பெண்களை 'ச்சீ' என சொல்ல வைக்கும் ஆண்களின் செயல்கள்!

Written By:
Subscribe to Boldsky

ஆண்கள் செய்யும் சில விஷயங்கள் பெண்களுக்கு ரொம்ப பிடித்து போய்விடும். அதே சமயம் ஒரு பெண்ணை கவர வேண்டும் என்று நீங்கள் செய்யக்கூடிய சில மடத்தனமான விஷயங்கள் அல்லது நீங்கள் வழக்கமாகவே செய்யும் சில விஷயங்களால் பெண்கள் உங்கள் மீது வெறுப்படைவார்களே தவிர உங்கள் மீது தெரியாமல் கூட காதல் மலர்ந்துவிடாது.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
1. செல்ஃபி மோகம்

1. செல்ஃபி மோகம்

வெளியில் எங்காவது சென்றால், அடிக்கடி செல்ஃபி எடுத்துக்கொண்டே இருப்பது, கண்ணாடி முன்னாடி நின்று முகத்தை பார்த்துக்கொண்டே இருப்பது போன்ற செயல்களை பெண்களுக்கு பிடிக்காது.

2. அதிக கேர்ள் பிரண்ட்ஸ்!

2. அதிக கேர்ள் பிரண்ட்ஸ்!

மனதில் மன்மதன் என்று நினைத்துக்கொண்டு ஒரு பத்து பதினைத்து கேர்ள் பிரண்ட்ஸ் உடன் மிக நெருக்கமாக பழகும் ஆண்களை பெண்கள் அவ்வளவாக நம்புவதில்லை.

3. பொது இடங்களில் அசுத்தம்!

3. பொது இடங்களில் அசுத்தம்!

ஆண்கள் சற்றும் கூச்சம் இல்லாமல் பொது இடங்கள், பெண்கள் செல்லும் சாலைகளில் சிறுநீர் கழிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டால் பெண்களுக்கு அறவே பிடிக்காது.

4. தீய பழக்கங்கள்

4. தீய பழக்கங்கள்

மது அருந்துவது, புகைப்பிடிப்பது ஆகியவை தான் ஆண்மைக்கான அடையாளம் என்று நினைத்துக்கொண்டு சில ஆண்கள் செய்வார்கள்.

ஒரளவுக்கு என்றால் பெண்கள் போனால் போகிறது என்று ஏற்றுக்கொள்வார்கள். அதுவே அளவுக்கு மீறினால் அவ்வளவு தான். பிரேக் அப் கூட ஆகலாம்.

5. வீட்டை அசிங்கப்படுத்துவது

5. வீட்டை அசிங்கப்படுத்துவது

வீட்டில் சோபா, கட்டில் போன்ற கண்ட கண்ட இடங்களில் உள்ளடைகளை எரிந்து விடுவது மற்றும் வீட்டின் ஹால் போன்ற அனைவரது கண்களிலும் படும் இடங்களில் உள்ளாடைகளை காயப்போடுவது போன்றவை பெண்களுக்கு பிடிக்காது.

6. வெட்டி பந்தா..!

6. வெட்டி பந்தா..!

என்னிடம் கார் இருக்கு, பணம் இருக்கு என வெட்டியாக பந்தா செய்யும் ஆண்களை பெண்களுக்கு பிடிக்காது. எதுவுமே இல்லை என்றாலும் அதை நேர்மையாக கூறும் ஆண்களை தான் பெண்கள் விரும்புவார்கள்.

7. சத்தமாக வண்டியை ஒட்டுவது!

7. சத்தமாக வண்டியை ஒட்டுவது!

வண்டியை சத்தமாக முறுக்குவது.. பைக்கில் சாகசங்கள் செய்வது, மற்றவர்களின் மன அமைதியை கெடுப்பது போல வண்டி ஒட்டுவது பெண்களுக்கு எரிச்சலை உண்டாக்கக்கூடியதாக இருக்கும்.

8. பொறுப்பை தட்டிக்கழிப்பது!

8. பொறுப்பை தட்டிக்கழிப்பது!

முக்கியமான தேவை என்று வலியுறுத்தி சில விஷயங்களை பெண்கள் கூறும் போது, அது தானே பாத்துக்கலாம்..! என சொல்லி அந்த வேலைகளை செய்யமல் தட்டிக்கழிப்பது பெண்களை ஆத்திரமடைய வைக்கும்.

9. தாமதம்!

9. தாமதம்!

ஒரு இடத்திற்கு வர சொல்லிவிட்டு, அவள் தானே காத்திருக்கட்டும் என தாமதமாக வந்து சில சாக்கு போக்குகளை சொல்வது பெண்களை அவர்கள் மீது உங்களுக்கு அக்கறை இல்லை என்று நினைக்க வைக்கும்.

10. சைட் அடிப்பது!

10. சைட் அடிப்பது!

நீங்கள் ஒரு பெண்ணுடன் செல்லும் போது ரோட்டில் செல்லும் மற்றொரு பெண்ணை பார்ப்பது, அந்த பெண்ணை பற்றி விமர்சனம் செய்வது போன்றவை அந்த நேரத்தில் பெரிதாக வெடிக்காவிட்டாலும் கூட, பல எண்ணங்களை மனதிற்குள் தூண்டிவிடும்.

11. பெண்களுடன் அதிக நேரத்தை கழிப்பது

11. பெண்களுடன் அதிக நேரத்தை கழிப்பது

எப்போது பார்த்தாலும் பெண் தோழிகளுடன் மட்டுமே இருப்பது, ஆண் நண்பர்களுடன் அதிகமாக நேரத்தை செலவிடாமல் இருப்பது போன்றவை பெண்களுக்கே கூட பிடிக்காது.

12. கலாய்ப்பது!

12. கலாய்ப்பது!

பெண்களை மட்டம் தட்டி, கேவளமாக கலாய்ப்பது பெண்களுக்கு பிடிக்காது. என்ன தான் பிடிக்கவில்லை என்று கூறினாலும், சில ஆண்கள் தொடர்ந்து இதனை ஒரு பொழுதுபோக்காக நினைத்து செய்து கொண்டு தான் இருப்பார்கள்.

13. சுத்தம் இல்லாமல் இருப்பது!

13. சுத்தம் இல்லாமல் இருப்பது!

பார்ப்பதற்கு சுத்தமாக இருக்க வேண்டும். பரட்டைத்தலை, பல நாட்கள் சேவ் செய்யாத முகம், அழுக்கான சட்டை என்று இருந்தால் எந்த பெண்ணுக்கு தான் பிடிக்கும்?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

girls totally hate these habits from boys

girls totally hate these habits from boys
Story first published: Friday, August 4, 2017, 17:04 [IST]