Latest Updates
-
Happy Mother's Day 2026: அன்னையர் தினத்தன்று உங்க அம்மாவிடம் இந்த வாழ்த்து செய்திகளில் ஒன்றை சொல்லுங்க -
அம்மாவுக்கு இந்த செடிகளை பரிசளித்தால் அதிர்ஷ்டம் கொட்டும்! அன்னையர் தினத்தில் இதை மட்டும் செய்யாதீங்க! -
கேரளா ஸ்டைல் நாடன் மாம்பழ குழம்பு ரெசிபி - ஒருதடவை ட்ரை பண்ணுங்க, செமையா இருக்கும் -
ரிஷப ராசியில் உருவாகும் புதாதித்ய யோகத்தால் வெற்றியையும், பணத்தையும் குவிக்கப்போகும் 4 ராசிகள் -
வெயில் வாட்டி வதைக்குதா? வீட்டை ஜில்லென்று மாற்ற இந்த 5 செடிகள் போதும், அதிர்ஷ்டமும் தேடி வரும்! -
தோசையின் தலைநகரம் என்று அழைக்கப்படும் ஊர் எது தெரியுமா? இது தமிழ்நாட்டில் இல்லையாம் -
செஃப் வாணி ஸ்டைல் தக்காளி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து உடனே ட்ரை பண்ணி பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 09 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க ராஜா மாதிரி வாழப்போறாங்களாம் -
மேஷ ராசியில் உருவாகும் மங்களாதித்ய ராஜயோகம் 2026: மே 11 முதல் இந்த 3 ராசிக்கு கையில் பணம் குவியப் போகுது.. -
சப்பாத்திக்கு ஒருடைம் முட்டைக்கோஸ் பச்சை குருமா செய்யுங்க.. டேஸ்ட் தாறுமாறா இருக்கும்..
இந்த அறிகுறிகள் இருந்தால் உங்களின் காதல் பொருந்தா காதலாக இருக்க வாய்ப்புள்ளதாம்...!
நீங்கள் காதலிப்பவர் உங்களின் ஆன்மாவிற்கான சிறந்த துணையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளது. ஏனெனில் உங்களை உண்மையாக காதலிப்பவர்களால் மட்டுமே உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும்.
மனிதராக பிறந்த அனைவருமே காதலில் விழுவது இயற்கையானதுதான். ஒருவர் தன் வாழ்நாளில் எத்தனை முறை வேண்டுமென்றாலும் காதலில் விழலாம். ஆனால் ஒவ்வொரு முறை காதலில் விழும்போதும் அந்த காதல்தான் தன்னுடைய உண்மையான காதல் என்று நினைப்பார்கள். ஆனால் எதார்த்தம் அப்படிப்பட்டதாக இருக்காது.

நீங்கள் காதலிப்பவர் உங்களின் ஆன்மாவிற்கான சிறந்த துணையா என்பதை கண்டறிய சில அறிகுறிகள் உள்ளது. ஏனெனில் உங்களை உண்மையாக காதலிப்பவர்களால் மட்டுமே உங்களின் அனைத்து தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியும். நீங்கள் தற்போது இருக்கும் காதல் உங்களுக்கான உண்மையான காதல் இல்லை என்பதற்கான அறிகுறிகள் என்னென்ன என்று இந்த பதிவில் பார்க்கலாம் .

அவர்களால் உங்கள் மனதை படிக்க முடியாது
உணமையாக காதலிப்பவர்களால் ஒருவர் மனதை ஒருவர் படிக்க முடியும் என்று கூறுவார்கள். இது வெறும் கற்பனை மட்டுமே. ஆனால் உண்மையாக புரிந்து காதலிப்பவர்களால் தங்கள் துணையின் முகத்தை பார்த்தே அவர்களின் தற்போதைய தேவை என்ன என்பதை அறிய முடியும். உங்களின் உண்மையான சோல்மேட்டால் உங்களின் எண்ண ஓட்டத்தை நன்றாக உணரமுடியும்.

