‘அருவி’கதை கிட்டதட்ட அப்டியே என்னோட நிஜ வாழ்க்கையில நடந்தது! My story #116

Posted By:
Subscribe to Boldsky

ப்ராஜெக்ட் முடியும் தருவாயில் இருக்கிறது. இன்னும் பதினைந்து நாட்களில் ப்ராஜெக்ட் முடித்து சப்மிட் செய்த பிறகு ஆன் சைட் போவது குறித்து முடிவு செய்யலாம் என்று சொல்லப்பட்டிருக்கிறது. பகுதி நேரமாக எம்.பி.ஏ படித்துக் கொண்டிருப்பதால் ஆன் சைட் வேண்டாம் என்று சொல்லிவிட்டேன்.

வண்டி லோன், தங்கைக்கு காலேஜ் வீஸ் அப்பாவுக்கு இதய ஆப்ரேஷன் என்று வரிசையாக வந்து நிற்க எல்லாவற்றையும் மூத்தப் பிள்ளை என்ற முறையில் சமாளித்தேன். அலுவலகத்தில் ப்ரசர் அப்பாவுக்கு மருத்துவச் செலவுகள் இரவு எட்டு மணியானதுமே போன் செய்து புலம்பும் அம்மா.

Aruvi story is happens in my real life

செலவுக்கு பணம் கேட்டு அழும் தங்கை எல்லாரையும் சமாளிக்க வேண்டுமே, இதற்கிடையில் எங்கிருந்து வீக் எண்ட் நண்பர்களுக்கு எல்லாம் நேரம் ஒதுக்க?

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
ஒரு நாள் :

ஒரு நாள் :

என்னக்கி இந்தக் கடன எல்லாம் அடச்சு எப்போ பணம் சேத்து கல்யாணம் பண்ணப்போறேன்னு தெர்ல... எல்லாரும் எப்போ உன் பொண்ணுக்கு கல்யாணம்னு கேட்டுட்டே இருக்காங்க.

ஏன்ம்மா? இப்போ என்ன நம்ம கல்யாணம் பண்ற நிலமைலயா இருக்கோம்... ஊர்ல இருக்குறவன் ஆயிரம் பேசுவான் அதையெல்லாம் நம்ம கண்டுக்க முடியுமா?

என்னயிருந்தாலும் வயசு ஏறிட்டே போகுதுல்ல...

அதுக்கு? கொஞ்சமாவது செட்டில் ஆக வேணாமா அட்லீஸ்ட் அவ காலேஜாவது முடிக்கட்டும்.

அம்மா :

அம்மா :

அன்று அலுவகத்தில் சாப்பிடக்கூட நேரமில்லாமல் வேலை செய்து கொண்டிருந்தேன். மதியம் இரண்டு மணியிலிருந்து அம்மா தொடர்ந்து போன் செய்து கொண்டிருந்தார். வேலை முடிந்ததும் சாப்பிடப் போகலாம் என்று சொல்லி சாப்பிடாமல் கூட வேலை செய்து கொண்டிருக்கும் போது இப்படி போன் செய்கிறாரே என்று சொல்லி பயங்கர கோபமாய் வந்தது.

கோபத்தில் எங்கே முட்டிக் கொள்ள?

இரண்டு முறை கட் செய்த பிறகும் போன் கால் தொடர்ந்து வந்தது. வேறு வழியில்லாமல் அட்டெண்ட் செய்தேன். சீட்டில் உட்கார்ந்து சத்தமாக பேச முடியாது என்பதால்... மிகவும் மெல்லமா ம்ம்மா... கூப்டுறேன் வேலையா இருக்கேன் என்று கிசுகிசுத்தேன்.

திருமணம் :

திருமணம் :

ஹலோ..... எதுவும் கேக்கல என்று போனில் அம்மா கத்துவது வெளியிலேயே கேட்டது. என்னுடன் உட்கார்ந்திருப்பவர்கள் எல்லாம் என்னை திரும்பிப் பார்க்க சட்டென எந்தரித்து வெளியே வந்தேன். கேஃப்டேரியா பகுதிக்குச் சென்று... கத்த பொறுமையாக கேட்டாள்.

ஏன்ம்மா வேல நேரத்துல இப்டி டார்ச்சர் பண்ற?

