நான் ஒரு பெண் (19), ஓரினச் சேர்க்கையாளராக இருப்பேனோ என்று அஞ்சுகிறேன் -இரகசிய டைரி #005

Posted By: Staff
Subscribe to Boldsky

ஹாய்! நான் இதை எதற்கு எழுதுகிறேன் என்று கூட தெரியவில்லை. நான் ஒரு பெண்... எனது பதின் வயதின் இறுதியில் இருக்கிறேன். எனக்கு ஆண்கள் மீது ஏற்படும் ஆவலை காட்டிலும், பெண்கள் மீதுதான் அதிக ஆர்வம் ஏற்படுகிறது. நான் அதிகம் இணையங்களில் கட்டுரை வாசிக்கும் பழக்கம் கொண்டவள்.

கடந்த ஓரண்டு காலமாக ஓரினச்சேர்க்கையாளர்கள் குறித்து நிறைய படித்து வருகிறேன். முதல் முறையாக ஒரு வருடத்திற்கு முன் ஒருமுறை எனது ஃபேஸ்புக் நியூஸ் ஃபீடில் ஓரினச்சேர்க்கையாளர்கள் பெண்கள் குறித்த ஒரு படமும், அதனுடன் அவர்களுக்கு ஆதரவான கருத்தும் கண்டேன்.

அதன் பிறகே, என் மீது எனக்கே சந்தேகம் வலுத்தது. என் ஆசைகள், விருப்பங்கள் மற்றும் நான் இணையத்தில் வாசித்த பல கட்டுரைகள் கொண்டு பார்க்கும் போது நானும் ஒரு ஓரினச்சேர்க்கையாளராக இருப்பேனோ என பதட்டமாக இருக்கிறது.

என் தோழ்கள் சிலருடன் பொதுவாக ஓரினச் சேர்க்கையாளர்கள் குறித்து பேசிய போது மிகவும் அநாகரிகமாகவும், கேவலமாகவும் பேசினார்கள். ஆகையால் என் அச்சம் இன்னும் அதிகரிக்கிறது? நான் என்ன செய்ய?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஹாய்!

ஹாய்!

நீங்கள் இன்னும் பதின் வயதை கூட தாண்டவில்லை. உங்கள் வாழ்வில் காதலோ, அல்லது நீங்கள் இதுவரை ஓரினச்சேர்க்கையாளராக எந்த ஒரு துணையுடனும் இணையவில்லை. ஆனால், உங்களுக்கு நீங்கள் ஒரு ஓரினச் சேர்க்கையாளராக இருந்துவிடுவீர்களோ என்ற அச்சம் மட்டும் இருக்கிறது.

தவறல்ல...

தவறல்ல...

முதலில் உங்களிடம் ஒரு உண்மை சொல்ல வேண்டும். இயற்கைக்கு மாறானது என்ற போதிலும், நீங்கள் பயப்படும் அளவிற்கு ஓரினச் சேர்க்கையாளர்கள் என்பது அபாயமானது அல்ல. மேலும், நாம் விரும்பும் ஒரு விஷயத்தை கண்டு நமக்கு அச்சம் ஏற்படாது.

ஒருவேளை, நமக்கு அச்சம் ஏற்படுகிறது எனில் நாம் அதை உண்மையாக விரும்பவில்லை என்பதே பொருளாகிறது. ஆம், ஏதோ ஒரு காரணத்தால், உங்களுள் ஏற்பட்ட ஏதேனும் ஒரு தாக்கத்தினால், நீங்கள் தவறாக ஓரினச்சேர்க்கையாளர் என்ற கருதிக்கொள்கிறீர்கள்.

தாக்கம்!

தாக்கம்!

திரைப்படம், ஆன்லைன் வீடியோக்கள் அல்லது நிஜத்தில் யாராவது பெண், பெண்ணுடன் உறவுக் கொண்டது போன்ற பிம்பம் உங்கள் மனதில் ஒருவித தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம். அதுக் கொண்டு பெண்கள் மீதோ, பெண்கள் உடல்வாகு மீதோ உங்களுக்கு விருப்பம் உண்டாகியிருக்க வாய்ப்புகள் உண்டு. இத்தகைய தாக்கங்கள் தற்காலிகமானவை. மேலும், காதலை உணரும் அளவிற்கு நீங்கள் முதிர்ச்சி அடையவில்லை.

தவறான கண்ணோட்டம்!

தவறான கண்ணோட்டம்!

பெரும்பாலானோர் ஓரினச் சேர்க்கையாளர்களை செக்ஸ் தொழிலாளர்கள் போல காண்பது, அருவருக்கத்தக்க பார்வையில் காண்பது மிகவும் தவறானது.

