இந்த ‘கிசுகிசு’க்கு பின்னாடி இவ்ளோ விஷயமிருக்கா!!!

Posted By:
Subscribe to Boldsky

நமது மனித மூளை மிகவும் சுவாரஸ்மானது. உற்சாகமான விஷயம் எதுவாக இருந்தாலும் மனம் அதை அதிகம் விரும்பும்.

சாப்பிடுவது, விளையாடுவது, பிடித்தவர்களுடன் பேசுவது, திரைப்படம் பார்ப்பது , கேளிக்கை விடுதிகளுக்கு செல்வது, நண்பர்களுடன் அரட்டையடிப்பது என உங்களுக்கு பிடித்தமான வேலைகளை எது செய்தாலும் மனம் உற்சாகம் கொள்ளும்.

Reasons for why you love gossips

அதே போன்றதொறு உற்சாகத்தை கொடுக்கும் இன்னொரு விஷயம் என்ன தெரியும் கிசுகிசு பேசுவது. இன்னொருவரைப் பற்றி அவர் இல்லாத போது பேசுவது தவறான பழக்கம் என்றாலும் புரணி பேசுவது ஏனோ பிடித்திருக்கிறது.

பேசிக்கொண்டிருப்பவர்களைத் தவிர மூன்றாம் நபரைப் பற்றி பேச்சு எழுகிறது என்றாலே காதை தீட்டும் பழக்கம் நம்மிடமே இருக்கிறது. ஆனால் இதனை வெளியில் சொல்வதற்கு அவ்வளவு கூச்சப்படுவோம்.நம்மைப் பற்றி பிறர் புறம்பேசியிருக்கிறார்கள் என்றாலும் நம்மால் தாங்கிக் கொள்ள முடியாது. இன்னும் சொல்லப்போனால் இந்த உணர்வு ஓர் டிப்ளமேட்டிக் என்றே சொல்லலாம்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
சரிபார்த்தல் :

சரிபார்த்தல் :

மூன்றாம் நபரைப் பற்றி பேசுகையில் நம்மை சரி பார்த்துக் கொள்ள முடியும். அவரின் செயல்களை விவாதமாக கேள்வியெழுப்பும் போது அது சரியென்றும் தவறென்றும் அதனால் ஏற்படும் விளைவுகள் பற்றியும் விவாதிக்க முடிகிறது.

இது நல்லது என்றாலும், தவறான கருத்துக்கள் பகிரும் போதோ அல்லது பொய்களை நம்ப ஆரம்பிக்கும் போதோ தான் இது போன்ற பிரச்சனைகள் எழுந்தால் தான் அதில் சிக்கலே ஆரம்பமாகும்.

பிடிக்காதவர்கள் :

பிடிக்காதவர்கள் :

நமது கருத்துக்களுடன் ஒத்துப் போகாதவர்கள், நம்மிடையே சண்டையிட்டவர்கள் அல்லது வேறு ஏதோ காரணங்களுக்காக ஒருவரை ஒதுக்கி வைத்திருந்தால் அவரைப் பற்றிய தகவல்களை தெரிந்துகொள்வதில் நமக்கு ஆர்வம் மேலோங்கும்.

அவர் என்ன செய்கிறார்? அவரது நடவடிக்கைகளில் ஏதேனும் மாற்றங்கள் தெரிகிறதா? மிக முக்கியமாக நான் இல்லாததை அவர் உணர்கிறாரா என்பன போன்ற கேள்விகள் மனதில் எழும். இந்த சமயத்தில் அவரைப் பற்றிய தகவல்களுடன் யாராவது வந்தால் உங்களை சொல்லவே வேண்டாம்.

 ஸ்ட்ரஸ் பஸ்டர் :

ஸ்ட்ரஸ் பஸ்டர் :

உண்மையிலேயே இது ஒரு ஸ்ட்ரஸ் பஸ்டர் என்று சொல்லப்படுகிறது. ஒருவரைப் பற்றி புறம் பேசுவதைத் தாண்டி சிரித்து மகிழ்வதும், கோபத்தை கொட்டுவதும் என உங்கள் மனதில் தேங்கி வைத்திருப்பதை கொட்டுவீர்கள்.

