ஆண்கள் பல பெண்களுடன் உறவில் இணைய முயல்வதற்கான 7 காரணங்கள்!

Posted By:
Subscribe to Boldsky

ஆண்களில் பலர் மனதளவிலும், சிலர் உடலளவிலும் பல பெண்களுடன் உறவில் இணைய விருப்பம் காட்டுவார்கள். இது ஆண்களின் உலகில் மிகப்பெரிய சுவாரஸ்யமாக இருந்து வருகிறது பல காலமாக.

பெண்களுடன் ஒப்பிடும் போது ஆண்கள் தான் பலருடன் உறவில் இணைய அதிகம் விருப்பமும், ஈடுபாடும் காண்பிக்கின்றனர் என சர்வதேச ஆய்வறிக்கைகள் கூறுகின்றன.

அப்படி எதனால் ஆண்கள் இப்படி இருக்கிறார்கள் என சிந்திக்கும். அதற்கு ஏழு முக்கிய காரணங்கள் இருக்கிறது என கூறுகின்றனர்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
#1

#1

ஆண்கள் தனது ஆஜானுபாகுவான பிம்பத்தை பெண்கள் மத்தியில் நிலைநிறுத்த தான் இப்படி பல பெண்களுடன் உறவில் இணைய விரும்புகின்றனர் என முதல் காரணம் கூறப்படுகிறது.தன்னால ஒரே நேரத்தில் பல பெண்களை ஆள முடியும் என்பதை ஆண்கள் கர்வமாக, பெருமையாக கொண்டிருக்கின்றனர்.

#2

#2

ஆண்களில் யாருக்கெல்லாம் திருமண வாழ்க்கை நினைத்தது போல அமையவில்லையோ அவர்கள், பல பெண்களுடன் உறவில் இணைய விருப்பபடுகின்றனர். உடலுறவு ரீதியாகவோ, மன ரீதியாகவோ தன் துணையிடம் இருந்து கிடைக்காத ஒன்ற மற்ற பெண்களிடம் இருந்து கிடைத்தால் இந்த தவறை ஆண்கள் அதிகமாக செய்கின்றனர்.

#3

#3

அளவுக்கு அதிகமாக சொத்து இருக்கும் ஆண்களில் சிலர் பெண்களையும் விலைபேசி வாங்கிவிடலாம் என்ற எண்ணம் கொண்டிருக்கின்றனர். இதில் ஆச்சரியம் என்னவெனில், விலைக்கு போகும் பெண்களும் சிலர் இருக்கின்றனர். பணம் என்ற போதை உறவு எனும் புனிதத்தை கொன்று தின்றுவிடுகிறது.

#4

#4

ஆண் ஆதிக்கம் கொண்ட சமூகங்களில் இது மிகவும் இயல்பாக காணப்படுகிறது. பெண்களை அடிமைப்படுத்தி, கட்டுப்படுத்தி வாழும் ஆண்கள், பல பெண்களுடன் உறவில் இணைவது தனது அந்தஸ்தை குறிப்பதாக பார்கின்றனர்.

#5

#5

ஆபாசப்படங்களுக்கு அடிமையாகி இருக்கும் ஆண்கள் பலர் பல பெண்களுடன் இனைய வேண்டும் என்றும், பெண்களை ஏமாற்றி மகிழ வேண்டும் என்ற இச்சை எண்ணத்தில் மூழ்கி இவ்வாறான செயல்களில் ஈடுபடுகிறார்கள்.

#6

#6

சமூக தளங்களின் உறுதுணையுடன் இன்றைய மாடர்ன் ஆண்கள் எளிதாக பல பெண்களுடன் உறவில் இணைய முயல்கின்றனர். குறிப்பாக மேற்கத்திய மோகம் மற்றும் பார்ட்டிகளில் ஈடுபடும் பெண்களை குறிவைத்து தூக்க ஒரு கும்பலே இருக்கிறது.

#7

#7

எல்லாவற்றுக்கும் ஆண்களே காரணமாக இருப்பதில்லை. ஒருசில தருணங்களில் ஆண்களை மயக்க நினைக்கும் பெண்கள், தவறான உறவில் இணைய ஈடுபாடு காட்டும் பெண்கள் வலைவிரிக்கும் போதும், அவர்களிடம் ஒரு வாய்ப்பு கிடைக்கிறது எனும் போது ஆண்கள் தயக்கம் காட்டுவதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Seven Reasons Why Men Want Multiple Relationships!

Seven Reasons Why Men Want Multiple Relationships
Story first published: Tuesday, June 27, 2017, 17:24 [IST]