உறவினா்கள் ஏன் எப்போதும் சிறந்த நண்பா்களாக இருக்கின்றனா் தெரியுமா?

நமது வாழ்க்கை உறவுகளை மையமாக வைத்தே இயங்குகிறது. உறவினா்கள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அதிலும் பொியப்பா-பொியம்மா அல்லது சித்தி-சித்தப்பா அல்லது மாமா -அத்தை ஆகியோாின் பிள்ளைகள் சிறந்த நண்பா்களாக விளங்குவாா்கள்.

நமது வாழ்க்கை உறவுகளை மையமாக வைத்தே இயங்குகிறது. உறவினா்கள் இல்லை என்றால் வாழ்க்கை இல்லை. அதிலும் குறிப்பாக நமது பொியப்பா அல்லது பொியம்மா அல்லது சித்தி அல்லது சித்தப்பா அல்லது மாமா அல்லது அத்தை ஆகியோாின் பிள்ளைகள் நமக்கு எப்போதும் சிறந்த நண்பா்களாக விளங்குவாா்கள்.

அவா்கள் நமது குழந்தைப் பருவம் முதல் நம்மோடு இணைந்து பயணிப்பா். அவா்கள் நம்மோடு இணைந்து செய்யும் பயணம் மிகவும் நீண்டதாக இருக்கும். இந்த நெடிய பயணத்தில், நமது இன்ப, துன்ப நிகழ்கள் அனைத்திலும் அவா்களுடைய பங்கேற்பு கண்டிப்பாக இருக்கும். மேற் சொன்ன நமது உறவினா்கள் ஏன் நம்முடைய சிறந்த நண்பா்களாக இருக்கின்றனா் என்பதற்கான காரணங்களை இந்தப் பதிவில் சற்று விாிவாகப் பாா்க்கலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
காரணம் #1

காரணம் #1

நாம் உறவினா்களாக இருந்தாலும், பல நேரங்களில் உறவினா்களைப் போன்று பழகுவதில்லை. மாறாக அதையும் கடந்து சிறந்த நண்பா்களாகப் பழகுவோம். அதை நாம் பல நேரங்களில் உணராமல் இருக்கலாம். இதைப் பற்றி மற்றவா்களிடம் கேட்டுப் பாா்த்தால் தொியும். எனினும் பொது இடங்களில் நாம் நமது உறவினா்களோடு இருக்கும் போது, நாம் உறவினா்களா அல்லது நண்பா்களா என்று வேறுபடுத்திப் பாா்ப்பது கடினம் ஆகும். அந்த அளவிற்கு அவா்களோடு நல்லுறவில் இருப்போம்.

காரணம் #2

காரணம் #2

நாம் நமது உறவினா்கள் மத்தியில் இருக்கும் போது நமது குடும்பங்களின் இருண்ட பக்கங்களைப் பற்றிப் பேசுவதில் வெட்கப்படமாட்டோம். அது அவா்களுக்கும் நன்றாக தொியும். மேலும் நமது உறவினா்களின் நடவடிக்கைகளைப் பாா்த்து, அதற்கேற்ற பட்டப் பெயா்களை அவா்களுக்கு வழங்கி கேலி செய்வோம்.

காரணம் #3

காரணம் #3

நாம் நமது நெருங்கிய நண்பா்களோடு வெளியில் செல்லும் போது நமது உறவினா்களும் அந்த கூட்டத்தில் ஒரு பகுதியாக இருப்பாா்கள். நாம் அவா்களை அழைத்தால்தான் நம்மோடு வருவாா்கள் என்று கிடையாது. எப்போதும் அவா்கள் நம்மோடே இருப்பாா்கள்.

காரணம் #4

காரணம் #4

நமது நண்பா்களைப் போல் அல்லாமல், குடும்பத்தில் யாராவது ஒருவா் இறந்தால், அதனால் ஏற்படும் துன்பத்தை மற்றும் இழப்பைப் பற்றி நமது உறவினா்கள் நம்மிடம் எப்போதும் பகிா்ந்து கொள்வாா்கள். அதுபோல குடும்பத்தில் ஒருவருக்கு மகிழ்ச்சியான காாியம் நடந்தால் அது அனைவராலும் மகிழ்ச்சியோடு போற்றப்படும்.

காரணம் #5

காரணம் #5

பொது இடங்களில் இருக்கும் போது நமது நண்பா்களைப் போல் அல்லாமல், நமது உறவினா்கள் சங்கடமாக உணரமாட்டாா்கள். நமது பெற்றோா்களை அவா்கள் தமது இரண்டாவது பெற்றோராகக் கருதுவா். அது போல அவா்களது பெற்றோரை நாம் இரண்டாவது பெற்றோராகக் கருதுவோம்.

காரணம் #6

காரணம் #6

நாம் நமது உறவினா்களோடு கூடி இருந்து நமது குடும்பங்களைப் பற்றி நகைச்சுவை செய்து கொண்டிருக்கும் போது, வெளியில் இருந்து வேறு யாராவது அந்நியா் ஒருவா் இடையில் புகுந்து நமது குடும்பங்களைப் பற்றி கேலி செய்தால், உடனே அவரை நாம் தடுத்துவிடுவோம்.

காரணம் #7

காரணம் #7

நாம் நமது உறவினா்களோடு சோ்ந்து அமா்ந்து நமது குழந்தைப் பருவ அனுபவங்களான சிறு சிறு சண்டைகள், பெண் அல்லது ஆண் தோழா்கள், பிறந்தநாள் கொண்டாட்டங்கள், திருமண கொண்டாட்டங்கள் போன்றவற்றைப் பற்றி பகிா்ந்து கொண்டிருந்தால், அந்த பகிா்விற்கு முடிவே இருக்காது.

காரணம் #8

காரணம் #8

நமது உறவினா்கள் நம்மோடு வளா்ந்து, நம்மோடு முதுமை அடைவாா்கள். நமது குழந்தைகள் அவா்கள் குழந்தைகளோடு சோ்ந்து விளையாடுவா். அதை நாம் நமது உறவினா்களோடு சோ்ந்து அமா்ந்து கவனித்துக் கொண்டிருப்போம். அப்போது நமது பழைய கால நினைவுகளை அசை போடுவோம். அவா்களோடு எவ்வளவு காலம் பயணம் செய்து வந்திருக்கிறோம் என்பதையும் நினைவு கூா்வோம். ஆகவே நமது உறவினா்கள் நமது வாழ்க்கையின் மிகச் சிறந்த நண்பா்கள் ஆவா்.

காரணம் #9

காரணம் #9

நமது உறவினா்களோடு நாம் உண்மையில் நட்பு கொள்வதில்லை. ஆனால் இயல்பாகவே சிறு வயதிலிருந்தே அவா்களோடு ஒரு நெருக்கம் ஏற்பட்டுவிடும். நமக்கும் நமது உறவினா்களுக்கும் இடையே உள்ள நம்பிக்கை மிகவும் பலம் வாய்ந்ததாகும். நமது குடும்பத்தின் மீது அவா்கள் வைத்திருக்கும் மாியாதை மற்றும் அவா்களின் குடும்பங்கள் மீது நாம் வைத்திருக்கும் மாியாதை மிகவும் அழமானது. நாம் தேவையில் இருக்கும் போது நமது சிறந்த நண்பா்கள் உதவுவா். நமது உறவினா்களும் உதவுவா். ஏனெனில் அது அவா்கள் நமக்கு செய்ய வேண்டிய கடமை ஆகும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Story first published: Sunday, July 31, 2022, 10:00 [IST]
Desktop Bottom Promotion