இல்லப்பா பெரியப்பா வந்திருக்காரு. நல்ல வரன் ஒண்ணு அமஞ்சுருக்கு, வரதட்சணை எல்லாம் நீங்க போடுறத போடுங்கன்னு சொல்லிருக்காங்க என்று ஆரம்பித்து வள.... வள என்று சொல்லிக் கொண்டிருந்தார்.

அம்மா இப்போ நான் என்ன டென்ஷன்ல இருக்கேன் நீ என்ன பேசிட்டு இருக்கேன். தேவையில்லாம இப்போ கல்யாணப் பேச்ச எடுக்காதீங்க என்று சொல்லிவிட்டு கட் செய்து விட்டேன்.

தோழிகள் :

தோழிகள் :

மூன்று தோழிகளுடன் சேர்ந்து ஒரு வீடு எடுத்து தங்கியிருந்தேன். இரவு ஒன்பது மணிக்கு வீட்டிற்கு வர ஒருத்தி லேப்டாப்பில் படம் பார்த்துக் கொண்டிருந்தால் இன்னொருத்தி துணி துவைத்துக் கொண்டிருந்தாள்.

அடுத்த வாரம் நான் வெக்கேட் பண்றேன். திங்ஸ் பேக் பண்ண அம்மாவும் அக்காவும் வராங்க நாளைக்கி என்றாள்.

ஹ்ம்.. வரட்டும் என்னயிருக்கு என்று சொல்லிவிட்டேன் தாரளமாக அதற்கடுத்து தானே எல்லாமே இருக்கிறது.

அவர்கள் வருவதில் எனக்கும் எந்தப் பிரச்சனை கிடையாது. ஆனால் வாடகை?

பேஸ்புக் :

பேஸ்புக் :

அலுவலகம், வீடு, ரூம் அப்பாவின் மருத்துவ சிகிச்சை, அம்மாவின் கடைசி போன் கால் என்று வரிசையாக மண்டையில் பிசைந்தது. இதை எல்லாவற்றையும் விட்டுவிட்டு எங்காவது ஓடிவிடலாமா என்று தோன்றியது.

என்ன வாழ்க்கையிது இருபத்து நான்கு வயதில் இவ்வளவு பொறுப்புகளா? இத்தனையையும் நான் எப்படி சமாளிப்பேன் ஒரு வித மன அழுத்தத்தில் இருந்தேன் என்று கூட சொல்லலாம்.

அன்று இரவு எந்த வேலையும் ஓடவில்லை தூக்கமும் வரவில்லை. பொழுது போகாமல் பேஸ்புக் ஸ்க்ரால் செய்து கொண்டிருந்தேன்.

கமெண்ட் :

கமெண்ட் :

நான் ஷேர் செய்திருந்த ஒரு கோட்ஸுக்கு ஒரு கமெண்ட் வந்து விழுந்தது. யாரென்று பார்த்தால் அந்த நபர் என் ஃபிரண்ட் லிஸ்டிலேயே இல்லை. அதற்கடுத்த சில நிமிடத்தில் என்னுடைய ப்ரோஃபைலின் அனைத்து ஸ்டேட்டஸ்களுக்கும் லைக்குகளும் ஸ்மைலிக்களும் நிரம்பியது.

யு ஆர் இண்ட்ரஸ்டிங் என்று ஒரு மெசேஜ் வேறு....

அவனின் ப்ரோஃபைல் பார்த்தேன். சென்னையில் இருக்கிற எதோ ஒரு ஐடி நிறுவனத்தில் ப்ராஜெக்ட் மேனேஜராக வேலைப்பார்ப்பதாக போட்டிருந்தான். பெரிதாக ஃபேஸ்புக் பக்கம் வரமாட்டான் போல கிரிக்கெட் செய்திகளும் சில ட்ரோல்களும் தான் ஷேர் செய்திருந்தான் மற்றப்படி அவனது ப்ரோஃபைலில் சொல்லிக் கொள்ளும் படி ஒன்றுமில்லை.

