வாட்ஸ்அப், பேஸ்புக்கில் காதலை சொன்னால் பெண்களுக்கு உங்களை பிடிக்குமா?...

Subscribe to Boldsky

ஒரு பெண்ணுடன் நீண்ட வருடங்களாக நட்புடன் பழகி வந்திருக்கலாம். இறுதியாக உங்கள் மனதில் எப்போதும் போல் ஒரு கேள்வி எழும். அவள் ஏன் எனக்கு மனைவியாக வரக் கூடாது? ஆம், இந்த கேள்வி மனதில் உதித்தவுடன், இதை எப்படியாவது அவளிடம் சொல்ல வேண்டும் என்று மனம் துடிக்கும். ஆனால் எப்படி சொல்வது? பழைய காலம் போல் புறாவை தூது அனுப்ப முடியுமா? இல்ல, கடிதம் மூலம் தெரிவிக்கலாமா? அல்லது வாட்சப்பில் மெசேஜ் அனுப்பலாமா? ஏன் இதற்கெல்லாம் கவலை. இருக்கவே இருக்கிறது இன்றைய சமூக ஊடகங்கள். இவற்றின் வழியாக உங்கள் காதலை சொல்லலாம். ஆனால் மிகவும் கடினமாக, இல்லாமல் மிகுந்த இயல்பாக உங்கள் காதலை அவரிடம் வெளிப்படுத்த முயற்சிக்கலாம்.

relationship in tamil

சமூக ஊடகம் வழியாக உங்கள் காதலை சொல்வதற்கான வழிகளைப் பற்றிய சில குறிப்புகள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளது. அவற்றைப் படித்து தெரிந்து கொண்டு முயற்சியுங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வீடியோ அனுப்புங்கள்

வீடியோ அனுப்புங்கள்

உங்கள் வாழ்க்கையை சிறப்பாகச் செய்யும் ஒருவருக்காக ஒரு சிறந்த வீடியோவை தயாரியுங்கள். வெறும் ஒரு குறுஞ்செய்தியாக நான் உன்னை திருமணம் செய்து கொள்ள நினைக்கிறேன் என்ற வார்த்தைகள் நல்ல பலனைக் கொடுக்காமல் போகலாம். நீங்கள் அவருடன் இருக்கும் நேரம் மகிழ்ச்சியாக இருக்கிறீர்கள் என்பதை அவருக்கு உணர்த்தும் விதத்தில் ஒரு அழகான வீடியோவை உருவாக்குங்கள். நீங்கள் அவரை மிகவும் நேசிக்கிறீர்கள், அவருடன் உங்கள் வாழ்நாள் முழுவதும் இருக்க விரும்புகிறீர்கள் என்பதை தனிப்பட்ட முறையில் அவருக்கு உணர்த்தும் விதத்தில் இந்த விடியோவை உருவாக்குங்கள். அந்த வீடியோவில் நீங்கள் அவரை விரும்புவதை குறிப்பிடுங்கள். உங்கள் வாழ்நாள் முழுவதும் அவருடன் இருக்க வேண்டும் என்ற விருப்பத்தை உணர்த்துங்கள்.

நீங்கள் அவருடன் இருப்பதை எந்த அளவிற்கு விரும்புகிறீர்கள் என்பதை அவருக்கு கூறுங்கள். உங்கள் காதலின் ஆழத்தை அவருக்கு புரிய வையுங்கள். உங்கள் இருவரின் விருப்பத்திற்கு ஏற்ற வகையில் நகைச்சுவையாகவோ அல்லது இசை மூலமாகவோ உங்கள் காதலை அவருக்கு வெளிபடுத்துங்கள். நீங்கள் அவருடன் இருக்கும் நேரம் எவ்வளவு அழகானது என்பதை உணர்த்துங்கள். அவர் உங்கள் காதலை ஏற்றுக் கொள்ளும் வகையில் எல்லா நேர்மறை எண்ணங்களோடும் இந்த வீடியோவை தயாரியுங்கள்.

சொந்தமாக ஒரு பாடலை உருவாக்குங்கள்.

சொந்தமாக ஒரு பாடலை உருவாக்குங்கள்.

நீங்கள் ஒரு இசைக்கலைஞரா ?ஆம் என்றால், உங்கள் காதலிக்கு ஒரு பாடலை பதிவு செய்து சமூக ஊடகத்தில் போஸ்ட் செய்யலாம். இந்த பாடலை அவருடைய தனிப்பட்ட கணக்கிற்கு அனுப்பி, அவரை நீங்கள் விரும்புவதையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்ற நினைப்பதையும் அவருக்கு தெரிவியுங்கள். ஒரு வேளை இந்த பாடல் வைரல் ஆவதால், நீங்கள் இன்னும் மகிழ்ச்சி அடையலாம். இதன் மூலம் உங்கள் காதலி மீது நீங்கள் கொண்டுள்ள காதலின் ஆழத்தை உலகில் உள்ள அனைவராலும் புரிந்து கொள்ள முடியும்.

