கள் துணை எப்போதும் உங்களின் மனதை படிப்பார்கள்

உங்கள் துணை எப்போதும் உங்களின் மனதை படிப்பார்கள்

அவன் / அவள் உங்கள் பங்குதாரர், ஜோதிடர் அல்ல. அவர்கள் உங்கள் மனதைப் படிப்பார்கள் என்று நீங்கள் ஏன் முதலில் எதிர்பார்க்கிறீர்கள்? இது அனைவராலும் முடியாது, உங்கள் உறவின் ஆரம்பத்தில், நீங்கள் நினைப்பதை உங்கள் துணை யூகிக்கக்கூடும், ஆனால் இது ஒவ்வொரு முறையும் நடக்காது. சில நேரங்களில், அவர் / அவள் உங்கள் விருப்பம் மற்றும் ஆசைகளைப் பற்றி முற்றிலும் துல்லியமாக இருப்பார்கள். உங்களின் எண்ணங்களையும், ஆசைகளையும் வெளிப்படுத்தி அதனை நிறைவேற்றிக் கொள்ள பழகிக்கொள்ளுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Monday, November 4, 2019, 17:13 [IST]
Desktop Bottom Promotion