கல்யாணம் கட்டினா நான் தூக்குல தொங்க மாட்டேன், மகளின் காதலுக்கு நவீன தந்தையின் மிரட்டல் !!

Subscribe to Boldsky

மருத்துவரின் அறையிலிருந்து வெளியே வந்ததிலிருந்து செவிப்பறையில் கொயிங்..... என்ற சத்தத்தைத் தவிர வேறெதும் இல்லை. முன்னறையில் டீவி ஓடிக் கொண்டிருக்கிறது, குழந்தை ஒன்று அழுது கொண்டிருந்தது. அங்கிருந்த செவிலியர் ஒருவருக்கும் இன்னொருவருக்கும் வாக்குவாதம் நடந்து கொண்டிருந்தது .

காதை இரண்டு மூன்று முறை அடித்துப் பார்த்தேன் ம்ம்ஹூம்... எந்த வித்யாசமும் இல்லை.

inspiring love story about deaf and dump girl

மேடம்...மேடம் என்றபடி பின்னாலிருந்து ஒரு பெண் என்னைத் தட்டினார் திரும்பி பார்த்தேன்.

நாளை மதியம் ஒரு மணிக்கு இங்க வரணும். சரியா என்று சைகையில் பேசி கையில் மருந்து சீட்டைத் திணித்தார்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
கீ போர்டு கிளாஸ் :

கீ போர்டு கிளாஸ் :

கல்லூரி முடிந்து நேராக கீ போர்டு கிளாஸுக்கு செல்ல பஸ்ஸுக்காக காத்திருக்கும் போது எதிர் ரோட்டைக் கடந்து வந்த உருவம் ஒன்று மெல்ல மெல்ல என்னை நெருங்கி வந்தது. வயலின் க்ளாஸ் தான? என்றான் .

என்னை நேற்று வகுப்பில் பார்த்திருக்கிறான் ஆனால் யாரென்று தெரியவில்லை. ஐந்து வருடங்களாக வகுப்பிற்கு சென்று கொண்டிருக்கிறேன். ஆனால் இவனை நான் பார்த்ததேயில்லையே என்று யோசித்துக் கொண்டே அவனை ஏற இறங்க பார்த்தேன்.

என் அமைதியை புரிந்து கொண்டவனாய்..ஹோ சாரி க்ளாஸுக்கு தான போறீங்க நானும் அங்க தான் போறேன்... கூட வரலாமா என்றான்.

விருப்பமில்லை :

விருப்பமில்லை :

ஹாலில் அவன் ஒரு சோபாவில் உட்கார்ந்திருந்தான்.எதிரில் அப்பா உட்கார்ந்திருக்க அம்மாவும் நானும் நின்றிருந்தோம்.

அங்கிள்... என்று அவன் ஆரம்பிக்கும் போதே....

நிறுத்து என்பது போல கையை நீட்டினார் அப்பா. மேற்கொண்டு எதுவும் பேசவில்லை இதுல எனக்கு சம்மதமில்ல அதுக்கு மேல உங்க இஷ்டம் என்று சொல்லிவிட்டு எழுந்தார்.

அவருக்கு இதில் விருப்பமில்லை என்று தெரிந்து ப்பா.... என்றேன்

நான் தூக்குல எல்லாம் தொங்கமாட்டேன்மா... உங்கள பிரிக்கிறேன் அறுவாள தூக்கிட்டு வரமாட்டேன்.. சொல்லுடீ உன் பொண்ணுகிட்ட என்று உள்ளே சென்று விட்டார்.

நினைவுகள் :

நினைவுகள் :

ஆட்டோவில் ஏறினோம். நான் பேசுறது உங்களுக்கு புரியுதா இல்லையான்னு தெரியல, மூணு வருஷமா உங்கள நான் பாத்துட்டு இருக்கேன். நீ போற அதே கிளாஸ்ல தான் நான் கிடார் கத்துக்கிறேன் என்று ஆரம்பித்து என்னை முதலில் சந்தித்தது, ஆண்டுவிழாவின் போது மேடையில் நான் கண் கலங்கியது,

தொண்டு நிறுவனம் மூலமாக எனக்கு கிடைத்த விருது, என் இசை வகுப்பில் என் கல்லூரி நண்பர்கள் வந்து என்னுடைய பிறந்த நாளை கொண்டாடியது என்று எல்லாமே விவரித்தான்.