நண்பர்கள் :

நண்பர்கள் :

முகநூலில் இருவரும் நண்பர்கள் ஆனோம். என்னுடைய ஸ்டேட்டஸ்களுக்கு கமெண்ட் செய்து கொண்டிருந்தவன். இப்போது இன்பாக்ஸில் பேசும் அளவிற்கு நட்பாகி விட்டோம். கிட்டத்தட்ட மூன்று மாதங்கள் இப்படியே நகர்ந்தது. அவ்வளவாக பட்டும் படாமலும் பேசிக் கொண்டிருந்தோம்.

ஒரு கட்டத்தில் இருவரும் அந்த குறுஞ்செய்திகளுக்கு அடிக்ட் ஆகிவிட்டோம் என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு பயித்தியமாய் திரிந்தோம்.

ஆறுதல் :

ஆறுதல் :

அவனது ஒரு ரிப்ளை எனக்கு அவ்வளவு ஆறுதலாக இருந்தது. என்னமா பண்ற? என்ற அவனது கேள்வி என்னை உற்சாகத்துடன் துள்ளி எழச் செய்யும். பசங்க பேசினாலே நம்பர் கேப்பாங்க... ஓயாமா போன் பண்ணுவாங்க வெளிய போலாமான்னு கேப்பாங்க, சரியா வழிவாங்க என்றே கேட்டிருந்த எனக்கு அவனது நடவடிக்கைகள் எல்லாமே ஆச்சரியத்தை கொடுத்தது.

நானாக பேசினாலும், இவ்ளோ நேரம் ஆபிஸ்ல சிஸ்டம் பாத்துட்டு உக்காந்திருப்ப இப்பவும் போன் நோண்டாது, ஒழுங்கா சாப்டு தூங்கு சரியா என்று அக்கறையும் கண்டிப்புடனும் அவன் என்னை மிரட்டியது எதோ செய்தது.

முதல் சந்திப்பு :

முதல் சந்திப்பு :

ஏற்கனவே அவனிடம் என் நம்பரை கொடுத்திருந்தேன், அன்று மீண்டும் கேட்டான்.

ஹேய்... அன்னக்கி கொடுத்தத சேவ் பண்ணி வைக்கல.. இப்போ திருப்பி அனுப்பேன்.

அனுப்பினேன்.

க்ரஷ் என்று சொல்லி சேமித்து வைத்திருந்த எண்ணிலிருந்து கால் வந்தது. அவனே தான் அழைக்கிறான். சட்டென்று எடுத்து பேசலாமா? வேண்டாமா என்கிற குறுகுறுப்பு .... அப்போது தான் முதல் முறையாக பேசுகிறோம்.

ஹலோ எப்டியிருக்க என்றேன்.

ஹ்ம்... இருக்கேன் வாய்ஸ் ஸ்வீட்டா இருக்கு.

உடம்பு சரியில்லையா என்ன?

அதெல்லாம் இல்லையே.... ஏன்

டல்லா இருக்குற மாதிரி இருக்கே........... உரையாடல் தொடர்ந்தது. முடிவில் ரொம்ப டிஸ்ட்ரபா இருக்கு என்ன பண்றதுன்னு தெரியல இன்னக்கி சாய்ந்தரம் மீட் பண்லாமா? என்றான்

இரவில் அவனுடன் :

இரவில் அவனுடன் :

எனக்கு ஒரு கணம் அழுகையே வருவது போல் இருந்தது. இவ்வளவு நாட்கள் எனக்கு ஆறுதலாய் இருந்தானே அவனுக்கு எதோ ஒரு பிரச்சனை எனும் போது நான் உடன் இருக்க வேண்டும் என்று தோன்றியது. சரி என்று சொல்லிவிட்டேன். இரவு ஏழு மணிக்கு கிண்டி ஸ்டேஷனில் சந்தித்தோம்.

வழக்கமான விசாரிப்புகள். ஹோட்டலுக்குச் சென்று சாப்பிட்டோம். அவ்வப்போது போன் செய்வதும், வெளியில் சென்று பேசுவதுமாய் இருந்தான் அவனது முகம் கலவரமாய் தெரிந்தது. ஒரு குழந்தையை நடத்துவது போல அழைத்துச் செல்வது சாப்பிட ஆர்டர் செய்தது எல்லாமே எனக்கு மிகவும் வித்யாசமாய் இருந்தது.

பக்கத்துல தான் வீடு மேடம் வருவீங்களா என்றான் தயக்கத்துடன்?

