Latest Updates
-
சனி ஜெயந்தி நாளில் உருவாகும் புதாதித்ய ராஜயோகம்: இந்த 3 ராசிக்கு வெற்றியும், பணமும் குவியப்போகுது! -
புதன் ரிஷப ராசிக்கு செல்வதால் இந்த 3 ராசிக்காரங்கள ஆபத்தும், நஷ்டமும் துரத்தப்போகுதாம் - உங்க ராசி என்ன? -
ராஜ்மாவை ஒருடைம் இப்படி கிரேவி செய்யுங்க.. மட்டன் கிரேவியே தோத்துப் போயிடும்... -
சனி ஜெயந்தி அன்று சனிபகவானை இந்த மாதிரி வழிபடுங்க - உங்கள் பாவமெல்லாம் மன்னிக்கப்படும் -
பெட்ரோல், டீசல் விலை அதிரடி உயர்வு! சாமானிய மக்களின் பட்ஜெட் இனி என்னவாகும்? அதிர்ச்சியில் வாகன ஓட்டிகள்! -
அங்கமாலி மாங்கா கறி ரெசிபி - இதை ஒரு தடவை செஞ்சு பாருங்க, வேற லெவல் சுவையில் இருக்கும் -
Shani Jayanti 2026: சனி ஜெயந்தி நாளில் இந்த பரிகாரங்களை செய்யுங்க.. ஏழரை சனியின் தாக்கம் குறையும்.. -
உன்னாவ் வழக்கு: அதிகாரத்தின் பிடியில் சிக்கிய நீதி! குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை உறுதி - பாதிக்கப்பட்டவர்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வெற்றி! -
உலகிலேயே எந்த நாட்டில் பெட்ரோல் அதிக விலையில் விற்கப்படுகிறது? பாகிஸ்தானில் பெட்ரோல் விலை எவ்வளவு தெரியுமா? -
தலைமுடி அடர்த்தியா நீளமா வளரணுமா? அப்ப சித்த மருத்துவர் கூறும் இந்த 3 கீரைகளை சாப்பிடுங்க..!
முன்னாள் காதலிக்காக வலி மிகுந்த ஆணுறுப்பு சிகிச்சை மேற்கொள்ள இருந்த ஜான் சீனா, ஏன்?
முன்னாள் காதலிக்காக வலி மிகுந்த ஆணுறுப்பு சிகிச்சை மேற்கொள்ள இருந்த ஜான் சீனா, ஏன்?
நடிகரும், WWE சண்டை வீரருமான ஜான் சீனா உலகின் பெரும் பிரபலமாக திகழ்ந்து வருகிறார். இவரும், WWE சண்டை வீரர் மற்றும் ஃபிட்னஸ் ட்ரெய்னரான நிக்கி பெல்லா திருமணம் செய்துக் கொள்ள போவதாக முடிவு செய்திருந்தனர். டேட் செய்து வந்த நிக்கி பெல்லாவை WWE ரிங்கில் வைத்து பிரபோஸ் செய்தார் ஜான் சீனா.
ஜான் சீனா ஏற்கனவே எலிசபத் என்ற பெண்ணை 2009ல் திருமணம் செய்து, பிறகு மூன்றே ஆண்டுகளில் விவாகரத்து செய்தவர். அதுமட்டுமின்றி, குழந்தை பெற்றுக் கொள்ள விருப்பம் இன்றி, ஜான் சீனா vasectomy எனப்படும் விதை நாள அறுவை சிகிச்சை செய்துக் கொண்டவர். இதனால், ஜான் சீனாவால் குழந்தை பெற உதவ இயலாத நிலை இருந்தது.

வலி மிகுந்தது!
நிக்கி பெல்லாவை காதலித்து வந்த ஜான் சீனா, ஒரு தருணத்தில் இருவரும் திருமண பந்தத்தில் இணைய முடிவு செய்தனர். மேலும், இதனால் நிக்கி பெல்லா குழந்தை பெற்றுக் கொள்ள தான் தயாராக இருக்க வேண்டும் என்பதற்காக vasectomy சர்ஜரியை சரி செய்து மீதும் குழந்தை பெற ஆணுறுப்பில் ஒரு வலிமிகுந்த அறுவை சிகிச்சை செய்துக் கொள்ளவும் தயாராக இருந்தார் ஜான் சீனா.

வீடியோ!
தங்கள் திருமணத்தை ரத்து செய்வதாக இருவரும் கூறுவதற்கு முன்னரே எடுக்கப்பட்ட ஒரு வீடியோ காட்சியில் தான். நிக்கி பெல்லா குழந்தை பெற்றுக் கொள்ள நான் எதை வேண்டுமானாலும் தியாகம் செய்வேன் என்று ஜான் சீனா கூறிய தகவல் இப்போது வெளியாகியுள்ளது.
நிக்கி உடன் ஜான் சீனா பங்குபெறுவது போல காட்சிப்படுத்தப்பட்டிருக்கும் அந்த கானொளியில், நிக்கி பெல்லாவிடம் ஜான் சீனா... நான் உன்னை திருமணம் செய்துக் கொள்ள விரும்புகிறேன். காதல் மற்றும் திருமண உறவு என்பது ஒருவருக்கு ஒருவர் விட்டுக் கொடுப்பது, தியாகம் செய்வது. நான், நீ குழந்தை பெற்றுக் கொள்ள என்ன தியாகம் செய்ய வேண்டுமானாலும் தயாராக இருக்கிறேன் என்று கூறியுள்ளார்.

