காதலின் ஈர்ப்பினால் இப்படியும் நடக்குமா? ஆச்சரியப்படுத்தும் தகவல்கள்

Posted By:
Subscribe to Boldsky

ஊனுருக உயிர் உருக காதலிப்பது இருக்கட்டும் அதற்கு முன் ஒரு பருவம் இருக்குமே.... வாழ்க்கையில் மிகவும் சுவாரஸ்யமான ஓர் பருவமாக பார்க்கப்படுகிறது. நீங்கள் மட்டும் காதல் கொண்டு எதிர் தரப்பிடம் சொல்லாமல், சொல்லத் தயங்கி நின்ற காலங்கள் எல்லாம் என்றும் நெஞ்சில் பசுமையாய் நிற்கும்.

ஒரு சின்ன பொறி, பார்த்ததும் தட்டும் இந்த நபரை பார்த்துக் கொண்டேயிருக்க வேண்டும்.... என்று தோன்றும் அதற்காக உங்களுடைய பழக்க வழக்கங்களையே மாற்றிக் கொள்ளத் துணிவீர்கள். அதனை அஃபேர்,க்ரஷ் என்று சொல்கிறோம்.

அப்படி அடையாளப்படுத்தும் அஃபேர் ஏற்பட்டால் உங்களிடம் என்னென்ன மாற்றங்கள் தெரியும் தெரியுமா? சில மாற்றங்களைக் கொண்டே அதனை கண்டுபிடிக்கலாம். இந்த கட்டுரையில் அடுத்தடுத்து வருகிறவற்றில் உங்களுக்கு பொருந்துகிற ஏதேவது ஓர் அடையாளம் இருக்கிறதா என்று பார்த்திடுங்கள். அவை எல்லாம் உங்கள் வாழ்க்கையில் நடந்திருந்தால் நீங்களும் காதல் வயப்பட்டிருக்கிறீர்கள் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சின்னஞ்சிரு ரகசியம் :

சின்னஞ்சிரு ரகசியம் :

அந்த நபருக்கும் உங்களுக்கு நிறைய ரகசியங்கள் இருக்கிறது... இருக்க வேண்டும் என்று நினைப்பீர்கள். ரகசிங்கள் இருப்பதால் உங்கள் இருவருக்குள்ளும் அன்னியோன்னியம் அதிகரிக்கும், அந்த நபரைப் பற்றி பிறருக்குத் தெரியாத விஷயம் எனக்கு மட்டும் தெரிந்திருக்கிறது என்ற எண்ணம் உங்களை மகிழ்ச்சிப்படுத்தும்.

இந்த எண்ணம் சற்று கூடுதலாகும் போது தான், இந்த உறவில் சிக்கல் ஏற்படும். நாமாகவே என்னை ஏமாற்றிவிட்டான் என்று கற்பித்துக் கொண்டு சோகத்தில் மூழ்கிடுவோம்.

குழப்பம் :

குழப்பம் :

அந்த நபரைப் பற்றிய குழப்பமான மனநிலையை கொண்டிருப்பீர்கள். அவனுக்கு என்ன நடந்து கொண்டிருக்கும், என்ன செய்து கொண்டிருப்பான் போன்ற அவனைப் பற்றிய சிந்தனைகள், தொடர்ந்து ஒருவரைப் பற்றிய சிந்தனைகள் அதிகமாக இருந்தால் அதுவும் தீர்க்கமான ஓர் முடிவாக இல்லாமல் குழப்பமானதாக இருந்தால் கன்ஃபார்ம் செய்திடலாம்.

ஒப்பீடு :

ஒப்பீடு :

இது எல்லாரிடத்திலும் இருக்குமென்றாலும் இந்த நபரிடம் சற்று அதிகமாக இருந்திடும். ஒப்பீடுகள் கொஞ்சம் கூடுதலாக இருக்கும் என்பதால் இதில் கொஞ்சம் . பார்ட்னர் என்று சொன்னதும் அந்த உறவு உறுதியாகவில்லை என்றாலும் ஒப்பீடு உங்கள் நாட்களை கடினமாக்கும்.

பகல் கனவு :

பகல் கனவு :

அன்றாட வேலைகளில் ஒன்றாகவோ அல்லது தொடர்ந்து பகல் பொழுதுகளில் கனவு அதிகம் காண்பீர்கள் தினமும் செய்கிற வேலைகளில் உங்கள் கவனம் நிலைக்காது, பெரும்பாலும் பகல் கனவு காணும் நீங்கள் ஃபேண்ட்சி விஷயங்களை நினைத்து, அல்லது எதிர்காலம் குறித்த கனவுகளிலேயே மூழ்கிக் கிடப்பீர்கள்.

இப்படி எப்போதும் பகல் நேரத்தில் ஏதாவது ஒரு கற்பனையில் இருந்தால் நீங்கள் யார் மீது ஈர்ப்பு கொண்டிருக்கிறீர்கள் என்று அர்த்தம்.