எது சரியான நேரம்?

எது சரியான நேரம்?

மேலே கூறிய முறைகள் அனைத்தும் ஒரு [பெண்ணிடம் காதலைக் கூற சிறப்பான யோசனையாகும். ஆனால் எந்த நேரத்தில் உங்கள் காதலை அறிவிக்க வேண்டும் என்பதை நீங்கள் உறுதி படுத்திக் கொள்ள வேண்டும். சரியான நேரத்தில் உங்கள் காதலை தெரியப்படுத்த வேண்டும். உங்கள் காதலியின் சௌகரியத்தை உறுதி செய்து கொள்ளுங்கள். நீங்கள் அவருடன் எப்போதும் இருப்பதை அவருக்கு தெரியப்படுத்துங்கள். நீங்கள் அவரை நேரில் காண முடியாத தருணங்களில் சமூக ஊடகம் மூலம் அவரைப் பின்தொடர்வதால் உங்கள் அருகாமை அவருக்கு இருப்பதாக அவருக்கு தோன்றச் செய்யுங்கள். இதன் மூலம் உங்கள் நெருக்கம் மேலும் அதிகரிக்கலாம். மேலும் அவருக்கு சில சிறந்த செய்திகளை சமூக ஊடகம் மூலம் பரிமாறலாம்.

ஓவியத்தை உருவாக்கலாம்

ஓவியத்தை உருவாக்கலாம்

ஆன்லைன் மூலம் சில அழகான ஓவியத்தை உருவாக்கலாம். ஒரு அழகான ஓவியம் மூலம் உங்கள் காதலை வெளிபடுத்துவது வாழ்நாள் முழுவதும் மறக்க முடியாத உணர்வைத் தரும். காதல் உறுதியானவுடன் இதே ஓவியத்தை அவருக்கு நிஜமாகவே பரிசளிக்கலாம். இதற்காக ஓவியரிடம் கூட ஆலோசனைக் கேட்கலாம். உங்கள் ஓவியத்திற்கு ஏற்ற அழகான வாசகங்களை எழுதி அதனுடன் இணைக்கலாம். இது உங்கள் காதலிக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கும் ஒரு அன்பளிப்பாக இருக்கலாம்.

ப்ரைவேட் சாட்

ப்ரைவேட் சாட்

சமூக ஊடகத்தில் ப்ரைவேட் சாட்டிங்கிற்கு அவரை அழைக்கலாம். இதன்மூலம் நீங்கள் அனுப்பும் செய்தியை அவர் மட்டும் படிக்க முடியும். இது அவருக்கும் பொருந்தும். அவரின் சந்தோசம் இதில் மிக முக்கியம் என்பதால் இருவரும் தனிப்பட்ட கருத்துகளை எளிதில் பகிர்ந்து கொள்ள முடியும். மேலும் உங்கள் காதலை அவருக்கு எளிதில் புரிய வைக்கவும் முடியும்.

வெளியிடம்

வெளியிடம்

உங்கள் காதலியை ஒரு சமூக ஊடக நிகழ்ச்சிக்கு வருவதற்கு அழைப்பு விடுங்கள். பேஸ் புக் வழியாக உங்கள் காதலை சொல்ல, பேஸ்புக்கில் நீங்கள் பரிந்துரைத்த ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு அவரை வரவழையுங்கள் . இதற்கு ஒரு தனிப்பட்ட அர்த்தம் மற்றும் மதிப்பு இருப்பதை அவருக்கு உணர்த்துங்கள். அவர் மகிழ்ச்சியாக இருக்க நீங்கள் எதாவது செய்ய விரும்புகிறீர்கள் என்பது அவருக்கு புரியும். நீங்கள் மகிழ்ச்சியாக உணர்வீர்கள்.

மேலே கூறிய எல்லா குறிப்புகளும் உங்கள் காதலிக்கு உங்கள் காதலை அழகாக உணர்த்தும். உங்கள் முயற்சிகளுக்கு எங்கள் வாழ்த்துக்கள். உங்கள் சிறப்பான காதலை அவர் ஏற்றுக் கொள்ள எங்கள் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    How to Propose Your Crush on Social Media?

    Today you can get on social media to propose to her. But you need to know how to propose your crush online if you want to make it all work. You should plan your proposal well without being too hard or tough.
    Story first published: Wednesday, June 20, 2018, 11:35 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more