வெளியில் சொல்ல முடியாமல் மனதில் வைத்திருக்கும் பல விஷயங்கள் தான் உங்களது பல பிரச்சனைகளுக்கு காரணமாய் முடிகிறது.

இப்படி கிசுகிசு பேசுவதால் மனதில் இருக்கும் பாரம் இறங்கி லேசானது போல உணர்வீர்கள். அதனாலேயே அந்த உணர்வு உங்களுக்கு பிடித்திருக்கிறது.

புதிய நட்பு :

புதிய நட்பு :

எதிரியின் நண்பன் நமக்கும் எதிரி என்று சொல்வது போல இருவருக்கும் பிடிக்காத பொதுவான ஆளைப்பற்றி பேசுகையில் உங்கள் இருவருக்குள்ளும் நட்பு நெருக்கமாகவும்.

சில நேரங்களில் ரகசியங்கள் பகிரப்படும் போது நம்பகத்தன்மை அதிகரிக்கும். என்னை இவ்வளவு நம்புவதால் தான் இதெல்லாம் என்னிடம் சொல்கிறார் என்ற எண்ணத்தில் சொல்பவர்கள் மீது உங்களுக்கு நம்பிக்கை உண்டாகும்.

சமூகம் :

சமூகம் :

நமக்குள் பேசிக் கொள்வதில் அவ்வளவாக பிரச்சனைகள் எழாது,ஆனால் அது ஒரு சமூகத்தில் பலரும் பேசும் போது குறிப்பிட்ட நபர் பாதிக்கப்படுவார்.

அதன் தீவிரத்தை உணராமல் தொடர்ந்து பரப்புவதால் அவன் ஏதோ ஒரு குற்றவாளி போல பார்க்கப்படுகிறான். ஒரு விஷயம் குறிப்பிட்ட நபர்களுடன் பேசுவதற்கும் கூட்டத்தில் பொது வெளியில் சொல்வதற்கும், பேசுவதற்கும் நிறைய வித்யாசங்கள் இருக்கின்றன.

தன்னம்பிக்கை :

தன்னம்பிக்கை :

இது உங்களது தன்னம்பிக்கையை வளர்த்திடும். ஆம் அதே போல சமூகத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும். சமூகம் ஆற்றம் எதிர்வினைகளுக்கு எப்படி ரியாக்ட் செய்ய வேண்டும் என கற்றுக் கொள்ளும் ஒரு வாய்ப்பாக அமைந்திடும்.

இது பாசிட்டிவ் பக்கங்கள். ஆனால், தன்னை யாரும் ஏற்றுக் கொள்ளவில்லை,தன்னைப் பற்றி அவதூறாக பரப்புகிறார்கள் பேசுகிறார்கள் என்று அதையே நினைத்துக் கொண்டு மன அழுத்தத்தில் தற்கொலை முடிவுக்கு கூட தள்ளும்.

மனிதர்களை அறியலாம் :

மனிதர்களை அறியலாம் :

ஒருவரை பார்த்ததுமே அவர் நல்லவரா? கெட்டவரா என்று எடை போடுவது மிகவும் கடினமான ஒன்று. அல்லது நாம் ஒன்று நினைத்திருந்தால் அவர் வேறொரு மனப்பாங்க கொண்டுவராக இருப்பர்.

அதே போல அவர் பேசுவதை வைத்து, அவர் பேசும் விஷயங்களை வைத்தும் நீங்கள் அந்த நபரைப் பற்றி தெரிந்து கொள்ள முடியும்.

புதிதாக பழக ஆரம்பித்திருக்கும் உங்களிடமே இவ்வளவு புகார்கள் வாசித்தால் அல்லது சிலரைப் பற்றிய அவதூறுகள், தவறுகள்,அந்தரங்க தகவல்கள் பகிர்ந்தால் நீங்கள் அவரிடம் ஜாக்கிரதையாக இருப்பது அவசியம். இதே போன்று உங்களைப் பற்றி இன்னொருவரிடம் சொல்வார் என்பதை கவனத்தில் கொள்ளுங்கள்.

