படுக்கையறையில் நாயா? கணவனா? வருங்கால கணவனை விரட்டியடித்த பெங்களூர் பெண்!

Posted By:
Subscribe to Boldsky

திருமணமும், காதலும் பல்வேறு காரணத்தால் பிரிந்து பார்த்திருப்போம். நூற்றாண்டு இந்திய சினிமாவில் பல வகையில், பல கலவைகளில் காதல் கதைகள், அதில் சண்டைகள் நாம் பார்த்திருப்போம். ஆனால், இது அதுக்கும் மேல, ஒரு நாய் காரணமாக திருமண பந்தம் துவங்குவதற்கு முன்பே பிரிந்துவிட்டது.

இருவீட்டார் சம்மதத்துடன், திருமணம் பந்தத்தில் இணைய இருந்த இருவர் மத்தியில் நாய் ஒன்று குறுக்கே வந்து கபடி விளையாடிவிட்டு போயிருக்கிறது. ஒருப்பக்கம் செல்ல பிராணி மீது வைத்திருக்கும் அலாதி பிரியம் பாராட்டலாம் என்றாலும், அந்த பெண் கூறிய காரணம் இந்தளவு வேண்டுமா என கேள்வி எழுப்ப வைக்கிறது.

இதோ, அந்த வாட்ஸ்-அப் கலந்துரையாடல்...

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
தீர்வு தான் என்ன?

தீர்வு தான் என்ன?

தான் ஒரு தீர்வை எதிர்பார்பதாக எந்த மணமகன் கேட்க, அந்த பெண், நாம் ஏற்கனவே இதைப்பற்றி பேசிவிட்டோம் என கூறியுள்ளார்.

நாயுடன் படுக்கையா?

நாயுடன் படுக்கையா?

நாயுடன் தனது படுக்கையை பகிர்ந்துக் கொள்ள முடியாது. என் அன்னைக்கும் நாய்கள் பிடிக்காது என மணமகன் கூற, மணமகள், அதனால் தான் நான் கூறுகிறேன், இது ஒத்துவராது என பதிலளித்துள்ளார்.

முடிவாக தான் கூறுகிறாயா?

முடிவாக தான் கூறுகிறாயா?

கடவுளே, முடிவாக நீ கூறவருவது இதுதானா என மணமகன் கேட்க, ஆம், இது தான். இதனால் பின்னால் பிரச்சனைகள் வரலாம் என மணமகள் கூறியுள்ளார்.

நாய் தற்காலிகம்!

நாய் தற்காலிகம்!

தற்காலிகமான நாய்க்காக நீ இந்த முடிவை எடுக்கிறாயா? நாங்கள் உனது வாழ்க்கையை பற்றி பேசிக்கொண்டிருக்கிறோம் என மணமகன் கூறியதற்கு, நாய் தற்காலிகமானது அல்ல. நான் எனது நாயை விட்டு பிரிய மாட்டேன் என மணமகள் கூறியுள்ளார்.

நாயையே கட்டிக்கொள்!

நாயையே கட்டிக்கொள்!

உனக்கு நாய் தான் முக்கியம் என்றால் அந்த நாயையே திருமணம் செய்துக் கொள் என மணமகன் கூறி சென்றுவிட்டார்.

மனைவிக்கு பேய் பிடித்து பிரிந்த குடும்பங்கள் கூட நாம் பார்த்திருக்கிறோம். ஆனால், நாய் பிடித்து பிரிந்து போனது இதுதான் முதல்முறை!

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
English summary

A Bengaluru Girl Rejected A Guy For Marriage Because He Didn't Like Dogs

A Bengaluru Girl Rejected A Guy For Marriage Because He Didn't Like Dogs
Story first published: Wednesday, September 14, 2016, 12:36 [IST]
Please Wait while comments are loading...
Subscribe Newsletter