காதலிக்க ஆள் தேடுறதுக்கு முன்னாடி இத தெரிஞ்சுக்கோங்க!

Posted By:
Subscribe to Boldsky

எனக்கான ஒரு இணை வேண்டும் என்பது தான் பலரது எதிர்பார்ப்புகளில் ஒன்று. காதலைப் பற்றி பேசாத திரைப்படங்களே இல்லை என்பது போல ஏதோ ஒரு இடத்தில், காதலைத் தொட்டு விடும்.

இன்றைய நவநாகரிக உறவு முறையில், காதல் பல பரிணாமங்களை பெற்றிருக்கிறது. இச்சூழ்நிலையில், உங்களை முழுமையாக்கும் காதலை தேடிக் கொண்டிருக்கிறீர்களா? உங்களுக்கு ஏற்ற காதல் இணை கிடைக்க நீங்கள் கவனிக்க வேண்டிய விஷயங்கள்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
வாழ முடியுமா :

வாழ முடியுமா :

இனி வரும் காலம் முழுவதும் அவருடன் என்னால் வாழ முடியும் என்று நம்பிக்கை ஏற்பட வேண்டும். எல்லா இடங்களிலும் பொறுத்துப் போவேன் என்ற வசனம் இல்லாமல் ஒத்துப் போகுமா என்று பார்க்க வேண்டும். நீங்கள் பெர்ஃபெக்டாக இருக்க வேண்டும் என்று அவசியமில்லை.

உங்களின் குறைகளுடனே இணை ஏற்க வேண்டும் அதே போல இணையின் குறைகளுடன் நீங்களும் ஏற்க வேண்டும். இணை எல்லா விதத்திலும் பெர்ஃபெக்ட்டாக இருக்க வேண்டும் என்று நினைப்பதையும் தவிர்த்திடுங்கள்.

கடந்த காதல் :

கடந்த காதல் :

நீங்கள் கடந்து வந்த காதல் எல்லாம் நீங்கள் சந்தித்த தோல்விகள் அல்ல. அவை நீங்கள் கற்றுக் கொள்ள கிடைத்த சந்தர்ப்பங்கள்.

உங்களுக்கு என்ன தேவை, உங்களுடைய மதிப்பு என்ன? உங்களுக்கு எதில் எல்லாம் நம்பிக்கை இருக்கிறது? உங்களுடைய முன்னுரிமை எதற்கு என உங்களைப் பற்றி உங்களுக்கே எடுத்துச் சொல்ல கிடைத்த சந்தர்ப்பங்கள் அவை

நேர்மை :

நேர்மை :

தொடர்ந்து வரும் நட்பு காதலெனும் பேச்சு எடுக்கும் போது தவறுகிறது என்றால் உண்மையான காரணத்தை தேடுங்கள். அதில் உங்களுக்கு நேர்மையாக நீங்கள் இருந்தாலே போதும். எனக்குப் பிடித்தமான என்று நான் தேடும் இணைக்கு பிடித்த மாதிரியாக நான் இருக்கிறேனா என்று யோசியுங்கள்.

அணுகுமுறை :

அணுகுமுறை :

காதலை எப்போதும் சந்தேகப் பார்வையுடனே அணுகாதீர்கள். அதே நேரத்தில் ஆரம்பத்திலேயே முழு நம்பிக்கையையும் வைத்து கற்பனையை வளர்த்துக் கொள்ளாதீர்கள். எதுவும் நிகழலாம் என்பதை புரிந்து கொள்ளுங்கள்.

சோதனை :

சோதனை :

இது காதல் என்று உங்களுக்கு தோன்றினால் நம்புங்கள், மீண்டும் மீண்டும் சோதிக்காதீர்கள். என்னை உண்மையாக காதலித்தால் இதனை செய்ய வேண்டும் என்று இணையையும் போட்டு டார்ச்சர் செய்யாதீர்கள்.

எமோஷனல் :

எமோஷனல் :

எல்லாவற்றையும் எமோஷனலாக அணுகாதீர்கள். உடலளவிலும் மனதளவிலும் நீங்கள் முதலில் உறுதியாக இருக்க வேண்டும். இணையின் ஒரு வார்த்தை, இணையின் சின்ன சின்ன செயல்கள் எல்லாம் உங்களை நிலைகுலைய வைத்திடும் என்றால் ஒவ்வொரு நாளை கடப்பதே கடினமானதாக மாற்றிடும்.

தொடர்புகள் :

தொடர்புகள் :

காதலில் மிக முக்கியமான விஷயங்களில் ஒன்று இது. அவசியமானதும் கூட, உங்களைப் பற்றி நீங்கள் நினைப்பதைப் பற்றி, நீங்கள் நம்புவதைப் பற்றி தயக்கமின்றி பகிர்ந்திடுங்கள். அதே போல இணையின் பகிர்தல்களையும் காது கொடுத்து கேளுங்கள்.

தீர்வு :

தீர்வு :

இணையிடம் நீங்கள் பகிர்வது என்பது உங்களுக்கான வடிகாலாக இருக்க முடியுமே தவிர முழு பிரச்சனைக்கும் தீர்வாக இருக்க மாட்டார்கள் என்பதை புரிந்து கொள்ளுங்கள். அதே போல உங்கள் இணை ஏதேனும் சங்கடங்களை உங்களிடம் சொன்னால் மீசையை முறுக்கிக் கொண்டு உடனே தட்டிக் கேட்கிறேன் பிரச்சனையை முடிக்கப் போகிறேன் என்று கிளம்பாதீர்கள்.

ஒருவருக்கு ஒருவர் ஆறுதலாய் இருங்கள். அதுவே பல பிரச்சனைகளை தவிர்த்திடும்.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

Are you looking for love relationship?

Are you looking for love relationship?
Story first published: Friday, August 18, 2017, 13:39 [IST]
Subscribe Newsletter