இது என்ன கேள்வி ? கண்டிப்பா போகலாம்.

சந்தேகம் :

சந்தேகம் :

இல்ல எப்பவும் பொண்ணுங்க வீட்டுக்கு வான்னு கூப்டாளே முறைப்பீங்க.... அதுவும் நம்ம இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் மீட் பண்ணியிருக்கோம் என்று இழுத்தான்.

கிட்டத்தட்ட ஒரு வருடங்கள் பழகியிருக்கிறோம். இதுவரையில் உன்னை தப்பு சொல்வது போல எந்த சம்பவமும் நடக்கவில்லை உன்னை எப்படியடா தவறு சொல்வேன் என்று நினைத்துக் கொண்டேன்.

வீட்டில் :

வீட்டில் :

பல சந்துகள் திரும்பி திரும்பி எங்கோ சென்றான் இரவில் ஒரு வழியும் தெரியவில்லை மெயின் ரோட்டிலிருந்து உள்ளே போனது தான் தெரியும்.

முன்னாடி கேட்ல வாட்ச் மேன் இருப்பான் என்று சொல்லி அப்பார்ட்மெண்ட் பின் வாசல் வழியாக அழைத்து வந்தான். இரண்டாவது மாடி அவ்வளவு இருட்டு. கைபிடித்து அழைத்துச் சென்றான். முதன் முதலாக ஒரு ஆணின் கை என் கையை பிடித்திருக்கிறது. அவனை நம்பி இனி அவன் தான் எல்லாமே என்றே நினைத்து அவன் பின்னால் சென்றேன்.

அவனது புகைப்படங்கள், புத்தகங்கள், எல்லாவற்றையும் கண்பித்தான். கல்லூரி படிக்கும் போது ஒரு பெண்ணை காதலித்து ப்ரேக் அப் ஆகிவிட்டதாம் . அவள் பிறந்தநாளுக்கு கொடுத்த க்ரீட்டிங் கார்டு ஒன்றை சுவற்றில் ஃப்ரேம் போட்டு வைத்திருந்தான்.

இப்படியும் ஒரு ஆணா? :

இப்படியும் ஒரு ஆணா? :

க்ரீட்டிங் கார்ட போய் ஃப்ரேம் போட்டு வச்சிருக்க.....

அவ எனக்கு அவ்ளோ க்ளோஸ்... ஃபேமிலினால தான் பிரிஞ்சிட்டோம். சரி நம்ம எதுவும் டிஸ்ட்ரப் பண்ண வேண்டாம்னு நானும் விலகிட்டேன்

அவனது ஒவ்வொரு செயலும் என்னை ஆச்சரியப்படுத்தின..இதுவரை ஒரு ஆண் என்றால் இப்படித்தான் என்று கட்டப்பட்டு வந்த பிம்பங்கள் ஒவ்வொன்றையும் உடைத்துக் கொண்டேயிருந்தான்.

அந்த கணம் :

அந்த கணம் :

மனம் விட்டு நிறைய விஷயங்களை பகிர்ந்தான். ஏலச்சீட்டு நடத்தி திவாலாகி விட்டதாம். அந்த அவமானத்தில் அப்பா தற்கொலை செய்து கொண்டுவிட்டார் .

பள்ளி, கல்லூரி எல்லாமே பெரும் மனவுளைச்சலில் இருந்திருக்கிறான். அப்போது அவனது ஒரே ஆறுதல் அந்த காதலி.அவளும் ஒரு கட்டத்தில் பிரியும் போது தற்கொலை செய்யக்கூட துணிந்திருக்கிறான். கேட்கவே பரிதாபமாய் இருந்தது. என் கதையை முழுவதுமாக பகிர்ந்தேன்.

ப்ரண்டோட அப்பா கோயம்புத்தூர்ல தான் ஹார்ட் ஸ்பெஷலிஸ்ட் அவங்கட்ட வேணும்னா கன்சல்ட் பண்ணுங்க நல்லா கைட் பண்ணுவாரு. ரெண்டாவது வாட்டி ஆப்ரேஷன் எல்லாம் நான் நம்பர் தரேன் என்றான்.

தலையசைத்தேன்.

