ஆன்லைனில் டேட்டிங் செய்வதால் ஏற்படும் விளைவுகள் பற்றித் தெரியுமா ?

By: Suganthi Ramachandran
Subscribe to Boldsky

பெண்கள் தங்கள் பார்ட்னருடன் ஆன்லைனில் டேட்டிங் செய்வதால் பலவிதமான பிரச்சினைகள் வந்து சேருகின்றனர். கண்காணித்தல், கட்டுப்படுத்துதல், அச்சுறுத்தல், மன அழுத்தம் போன்றவை டிஜிட்டல் மீடியாக்களால் ஏற்படும் அபாயம் உள்ளது. அதிகமான உணர்வுப் பாதிப்புகள் ஆண்களை விட பெண்களுக்கு தான் அதிகமாக ஏற்படுகின்றனர்.

எப்படி இருந்தாலும் டிஜிட்டல் டேட்டிங் பழக்கம் இளைஞர்களிடையே பெரும் பாதிப்பை ஏற்படுத்தும் இதற்கு பாலினம் என்பது முக்கியம் இல்லை என்று லாரன் ரீட், அசிஸ்டெண்ட் புராஜெக்ட் சைன்டிஸ்ட் அட் யுனிவர்சிட்டி ஆஃப் கலிபோர்னியா - சான்டா பார்பரா விலிருந்து சொல்கிறார்.

ஆன்லைன் டேட்டிங்கில் செக்ஸஷூவல் செயல்களால் நீங்கள் பிறரால் கண்காணிக்கப்பட்டு கட்டாயப்படுத்தபடலாம்.

Effects Of Online Dating Abuse

இதனால் ஏற்படும் மிரட்டல்கள் மற்றும் செயல்கள் உங்களை மிகுந்த பாதிப்புக்கு உள்ளாக்கும். செக்ஸ் போட்டோக்கள் அனுப்புதல், அச்சுறுத்தும் படியான மெசேஜ், உங்கள் தனிப்பட்ட விஷயங்களை உங்களுக்கே தெரியாமல் நோன்டுதல், நீங்க எங்கே சென்றாலும் அங்கே உங்கள் செயல்களை கண்காணித்தல் போன்ற மோசமான விளைவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.

இந்த டிஜிட்டல் டேட்டிங் விஷயத்தில் ஆண்கள் பெண்களை செக்ஸ் ஆஃப்ஜெட்டாக பயன்படுத்துகின்றனர். தங்களுடைய செக்ஸஷூவல் உணர்ச்சியை பெண்களின் மேல் திணித்து அவர்களை கட்டாயப்படுத்துகின்றன என்று ரிச்சர்ட் டோல்மேன், புரபொசர் அட் தி யுனிவர்சிட்டி ஆஃப் மிச்சிகனிலிருந்து சொல்கிறார்.

Effects Of Online Dating Abuse

பெண்களும் தங்கள் பார்ட்னர் தங்களுக்கு தான் முக்கியத்துவம் கொடுக்கனும் என்று மிகுந்த பொறாமையும், தனக்கு மட்டும் தான் சொந்தம் என்ற எண்ணத்தையும் கொண்டுள்ளனர். இதனால் அவர்கள் பார்ட்னரை எப்பொழுதும் கண்காணித்து கொண்டே இருக்கின்றனர் என்று டோல்மேன் கூறுகிறார்.

இந்த ஆராய்ச்சி பற்றிய தகவல் அமெரிக்க நாளிதழான அடல்லெசன்ஸ்யில் வெளியிடப்பட்டது. அப்பொழுது அவர்கள் 703 US மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் டிஜிட்டல் டேட்டிங் பழக்கத்தால் ஏற்பட்ட அனுபவத்தை சேகரித்தனர்.

Effects Of Online Dating Abuse

ஆண்கள் மற்றும் பெண்கள் இருவரும் சமமான அளவு டிஜிட்டல் மானிட்டரிங், கட்டுப்பாடு, டிஜிட்டல் ஆக்கிரமிப்பு போன்றவை ஏற்பட்டதாக சொன்னனர்.

டிஜிட்டல் ஆக்கிரமிப்பு, அச்சுறுத்தல் மற்றும் வதந்திகள் இப்படி எதாவது ஏற்பட்டால் பெண்கள் தங்கள் தொடர்பை தடுத்துக் கொள்வது நல்லது. அதே நேரத்தில் டிஜிட்டல் டெக்னாலஜியை பாதுகாப்பாக உபயோகிக்கவும் மறந்துவிடாதீர்கள்.

English summary

Effects Of Online Dating Abuse

Effects Of Online Dating Abuse
Story first published: Saturday, July 15, 2017, 20:00 [IST]
Subscribe Newsletter