Latest Updates
-
வார ராசிபலன் (05 July 2026-11 July 2026)- இந்த வாரம் உங்களின் ராசிக்கு எப்படி இருக்கப்போகுது தெரியுமா? -
சாணக்கிய நீதி படி இந்த குணமுள்ள பெண்ணை திருமணம் செய்யும் ஆண்கள் கடவுளால் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாம் -
நெல்லை ஸ்டைல் தேங்காய்ப்பால் கோழி குழம்பு ரெசிபி - இந்த மாதிரி வைச்சு பாருங்க - அட்டகாசமா இருக்கும் -
200 ஆண்டுகளுக்கு மேல் ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆள்வதற்கு காரணமாக இருந்தது இந்த 5 விஷயங்கள்தான் -
ஐயங்கார் ஸ்டைல் புடலங்காய் பால் கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சூப்பர் சைடிஷா இருக்கும் -
செவ்வாய் ரோகிணி நட்சத்திரத்திற்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாக ஜொலிக்கப்போகும் 3 ராசிகள் இவங்கதான் -
மொறுமொறு ராகி தோசையும், தக்காளி சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 04 ஜூலை 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்க மோசமான பலன்களை அனுபவிக்கப் போறாங்களாம் -
ஜூலை 07-ல் வக்ர நிலையில் சொந்த ராசிக்கு செல்லும் புதன்: இந்த 6 ராசிகளின் அதிர்ஷ்ட கதவு திறக்கப்போகுது! -
குருபகவானின் அஸ்தமனத்தால் ஆகஸ்ட் மாதம் வரை கஷ்டப்படப் போகும் 3 ராசிகள் இவங்கதான் - உங்க ராசி என்ன?
இந்த அறிகுறிங்க வந்துருச்சுனா உங்க காதல் உங்களுக்கு போரடிக்க ஆரம்பிச்சுருச்சுனு அர்த்தம்...!
இன்று பலரின் துன்பங்களுக்கு காரணமாகவே காதல்தான் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் காதலிக்கும் நபரோ அல்லது காதலிக்கும் முறையோ அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருப்பதில்லை.
அனைவரின் வாழ்க்கையிலும் மகிழ்ச்சியை வழங்கும் உணர்வு காதல் ஆகும். ஆனால் காதலால் கிடைக்கும் மகிழ்ச்சி என்பது நாம் எப்படி காதலிக்கிறோம் என்பதை பொறுத்துதான் இருக்கிறது. இன்று பலரின் துன்பங்களுக்கு காரணமாகவே காதல்தான் இருக்கிறது, ஏனெனில் அவர்கள் காதலிக்கும் நபரோ அல்லது காதலிக்கும் முறையோ அவர்களுக்கு மகிழ்ச்சியை தருவதாக இருப்பதில்லை.

இன்று காதல் ஏற்படுத்துவதற்கான காரணங்கள் கூட வலிமையானதாக இருப்பதில்லை. தனியாக இருப்பது போரடிப்பதாலேயோ அல்லது பயமாக இருப்பதாலேயோ கூட தற்சமயம் பலரும் காதலிக்கத் தொடங்குவதாக ஆய்வுகள் கூறுகிறது. இதுபோன்ற சூழ்நிலை மற்றும் கட்டாயத்தால் ஏற்படும் காதல் ஒருபோது உங்களுக்கு மகிழ்ச்சியைத் தராது. நீங்கள் இல்லை என்று உங்களுக்குள்ளே சமாதானம் செய்து கொண்டாலும் நீங்கள் சூழ்நிலைக்காகத்தான் காதலிக்கிறீர்கள் என்பதை சில அறிகுறிகள் காட்டிக்கொடுத்துவிடும்.