முடியாது..
அப்போது நிக்கி பெல்லா.. ஆனால்.. யு ஹேவ்... என்று பேச துவங்க... குறிக்கிட்ட ஜான் சீனா. எனக்கு தெரியும். என்னால் குழந்தை பெற்று கொள்ள உதவ இயலாத உடல் நிலையில் இருக்கிறேன். அதனால் தான் கூறுகிறேன். அதற்கான சர்ஜரி செய்துக் கொள்ள நான் தயாராக இருக்கிறேன். இதனால், நான் தந்தையாக முடியும் என்று கூறி இருக்கிறார்.

பிரிவுக்கு முன்னர்...
ஜான் சீனா, நிக்கி பெல்லாவுக்கு இடையே நிகழ்ந்த இந்த உணர்ச்சிப்பூர்வமான கலந்துரையாடல், இவர்கள் தங்கள் திருமணத்தை ரத்து செய்வதாக கூறுவதற்கு ஒரு மாதத்திற்கு முன்னர் எடுதத்தாக அறியப்படுகிறது.
திருமணத்திற்கு சில நாட்களே இருக்கும் தருணத்தில் தான் நிக்கி பெல்லா தனது இன்ஸ்டாகிராம் முகவரியில் லைவில் தோன்றி, நானும் ஜான் சீனாவும் இனிமேல் சிறந்த நண்பர்களாக மட்டுமே இருப்போம். இது ஒரு கடினமான காலம் என்று கூறி தங்கள் பிரிவை வெளிப்படையாக அறிவித்திருந்தார்.

பப்ளிக் ஸ்டண்ட்!
சிலர் இவர்கள் இருவரும் நிகழ்த்திய அந்த பிரிவு என்பது ஒரு பப்ளிக் ஸ்டண்ட் என்று கூறுகிறார்கள். ஆனாலும், ஜான் சீனாவின் உடல்நிலை குறித்து கூறப்பட்டவை நூறு சதவிதம் உண்மை என்றும். அது ஊடகத்தில் பரபரப்பு ஏற்படுத்த கூறியவை இல்லை என்றும் கூறப்படுகிறது.

சகோதரி!
இதற்கு நடுவே நிக்கி பெல்லாவின் ட்வின் சகோதரியான பிரீபெல்லா.. ஜான் சீனா நிக்கி ஜோடிக்கு சிறிது கால அவகாசம் தேவைப்படுகிறது. அவர்கள் தங்கள் உறவு குறித்து தீர்க்கமான முடிவு எடுக்க ஆலோசித்து வருகிறார்கள் என்றும் கூறி இருந்தார்.
மேலும், மே மாதம் திருமணம் ரத்தானது குறித்து ஜான் சீனா ஒரு டிவி நிகழ்ச்சியில் பேசிய போது அதற்கு முன் எப்போதும் காணாத அளவுக்கு சோகமாக இருந்தார்.

ஜான் சீனா..
ஜான் சீனா தான் அளித்த ஒரு பேட்டியில் தனது உறவு மற்றும் காதலி பற்றி கூறியதாவது...
இது மிகவும் கடுமையான காலமாக கருதுகிறேன். யாருக்கு வேண்டுமானாலும் இந்த சூழல் ஏற்படலாம். இது மிகுந்த மன வருத்தத்தை ஏற்படுத்துகிறது. என் தற்போதைய வாழ்க்கை மற்றும் உறவை குறித்து யூகித்து கொண்டிருக்கும் அனைவருக்கும் நான் ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன். நான் இப்போதும் நிக்கி பெல்லாவை காதலிக்கிறேன். சில தவிர்க்க முடியாத சூழல் காரணமாக எங்கள் உறவு முடிவுற்றது.
கடந்த சில நாட்களாக எங்கள் உறவு மற்றும் என்னை குறித்து நிறைய செய்திகள் பரவி வருகின்றன. ஜான் சீனா மீண்டும் சிங்கிள் வாழ்க்கையில் சந்தோஷமாக இருக்கிறார் என்றெல்லாம் கூறுகிறார்கள். ஆனால், அப்படி இல்லை. இன்னும் இரண்டு வாரங்களில் (பிரிவுக்கு முன்னர்) நானும் நிக்கியும் திருமணம் செய்துக் கொண்டு தேனிலவுக்கு செல்ல இருந்தோம். கடந்த 15 வருடங்களில் அது தான் நான் திட்டமிட்டிருந்த முதல் பயணம். ஆனால், இப்போது நான் என் வீட்டில் தனியாக இருக்கிறேன். என்னை சுற்றிலும் சோகமான நினைவுகள் சூழ்ந்துள்ளன.
எனக்கு யாரும் வேண்டாம். நான் நிக்கி பெல்லாவை தான் காதலிக்கிறேன். நான் அவளுக்கு உறுதுணையாக இருக்க விரும்புகிறேன். அவளுக்கு என்னவெல்லாம் வேண்டுமோ அதை எல்லாம் ஏற்படுத்தி கொடுக்க நான் முயற்சிக்கிறேன். எதனால் நாங்கள் பிரிந்தோம் என்று தெரியவில்லை. ஒரு நாள் நாங்கள் மீண்டும் இணைவோம் என்பதை தவிர எனக்கு வேறு எந்த நம்பிக்கையும் இல்லை என்று ஜான் சீனா வருத்ததுடன் கூறி இருந்தார்.



Click it and Unblock the Notifications