 விட்டு விலக வேண்டாம் :

விட்டு விலக வேண்டாம் :

பால்கனியில் வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த என்னை தோல்மீது அணைத்துக் கொண்டான். இப்போது மிகவும் நெருக்கமாக நின்று அவனது செல்போனில் இருந்த அவனது புகைப்படங்களை காண்பித்தான்.

அந்த கணம் திக்குமுக்காடினாலும் சுதாரித்து நிற்பதற்குள் என் இடுப்பை வளைத்துப் பிடித்து பாத்து நில்லு என்று சொல்லி தன் பக்கமாய் இழுத்துக் கொண்டான்.

அந்த நெருக்கம் இவ்வளவு நாளாய் நான் காணாத ஒரு நெருக்கம். ஆரம்பத்தில் கொஞ்சம் தயங்கினாலும் பின்னர் அவனின் அணைப்பு எனக்கு தேவையாய் மாறியது.

அறைக்குள் :

அறைக்குள் :

சிறிது நேரத்தில் ரொம்ப நேரம் வெளிய நிக்க வேண்டாம். உள்ள வா என்று அழைத்துச் சென்றான். என்னை உள்ளே உட்கார வைத்து விட்டு சிகரெட்டை பற்ற வைத்தான்.

நான் முறைப்பதைப் பார்த்து விட்டு உடனே அதனை கீழே போட்டுவிட்டு சாரி.... சாரி அதுக்கு ஏண்டி இப்டி முறைக்கிற.... அதான் நீ வந்துட்டல்ல இனி நோ சிகரெட் நோ தண்ணி.

முதல் முறையாக என்னை டீ போட்டு அழைத்திருக்கிறான். வெட்கமாக இருந்தது சிரித்தேன்.

என் சந்தோசமே :

என் சந்தோசமே :

சோஃபாவில் எனக்கு முன்பாக உட்கார்ந்து கொண்டான். என் கைகளை பிடித்து தலையை குனிந்து கொண்டே பேசினான்.

இவ்ளோ நாள் எங்க டீ இருந்த.... என் மொத்த சந்தோஷமும் திரும்பி வந்த மாதிரி இருக்கு. என்னோட வாழ்க்கையே உன் ரூபத்துல திரும்ப கிடச்ச மாதிரி இருக்கு இவ்ளோ நாள் உன்ன எப்டி மிஸ் பண்ணேன்னு தெரில பேசிட்டு இருந்தப்போ கூட ஒண்ணும் தெரியல உன்ன நேர்ல பாத்தப்பவே...

நிமிர்ந்து கண்களைப் பார்த்தான். அவன் கண்கள் குளமாகியிருந்தது.

பதற்றத்துடன் அவன் கன்னங்களில் கைவைத்து, நான் இருக்கேண்டா என்றேன். அவனை அவ்வளவு பிடித்திருந்தது. இவனை விட நல்ல குணம் படைத்தவன் என் வாழ்க்கையில் கிடைக்க மாட்டான் என்று உறுதியாக நம்பினேன். காதலைச் சொல்லிக் கொண்ட அன்றைய இரவு எங்கள் இருவருக்கும் முதலிரவு....

வீட்டிற்கு கிளம்பினேன் :

வீட்டிற்கு கிளம்பினேன் :

இரவு பத்து மணிக்கு ரோட்டில் வந்து ஆட்டோ ஏற்றி விட்டான். வீட்டுக்கு போனதும் மெசேஜ் பண்ணு பாத்துப் போ என்று ஆட்டோ கிளம்பும் வரையில் என் கைகளை இறுக்கப்பற்றியபடி இருந்தான். இதுவரை இப்படி யாருமே என்னைத் தாங்கியது இல்லை.

இனி இந்த வாழ்க்கை இவனுடனான வாழ்க்கை தான் எனக்கு கிடைக்கப்போகிறது. இதுவரை வறுமை, கஷ்டம் என்றே பார்த்த எனக்கு இனி எல்லாமே மகிழ்ச்சி என்று நினைத்து பெரும் மகிழ்வுடன் கையசத்தேன்.

மிஸ் யூ என்று கிசுகிசுத்தப்படி என் கையை விட்டு கையசைத்தேன்.