கெமிஸ்ட்ரி இல்லாமல் இருப்பது
இது ஒரு முக்கியமான அறிகுறியாகும். நீங்கள் இருவரும் நெருக்கமாக அமர்ந்திருக்கும் போது கூட உங்களுக்குள் உற்சாகமோ அல்லது மனதிற்குள் குறுகுறுப்போ இல்லாமல் இருக்கிறதா? முத்தமிடும்போது உங்களுக்குள் ஏற்படும் மகிழ்ச்சியே காட்டிக்கொடுத்துவிடும் அவர்கள்தான் உங்களின் சிறந்த துணையா என்பதை.

பாராட்டாமல் இருப்பது
உங்களின் உண்மையான காதல் துணை உங்களை எப்போதும் சிறப்பாக உணரச்செய்வார்கள். ஆரோக்கியமான உறவு என்பது எப்போதும் மற்றவருக்கு ஆறுதலாக இருந்து அவர்களை மகிழ்ச்சியாகவும், திருப்தியாகவும் உணரச்செய்வதாகும். உங்களின் துணை உங்களை இவ்வாறு உணர செய்யாவிடில் அவர்கள் உங்களுக்கான பொருத்தமான துணையாக இருக்க வாய்ப்பில்லை.

எப்போதும் விமர்சிப்பது
உங்களின் முக்கியமான நாட்களில் கூட உங்களை விமர்சிப்பது என்பது மோசமான செயலாகும். இதனாலேயே நீங்கள் உங்களின் மனதில் இருப்பவற்றை வெளிப்படையாக கூற அஞ்சுவீர்கள். உங்களின் உண்மையான வாழ்க்கைத்துணை எப்போதும் உங்களின் விருப்பங்களை கொண்டு மட்டம் தட்டமாட்டார்கள்.

மெசேஜ் அனுப்புவது
இப்போதைய காலக்கட்டத்தில் பல காதல்கள் உயிர்வாழ்வதே வாட்ஸாப் மூலமாகத்தான். ஆனால் நீங்கள் ஒவ்வொரு முறை மெசேஜ் அனுப்பும்போதும் அதனை சரிபார்த்து, அழித்து மீண்டும் அனுப்புவது அவர்கள் மீதான உங்கள் பயத்தின் அடையாளமாகும். உங்கள் துணை மீது உங்களுக்கு முழு உரிமை இருந்தால் நீங்கள் எதை நினைத்தும் அஞ்ச மாட்டீர்கள். நீங்கள் அதனை நினைத்து பயப்படுபவராக இருந்தால் உங்களின் காதல் உங்களுக்கானதல்ல.

வாக்குவாதங்கள்
காதல் என்பது சாதாரணமானதல்ல. உங்களின் உண்மையான வாழ்க்கைத்துணையுடன் இருந்தால் கூட உங்களுக்குள் வாக்குவாதங்கள், சண்டைகள் போன்றவை எழக்கூடும். ஆனால் உண்மையான காதல் அதனை உடனடியாக மறக்கவைக்கும். உங்களின் துணை உங்களின் ஆன்மாவின் துணையாக இருந்தால் அவர்கள் எல்லாவற்றையும் சரிசெய்ய இறங்கி வருவார்கள். ஒருவேளை உங்கள் துணை நீங்கள் இறங்கிவர தயங்கினால் அது உங்களுக்கான காதல் அல்ல.

பாதுகாப்பற்ற உணர்வு
உண்மையான காதல் உங்களுக்கு வழங்கும் முதல் உணர்வு பாதுகாப்புதான். ஆனால் உங்கள் காதலில் உங்களுக்கு அந்த உணர்வு கிடைக்கவில்லை எனில் நீங்கள் இருப்பது உண்மையான காதலில் அல்ல. ஏனெனில் தவறான துணையான இருக்கும்போது உங்களுக்கு பாதுகாப்பற்ற உணர்வு ஏற்படும்.



Click it and Unblock the Notifications