மேரி மீ :

மேரி மீ :

அவன் சொல்ல சொல்ல எனக்கு ஆச்சரியமாய் இருந்தது. உங்கள எனக்கு ரொம்ப பிடிக்கும் அத விட உங்க மியூசிக் எனக்கு ரொம்பவே பிடிக்கும்.

நாங்கள் இறங்க வேண்டிய இடம் வந்துவிட்டது என்று காண்பித்தேன். இருவரும் இறங்கிக் கொண்டோம்.

இந்த உலகத்துலயே உங்களுக்கு ரொம்ப பிடிச்ச இடம் இது தான்னு தெரியும். இங்க வச்சு சொல்றேன்.

வில் யூ மேரி மீ....

மருத்துவமனை :

மருத்துவமனை :

ஆப்ரேசன் முடிந்ததும் என்னை தனியறைக்கு மாற்றினார்கள். என் மாஸ்டர்,அம்மா,அப்பா,சில நண்பர்கள் என எல்லாரும் இருந்தார்கள். வெள்ளைக் கோட் அணிந்த ஒருவர் ஒவ்வொருவராக காண்பித்து இது யார் தெரியுதா? இவங்க பேரென்ன ? என்று ஒவ்வொருவரையும் காண்பித்துக் கொண்டேயிருந்தார்.

எல்லாரையும் எனக்குத் தெரிந்தது. ஆனால் சொல்லத்தன முடியவில்லை ஒரிரு வார்த்தைகள் மட்டுமே லேசாக உச்சரிக்க முடிந்தது.

அவசரமில்லை :

அவசரமில்லை :

வாயை திறக்கச் சொல்லி டார்ச் அடித்து பார்த்தார் அந்த மருத்துவர். என்னிடம் தொடர்ந்து பேசிக் கொண்டேயிருந்தார். பேரென்ன அடுத்து கல்லூரியில் சேர்ந்து என்ன படிக்க போகிறாய் பன்னிரெண்டாம் வகுப்பில் எவ்வளவு மதிப்பெண், எந்த பாடல் உனக்கு பிடிக்கும்,கடைசியாக என்ன படம் பார்த்தாய் என்று கேட்டுக் கொண்டேயிருந்தார். எல்லா கேள்விக்கும் என்னால் பதில் சொல்ல முடியாமல் அழ மட்டுமே முடிந்தது.

அம்மா தலைக்கு மேல் உட்கார்ந்து கொண்டு தடவிக் கொடுத்துக் கொண்டிருந்தார். டென்சன் ஆகாத... டாக்டர் கேக்குறதுக்கு நல்லா யோசிச்சு சொல்லு ஒண்ணும் அவசரம் இல்ல என்று சொல்லி கண்ணீரை துடைத்துவிட்டார்.

ஸ்பீச் தெரபி :

ஸ்பீச் தெரபி :

அய்யோ என்னால பேசமுடியல என்று எப்படிச் சொல்வேன். இன்னொரு மருத்துவர் வந்தார் இதே சம்பவங்கள் அரங்கேறின. ஆப்ரேஷன் சக்சஸா முடிஞ்சது. ஒரு மாசம் கம்ப்ளீட்டா ரெஸ்ட் எடுக்கணும்.

இனி நீங்க பயப்பட வேண்டாம். என்று சொல்லி நிறுத்தினார். பேசுறது தான்.. என்று என்னையும் என் அம்மாவையும் ஒரு முறை பார்த்தார். அதற்க்குள் அப்பா சொல்லுங்க டாக்டர் என்று அவசரப்படுத்த இனிமே பேசமுடியாது. பட் நம்ம ஸ்பீச் தெரபி ட்ரை பண்லாம். நல்ல ரெஸ்பான்ஸ் கிடைக்கும்.