உண்மைகள் :

உண்மைகள் :

வீட்டிற்குச் சென்றதும் தகவல் அனுப்பினேன். ரிப்ளை இல்லை போன் செய்தேன் எடுக்கவில்லை சரி தூங்கியிருப்பான் என்று நினைத்துக் கொண்டேன். மறு நாளும் பதில் இல்லை. என்ன இது இப்படி அவன் நடந்து கொள்ள மாட்டானே? போனை எங்காவது தொலைத்து விட்டானா?

இரண்டு நாட்கள் கழித்து போன் செய்ய.... அவனது போன் ஸ்விட்ச் ஆஃப் என்று வந்தது. ஒரு மணி நேரம் கழித்து மீண்டும் முயற்சித்தேன் இப்போதும் ஸ்விட்ச் ஆஃப்.

ஒன்றும் புரியாமல் முகநூலில் தேடினேன். என் ஐடியை ப்ளாக் செய்து வைத்திருந்தான்.

ஒரு கணம் எல்லாமே ஸ்தம்பித்தது. என்ன இது இனி அவன் தான் எல்லாமே நினைத்து இரண்டு நாட்கள் கூட முழுமையாகவில்லை அதற்குள் போன் ஸ்விட்ச் ஆஃப் பேஸ்புக் ப்ளாக் என்று அடுத்தடுத்து வருகிறதே என்று குழப்பமாய் இருந்தது.

அப்படியென்றால் அவன் நம்மை ஏமாற்றிவிட்டானா?

தைரியமாய் இரு :

தைரியமாய் இரு :

இந்த துரோகத்தை என்னால் மறக்கவே முடியவில்லை. அவனை அவ்வளவு நம்பினேனே என்னை ஏமாற்றிவிட்டான். எப்படி அவன் திரும்பி வந்து விட வேண்டும்.

அவனுடன் பேச வேண்டும் என்று பல வகைகளில் முயற்சித்தேன் அவன் எங்கேயிருக்கிறான் என்று கூட கண்டுபிடிக்க முடியவில்லை.

யாரிடம் என்ன சொல்லித் தேடுவது? ஒன்றும் புரியவில்லை. தொடர்ந்து அவனின் நினைவுகள் என்னை வதைத்தது. ஒரு வேளையையும் ஒழுங்காக செய்ய முடியவில்லை உடல் எடை குறைய ஆரம்பித்தது இரவு தூக்கம் தொலைந்தது.

முடியும் அதிகளவு கொட்டி, கருவளையம் வந்து முகமே ஒடுங்கி பார்க்கவே பரிதாபமாக இருந்தேன். நண்பர்கள் வர்புறுத்த மருத்துமனைக்குச் சென்றேன்.

பாசிட்டிவ் :

பாசிட்டிவ் :

டிபியாக இருக்கும் என்றார்கள் நண்பர்கள். ஒரு மாசம் கண்டினியூசா ட்ரீமெண்ட் எடுத்தா சரியாகிடும் நீ பயப்படாத.

அவனின் நினைவு தான் என்னை இப்படி உருக்குலைத்தது என்று மனதில் சொல்லிக் கொண்டேன்.

ரத்தப் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இரண்டு மணி நேரத்தில் ரிசல்ட் கைக்கு வந்தது. மருத்துவர் உள்ளே அழைத்தார்.

நானும் தோழியும் சென்றோம்.

பேஷண்ட் நீங்களா?

ஆமா டாக்டர்.

இவங்க...

ஃப்ரண்ட்.

கொஞ்சம் வெளிய இருங்கம்மா என்று சொல்லி அவளை வெளியே அனுப்பினார். பின்னர் மெதுவாக என்னிடம் , இத எப்டி சொல்றதுன்னு தெரியல தைரியமா இருங்க.இப்போ நெறைய மெடிக்கல் அட்வான்ஸ்மெண்ட்னால நீங்க பயப்பட வேண்டிய அவசியமில்ல என்று சொல்லி எதேதோ சொன்னார். என்ன டாக்டர் சொல்ல வர்றீங்க எனக்கு ஒண்ணும் புரியல.... என்று முழித்தேன்.

உங்க டெஸ்ட் ரிசல்ட் வந்திருக்கு. உங்களுக்கு ஹெச்.ஐ.வி., பாசிட்டிவ்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

English summary

Aruvi story is happens in my real life

Aruvi story is happens in my real life
Story first published: Wednesday, December 20, 2017, 16:59 [IST]