அறிவியல் :

அறிவியல் :

கிசுகிசு பேசுவதுப் பற்றி என்ன காரணங்களை சொன்னாலும் சமாதானம் ஆகாதவர்கள் அறிவியல் சொல்லும் காரணத்தையும் தெரிந்து கொள்ளுங்கள்.

பிற காரணங்களை நாம் ஏற்கிறோமோ இல்லையோ அறிவியல் சொல்லும் காரணங்களை நாம் நம்பித்தான் ஆக வேண்டும்.

புரணி பேசுவதால் மூளையில் இருக்கும் ப்ரோகெஸ்ட்ரோன் என்ற ஹார்மோன் தூண்டிவிடப்படுகிறது. இதனால் ஸ்ட்ரஸ் குறைந்து மகிழ்ச்சியுடன் இருப்பது போலத் தோன்றும். அவ்வப்போது அலுவலகங்களில் கிடைக்கும் பிரேக்களில் பிற ஊழியர்களைப் பற்றியும் பாஸ் பற்றியும் கிசு கிசு பேசுவதன் ரகசியம் இப்போது புரிகிறதா?

தகவல் பரிமாற்றம் :

தகவல் பரிமாற்றம் :

வேறு எந்த செய்திகள் பரவுகிறதோ இல்லையோ இந்த கிசு கிசு மட்டும் மிக வேகமாக பரவும் எப்படி? யார் மூலமாக? என்றெல்லாம் தெரியாது ஆனால் தீயை விட வேகமாக பரவிடும்.

இது உங்களை விழிப்புணர்வுடன் இருக்கச் செய்திடும். நடக்கிற, கவனிக்கிற செயல்களில் இருந்து பாடம் கற்பவராக இருந்தால் இது ஒரு நல்ல படிப்பினை என்று கூட சொல்லலாம்.

நண்பர்கள் :

நண்பர்கள் :

உங்களுடைய விருப்பங்கள் ஒத்துப்போகிரவர் யார்? என்று அடையாளப்படுத்த முடியும். ஏதோ ஒரு வேலைக்காகவே பிறரைப் பற்றி புறம்பேசப்படுகிறது. அப்படி பேசுகையில் பெரும்பாலும் பொய்களே அதிகம் பரவுகிறது இதனால் தான் கிசுகிசு பேசுவதில் பிரச்சனைகள் எழுகின்றன.

இங்கே எனக்கு பிடிக்காதவர்களைப் பற்றி பேசுகிறேன் என்று சொல்வது மட்டும் பிரச்சனையல்ல நமக்கு பிடித்தவர்களைப் பற்றியும் நம்முடன் இருப்பவர்களையும் பேசுவதால் தான் பிரளயமே உண்டாகிறது. யார் நண்பன் யார் துரோகி என்று ஒன்னும் நம்மால் பிரித்துணர முடியவில்லை.

கதை சொல்லி :

கதை சொல்லி :

ஒரு விஷயத்தை இன்னொருவருக்கு கடத்தும் போது எப்போதும் அதில் உங்களுடைய கற்பனையும் சேர்ந்தே தான் இருக்கும்.

கிசுகிசு பேசும் போது சொல்லவே வேண்டாம். நடக்காத ஒரு விஷயத்தை நடந்தது போல நாமே கற்பனை செய்து நடந்த போல ஒவ்வொரு நொடியையும் விவரித்து கூறுவது இங்கே சாத்தியம்.

சம்பவங்களை கற்பனையில் விவரித்து பேசுவது ஒருவருக்கு எளிதாக புரியும் அதன் தாக்கம் அப்படியே போய் சேரும் என்று நீங்கள் நினைத்துக் கொண்டிருக்கும் அதே வேலையில் நீங்கள் எதிர்ப்பார்ககத தாக்கத்தை கூட ஏற்படுத்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Reasons for why you love gossips

Reasons for why you love gossips
Subscribe Newsletter