எல்லாமே தனிமையில் :

எல்லாமே தனிமையில் :

உங்களுடைய செய்கைகளில் மாற்றங்கள் தெரியும், தனிமையில் இருக்க அதிகம் விரும்புவீர்கள். தனிமையில் யோசிப்பதும்,தனிமையில் உட்கார்ந்திருப்பது, தனிமையில் சிரிப்பது இவையெல்லாம் உங்களுக்கு பிடித்தமான விஷயங்களாக இருக்கும்.

உங்களது அன்றாட நடவடிக்கைகளில் மாற்றங்கள் தெரியும். பிற நபர்களிடமிருந்து தனித்து இருக்கவே விரும்புவீர்கள்.

கவனச்சிதறல் :

கவனச்சிதறல் :

எந்த விஷயத்திலும் தொடர்ந்து உங்கள் கவனத்தை குவித்து வைத்திருக்க முடியாது, எந்த விஷயத்தையும் கூர்ந்து கவனிக்க முடியாது, ஒரு நபரிடம் பேசிக் கொண்டிருக்கும் போதே சலிப்பு தட்டலாம். அந்த சலிப்புணர்வை எரிச்சலாக, பேச்சை கவனிக்காதது போல நீங்கள் காட்டுவீர்கள்.

செயல்களில் மாற்றம் :

செயல்களில் மாற்றம் :

உங்களது அன்றாட செயல்களில் ஏரளமான மாற்றங்கள் தெரியும் உங்களது நடை உடை பாவனையிலிருந்து, நீங்கள் பயன்படுத்தும் பொருள், பேசும் தொனி, உடையலங்காரம் என எல்லாமே மாறிடும். அதோடு உங்களுக்கு விருப்பமான செய்கைகளும் வேறுபடும். ஆரம்பத்தில் குத்துப்பாட்டு விரும்பிக் கேட்டவர்கள் திடிரென்று குத்துப் பாட்டு என்றாலே வெறுத்து ஓடுவார்கள்.

புற அழகு :

புற அழகு :

உங்களுடைய அழகு விஷயத்தில் அதிக கவனம் செலுத்துவீர்கள், அழகு சம்பந்தாம, உடல் சம்மந்தமாக நிறைய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவீர்கள். புற அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பீர்கள்.

இதனை பிறர் கவனிக்க வேண்டும், பாராட்ட வேண்டும் என்று விரும்பி அது கிடைக்க வில்லை எனும் போது ஏமாற்றத்துடன் கோபம் கொள்வீர்கள்.

பேச்சு :

பேச்சு :

நீங்கள் பிறர் யாருக்கும் தெரியக்கூடாது என்று நினைத்தாலும், உங்களது பேச்சு அதனை வெளிப்படுத்திவிடும். எப்போதும் அந்த நபரைப் பற்றிய பேச்சுக்கள் உங்களை சுற்றியிருக்க வேண்டும் என்று விரும்புவீர்கள். அந்த நபரைப் பற்றிய தகவல்களை திரட்டியதாக இருக்கலாம், அந்த நபரைப்பற்றிய எந்த தகவலாக இருந்தாலும் நீங்கள் விரும்பி கேட்பீர்கள். தொடர்ந்து ஆர்வத்துடன் அந்த விவாதத்தில் பங்கேற்பீர்கள்.

தவறுகள் :

தவறுகள் :

கவனச்சிதறல் அதிகம் இருக்கும் என்பதால் சின்ன சின்ன தவறுகளை கண்டிப்பாக நீங்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும். அதை சமாளிக்க முடியாமல் பல நேரங்களில் மன்னிப்பும் பல இடங்களில் சோர்ந்தும் நிற்பீர்கள்.

சந்தேகம் :

சந்தேகம் :

இது பெரும் ஆபத்தான நோய், எங்கே தன்னுடைய க்ரஷ் தனக்கு கிடைக்காமல் போய்விடுவானோ என்ற பயம் பிறரிடம் இருப்பதை விட உங்களிடம் அதிகம் இருக்கும்.

க்ரஷிடம் நீங்கள் தொடர்பில் இருந்தாலும், தொடர்ந்து அவர்களை கண்காணிப்பது,மிரட்டுவது, நீங்களாக எதாவது கற்பிதங்களை உருவாக்கிக் கொண்டு சண்டையிடுவது போன்றவற்றால் இந்த உறவில் சிக்கல் நீடிக்க வாய்ப்புண்டு.

அதீத ப்ரியம் :

அதீத ப்ரியம் :

எந்த விஷயமுமே அதிகமாக கொடுத்தால் ஆபத்து தான். காதல் என்பதைத் தாண்டி உங்கள் க்ரஷ்ஷிடம் அதீதப் ப்ரியங்கள் மேலோங்கியிருக்கும். அதன் வெளிப்பாடு உங்களுக்கு தவறு போலத் தெரியாது என்றாலும் உங்களுடைய இணைக்கு மிகவும் கஷ்டமாக தோன்றலாம்.

ப்ரியங்கள் அளவுக்கு அதிகமாக கூடும் போது அதனை சமாளிக்க முடியாமல் திணறி ஒரு கட்டத்தில் உங்களை விட்டு பிரிய நினைத்திடுவார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

hidden signs For an Affair

hidden signs For an Affair
Story first published: Thursday, January 18, 2018, 17:02 [IST]
Subscribe Newsletter