Latest Updates
-
ராகி பச்சை பயறு தோசையும், வெங்காய சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 24 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு ரொம்ப துக்கமான நாளாக இருக்குமாம் -
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா?
இந்த குணங்கள் மட்டும் உங்ககிட்ட இருந்தா உலகமே உங்களை புகழ்ந்து தள்ளுமாம்... உங்ககிட்ட இருக்கா?
உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, அது மற்றவர்களையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டுகிறது. இது ஒரு நபரின் மிகவும் போற்றத்தக்க குணங்களில் ஒன்றாகும்.
பிறக்கும்போதே யாரும் மரியாதையுடன் பிறப்பதில்லை, அவர்கள் அதை தங்கள் வாழ்நாள் முழுவதும் தங்கள் செயல்கள், மதிப்புகள் மற்றும் வார்த்தைகளின் மூலமாகதான் பெறுகிறார்கள். ஒரு நபரை அவர்களாக வடிவமைக்கும் சில விஷயங்கள் உள்ளன. அவமரியாதை மற்றும் தவறான செயல்கள் ஒரு நபரை உடனடியாக மற்றவர்களின் முன் வீழ்த்திவிடும். அவர்களை பற்றி தவறாக எண்ண நினைக்கும். அனைவரும் உங்களை பாராட்டக்கூடிய அல்லது போற்றத்தகுந்த நபராக பார்க்க சில விஷயங்களை நீங்கள் செய்ய வேண்டியுள்ளது.

நீங்கள் உங்களை எப்படி வெளியே காட்டுகிறார்கள் என்பதில் உண்மையிலேயே கவனமாக இருக்க வேண்டும். மக்கள் உங்களை பெரிதும் போற்ற வைக்கும் சில நுட்பமான விஷயங்கள் பற்றி இக்கட்டுரையில் காணலாம்.

உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்துதல்
உங்கள் உணர்ச்சிகளை வழக்கத்தை விட அதிகமாக வெளிப்படுத்த நீங்கள் முனைந்தால், மக்கள் உங்களை மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களாகவும் உணர்ச்சிவசப்படக்கூடியவர்களாகவும் பார்க்கக்கூடும். உங்கள் உணர்ச்சிகளை நீங்கள் கட்டுப்படுத்த வேண்டும். இதனால் மக்கள் உங்களை ஒரு பலவீனமான நபராக பார்க்க மாட்டார்கள். சில உணர்வுகளை தங்களுக்குள் வைத்திருக்க முடியாது. அதேநேரம் நீங்கள் உங்களை எப்படி முன்வைக்கிறீர்கள் என்பதை நீங்கள் முழுமையாகக் கட்டுப்படுத்தினால், மக்கள் உங்களைப் பெரிதும் போற்றுவார்கள்.

தோற்றத்தை கவனித்துக்கொள்வது
நீங்கள் உங்களை கவனித்துக் கொள்வதில் முக்கியமாக கவனம் செலுத்த வேண்டும். ஏனெனில், ஒருவரின் தோற்றம், அவர்களை பற்றிய எண்ணங்களை மற்றவர்களிடம் பிரதிபலிக்கும். ஆதலால், நீங்கள் ஆடை அணிவதில் சிறப்பு கவனம் செலுத்தும்போதும், மக்கள் உங்களை வேறுவிதமாகப் பார்க்கிறார்கள். எந்தவொரு சந்தர்ப்பத்திலும் நீங்கள் அழகாக நேர்த்தியாக ஆடை அணிந்திருந்தால், மக்கள் உங்களை மரியாதையுடன் பார்ப்பார்கள்.

இலக்குகளில் ஆர்வம்
உங்கள் இலக்குகள் மற்றும் லட்சியங்களில் நீங்கள் மிகவும் ஆர்வமாக இருக்கும்போது, அது மற்றவர்களையும் அவர்களின் கனவுகளைப் பின்பற்றத் தூண்டுகிறது. இது ஒரு நபரின் மிகவும் போற்றத்தக்க குணங்களில் ஒன்றாகும். இந்த குணம் உள்ளவர்களை சுற்றி மற்றவர்கள் இருக்க விரும்புகிறார்கள்.

அனைத்தையும் முதலில் வெளிப்படுத்துவதில்லை
ஆரம்பத்தில் தங்களைப் பற்றிய அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்தும் நபர்களுடன் பேசுவதில் மக்கள் ஆர்வத்தை இழக்கின்றனர். ஒரு நபரின் கவனத்தை உங்களை நோக்கியே வைத்திருக்க ஒரு சிறிய மர்மத்தை வைத்திருப்பது சிறந்த வழியாகும். ஏனெனில் அது மக்களை யூகிக்க வைக்கும். உங்களை பற்றி நினைக்க வைக்கும்.

பாராட்டுக்களை வழங்குதல்
நீங்கள் அடிக்கடி மக்களை பாராட்டும்போது, அவர்களின் மதிப்பு திடீரென்று குறைகிறது. இது அவர்களுக்கு பெரிதாக தெரியாது. ஆனால், நீங்கள் எப்போதாவது ஒருவருக்கு உண்மையான பாராட்டுக்களைத் தெரிவிக்கும்போது, அது அதிக மதிப்பைப் பெறுகிறது. மக்கள் உங்களை உண்மையிலேயே நீங்கள் போற்றத்தக்கவர் என்று பாராட்டுகிறார்கள்.

மனதில் உள்ளதை பேசுவது
பின்விளைவுகள் எதுவாக இருந்தாலும், அனைவரின் முன்னிலையிலும் தன் கருத்தைப் பேசும் தைரியம் கொண்டவர், அனைவராலும் மதிக்கப்படுகிறார், போற்றப்படுகிறார். அவ்வாறு செய்வதற்கான தைரியம் மட்டுமே மக்கள் உண்மையிலேயே பாராட்டக்கூடிய ஒரு பாராட்டத்தக்க குணம்.



Click it and Unblock the Notifications