அம்மாவுக்கு சம்மதம் :

அம்மாவுக்கு சம்மதம் :

உள்ளறைக்குள் சென்ற அப்பா சட்டை மாற்றிக் கொண்டு வெளியில் கிளம்பினார். அம்மா என்ன செய்வதென்றே தெரியாமல் எங்கள் இருவரையும் பார்த்துக் கொண்டிருந்தாள். நீ நல்லா இருந்தாலாவது எக்கேடோ போ கண்ணுல பட்றாதன்னு தண்ணி தெளிச்சு விட்றலாம். ஆனா இப்போ என்று சொல்லி தலையில் அடித்துக் கொண்டு அழுதார்.

ஆண்ட்டி... அவளப்பத்தி எனக்கு முழுசும் தெரியும்.நீ எதுக்கு பயப்படறீங்கண்ணும் என்னால புரிஞ்சுக்க முடியுது. அவளால மாத்திரை உதவி இல்லாம இருக்க முடியாது, எப்போ மயக்கம் வரும்னு சொல்ல முடியாது, ரொம்ப முக்கியமா அவளால பேச முடியாது.

இது தான நீங்க சொல்ல வர்றீங்க.

 இருவருமே காதலிக்கிறோம் :

இருவருமே காதலிக்கிறோம் :

நாங்க ரெண்டு பேரும் நல்லா புரிஞ்சிருக்கோம். உங்களவிட நான் நல்லா பாத்துப்பேன். லைஃப்ல வர்ற சின்ன சின்ன மிஸ் அண்டர்ஸ்டேண்டிங்க்ஸ் எல்லாம் பெரிய பிரச்சனையாக்கிட்டு நிக்க மாட்டோம். ரெண்டு பேருமே மெச்சூர்டா திங்க் பண்றோம். அப்றம் என்ன என்றான்.

நானும் அம்மாவை கட்டியணைத்து அழுது கொண்டே அவனை எனக்கு திருமணம் செய்து வை என்று சைகை காண்பித்தேன்.

அம்மாவுக்கு ஒகே.

பெற்றோர் சம்மதம் :

பெற்றோர் சம்மதம் :

இனி அப்பா மட்டும் தான். எப்படியாவது சம்மதம் வாங்க வேண்டும். இருவருமே பெற்றோரின் முழு சம்மதத்துடன் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தோம்.

அதற்காக எவ்வளவு ஆண்டுகள் வரை காத்திருக்க தயாராக இருந்தோம்.

அம்மா சம்மதம் தெரிவித்து இரண்டு ஆண்டுகள் ஓடியிருந்தது.

அப்பா அதிர்ச்சி :

அப்பா அதிர்ச்சி :

தீபாவளிக்கு இனிப்பு கொடுக்க தீபாவளிக்கு முந்தைய நாள் அவன் எங்கள் வீட்டிற்கு வந்தான். வரவேற்பறையில் உட்கார வைத்து அம்மா காபி கொடுத்திருந்தாள்.

அவன் உட்கார்ந்திருப்பதை பார்த்த அம்மா என் அறையின் கதவைத் தட்டி உன் ஃபிரண்டு வந்திருக்காங்கம்மா என்று சொல்லிவிட்டு வெளியே சென்றார்.

அவரை வழிமறித்து கையை பிடித்துக் கொண்டான்.

ஒரு கணம் எனக்கும் அம்மாவுக்கும் மூச்சே நின்று போனது என்று தான் சொல்ல வேண்டும். எங்கே திருமணத்திற்கு சம்மதிக்காத கோபத்தில் ஏதாவது செய்து விடப்போகிறானோ என்று பயந்து அவனை விடச்சொல்லி அவனருகில் சென்றேன்.

நான் அருகில் சென்றதும் அவன் பிடித்திருந்த அப்பாவின் கையை விட்டான். நான் நல்ல பையன், நல்லா சம்பாதிக்கிறேன், மியூசிக்னா ரொம்ப பிடிக்கும் அதவிட உங்க பொண்ணுனா எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும்.

எங்கள சேத்து வைங்க உங்க பொண்ணு மேல நான் வச்சிருக்கிற காதல் நிஜம் என்றான் சைகையால்.

அப்பா ஆடிப்போய்விட்டார்!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS
For Daily Alerts

    English summary

    inspiring love story about deaf and dump girl

    inspiring love story about deaf and dump girl
    Story first published: Monday, October 23, 2017, 13:35 [IST]
    We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Boldsky sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Boldsky website. However, you can change your cookie settings at any time. Learn more