ஒரு ஆணும், பெண்ணும் காதலித்தால், அவர்கள் செக்ஸில் மட்டுமே ஈடுபடுவார்கள் என்ற எண்ணம் நமது மனதில் ஏற்படுவது இல்லை. ஆனால், ஓரினச்சேர்க்கையாளர்களை மட்டும் ஒருவிதமான கருத்தியல் மற்றும் கூண்டுக்குள் அடைப்பது தவறானது.

ஓரினச்சேர்க்கையாளர்களுக்குள்ளும் காதல் இருக்கிறது. ஆண், பெண் காதல் போல அவர்களும் ஒருவரை நேசிப்பார்கள், அரவணைத்துக் கொள்வார்கள்.

ஈர்ப்பு!

ஈர்ப்பு!

உடல் ரீதியான, செக்ஸ் ரீதியான ஈர்ப்பு மற்றும் மாற்றங்கள் பதின்ம வயதுகளில் உடலில் சுரக்கும் புதிய ஹார்மோன்கள் காரணமாக உருவாவது இயற்கை. அது ஆண், பெண் உடல் உறுப்புகள் மீதானவையாக இருபாலருக்கும் ஏற்படும்.

உங்களுக்கும் அப்படியான ஒரு மாற்றமாக தான் இதை காண முடிகிறது. ஒருவேளை, நீங்கள் உண்மையாகவே ஓரினச் சேர்க்கையாளராக இருந்திருந்தால், உங்களுக்கு இதுக்குறித்த அச்சம் பிறந்திருக்காது. அதை நீங்கள் அனுபவித்திருப்பீர்கள்.

தியானம்!

தியானம்!

உடலில் ஏற்படும் இந்த ஹார்மோன் மாற்றத்தின் காரணமாக சிலர் செக்ஸ் சார்ந்த அடிக்டாக மாறிவிடுவார்கள். இதனால், அதிகம் சுய இன்பம் காண்பது, ஆபாசப் படங்கள் பார்ப்பது என தங்கள் எண்ணங்களை வேறு பாதைகளில் அதிகம் செலுத்துவார்கள். உங்களுக்குள்ளும் இந்த தாக்கம் இருக்கலாம். ஒருவேளை இருந்தால், தியானம் அல்லது யோகா போன்ற மனதை ஒருநிலைப்படுத்தும் விஷயங்களில் ஈடுப்படுத்தி அந்த எண்ணங்களில் இருந்து வெளிவாருங்கள்.

வேறு என்ன செய்யலாம்...

வேறு என்ன செய்யலாம்...

ஒருவேளை தியானம், யோகா போன்றவற்றில் உங்களுக்கு ஈடுபாடில்லை என்றால்.. மனதை ஒருநிலைப்படுத்த வேறு சில வழிகளும் இருக்கின்றன.

உங்களுக்கு பிடித்த விஷயங்களில் அதிக கவனம் செலுத்தலாம், அதில் கூடுதல் பயிற்சிகளில் ஈடுபடலாம். உங்களுக்கு ஏதாவது விளையாட்டு, ஆன்லைன் கேம்ஸ், புத்தகம் வாசிப்பது, இசை வாசிப்பது போன்ற விருப்பங்கள் இருந்தால், அதில் அதிக கவனம் செலுத்துங்கள், பயிற்சி மேற்கொள்ளுங்கள். இது உங்கள் மனதில் இருக்கும் செக்ஸ் அல்லது கவர்ச்சி சார்ந்த எண்ணங்களை குறைக்கும்.

தனிமை வேண்டாம்...

தனிமை வேண்டாம்...

பெரும்பாலும் நீங்கள் இந்த எண்ணங்களில் இருந்து வெளிவரும் வரை, உங்களுக்குள் மாற்றம் ஏற்படும் வரை அதிக நேரம் தனிமையில் இருக்க வேண்டாம். தனிமை உங்களை மீண்டும் அந்த தவறான எண்ணத்திற்குள் தள்ள வாய்ப்புகள் உண்டு.

ஒருவேளை, உங்கள் மனதில் எழுந்திருப்பது செக்ஸ் அல்லது கவர்ச்சி சார்ந்த எண்ணங்கள் தான் எனில், இவற்றை நீங்கள் சரியாக கடைப்பிடித்து வந்தால் நல்ல மாற்றம் காண இயலும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Secret Confession: Im Just in the End of Teen. But, I Feel Like a Lesbian!

Secret Confession: Im Just in the End of Teen. But, I Feel Like a Lesbian!