உங்கள் துணை உங்கள் மகிழ்ச்சிக்கு காரணமாக இருக்கமாட்டார்கள்
இது மிகவும் முக்கியமான ஒன்றாகும். உங்கள் துணை செய்யும் எதுவும் உங்களுக்கு மகிழ்ச்சியை அளிக்காத போதும் நீங்கள் தொடர்ந்து அந்த உறவில் நீடித்தால் அதற்கு நீங்கள் அது பழகிவிட்டது என்பதாலேயே அந்த உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். குறிப்பாக உங்கள் துணை உங்களை திருப்திப்படுத்த அதிக முயற்சி எடுக்கும்போது அது எதுவும் உங்களை ஈர்க்கவில்லை எனில் நீங்கள் மனதளவில் அந்த உறவை விட்டு வெளியேற நினைக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையை பற்றி மற்றவரிடம் குறை சொல்வது
நீங்கள் உங்கள் துணையைப் பற்றி தொடர்ந்து மற்றவர்களிடம் புகார் செய்து கொண்டு இருந்தால் நீங்கள் உங்கள் காதலில் மகிழ்ச்சியாக இல்லை என்று அர்த்தம். அவர்களைப் பற்றி குறை கூற மட்டுமே நீங்கள் அந்த உறவில் நீடிப்பதில் எந்த அர்த்தமும் இல்லை. அவர்களின் பழக்கவழக்கங்கள் திடீரென உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தினால், அவர்களுடன் இருக்கும்போது அசௌகரியமாக உணர்ந்தால் நீங்கள் அவர்களுடன் உங்கள் காதலைத் தொடர விரும்புவதில்லை. ஒருவரை நீங்கள் நேசிக்கும்போது அவர்களின் எந்த பழக்கமும் உங்களுக்கு எரிச்சலை ஏற்படுத்தாது.

தொடர்ந்து பகல் கனவு காண்பது
சிறந்த எதிர்காலத்தைப் பற்றியோ அல்லது வேறு ஒருவரைப் பற்றியோ நீங்கள் தொடர்ந்து நினைத்துக் கொண்டிருந்தால் நீங்கள் தற்போதைய உறவில் கட்டாயத்தின் பேரில்தான் இருக்கிறீர்கள் என்று அர்த்தம். நாம் ஏங்கித்தவிக்கும் பொருட்களைப் பற்றித்தான் பெரும்பாலும் நாம் பகலில் நினைத்துக் கொண்டே இருப்போம். இதற்கு காரணம் நீங்கள் தற்போது இருக்கும் உறவோ அல்லது சூழலோ உங்களுக்கு மகிழ்ச்சியை அளிப்பதாக இருக்காது.

சிங்கிளாக இருப்பதை நினைத்து பயம்
உங்கள் காதலை முறித்துக் கொண்டால் என்ன நடக்கும் என்று சிந்திக்கும்போது உங்கள் மனதில் முதலில் தோன்றுவது என்ன? சிங்கிளாக இருக்க போகிறோம் என்ற பயமா அல்லது சுதந்திரமாக இருக்கப் போகிறோம் என்ற மகிழ்ச்சியா?. முதல் எண்ணம் தலைதூக்கினால் நீங்கள் சிங்கிளாக இருப்பதற்கு பயந்துதான் இந்த உறவில் இருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

உங்கள் துணையை மாற்ற முயற்சிப்பது
காதலில் இருக்கும்போது உங்கள் துணையை அப்படியே ஏற்றுக்கொள்வீர்கள், ஆனால் உங்கள் துணையின் நடவடிக்கையை தொடர்ந்து மாற்ற முயற்சித்தால் அது இயல்பானது அல்ல. நீங்கள் இதைச் செய்கிறீர்கள் என்றால், நீங்கள் அவர்களை விரும்பவில்லை என்று அர்த்தம். எனவே நீங்கள் அவர்களை புதியவராக மாற்ற நினைக்கிறீர்கள். உங்களின் தேவைகளுக்கு ஏற்ப அவர்களை மாற்ற நினைக்கிறீர்கள். இவ்வாறு இருந்தால் அவர்களை மாற்றுவதற்கு பதிலாக அவர்கள் மீதான உங்கள் கண்ணோட்டத்தை மாற்ற முயலுங்கள்.



Click it and Unblock the Notifications