Latest Updates
-
நாக பஞ்சமி 2026: இந்த வருட நாக பஞ்சமி எந்த நாளில் வருகிறது? இந்த நாளில் என்ன செய்ய வேண்டும் தெரியுமா? -
வெஜ் கோலாப்பூரி மசாலா ரெசிபி - இந்த மாதிரி சைடிஷ் செஞ்சு பாருங்க - சப்பாத்தி, பூரிக்கு சூப்பரா இருக்கும் -
சனி-குரு உருவாக்கும் நவபஞ்சம யோகத்தால் டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
சுதந்திர தின ஸ்பெஷல் மூவர்ண பூரியும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 15 ஆகஸ்ட் 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு அதிர்ஷ்டத்தின் சாவி கைக்கு வரப்போகுதாம் -
ஆகஸ்ட் 25-ல் நடக்கும் சுக்கிர பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்கு வருமானம் அதிகரிக்கப்போகுது! -
புதன் ஆயில்ய நட்சத்திரத்திற்கு செல்வதால் புது சொத்துக்களை வாங்கும் யோகமுள்ள 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா -
Independence Day 2026 Wishes: சுதந்திர தினத்தன்று இந்த ஸ்டைலில் வாழ்த்துக்களை சொல்லுங்க.. -
தேசியக்கொடியின் நடுவில் அசோக சக்கரம் ஏன் நீல நிறத்தில் உள்ளது? அதில் ஏன் 24 ஆரங்கள் உள்ளது தெரியுமா? -
ரோட்டுக்கடை இட்லி தக்காளி சாம்பார் - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருடைம் செஞ்சு பாருங்க.. அள்ளும்..
உங்களது உயிர் தோழர்களுடன் நீங்கள் அனுபவிக்க வேண்டிய விஷயங்கள்!!
நண்பர்கள் என்பது தனி உலகம்! ஆணாக பிறப்பதன் சிறப்பே நண்பர்கள் தான். அவர்களுடன் அடிக்கும் சேட்டைகள், குறும்புகள், எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என வாழ்க்கையை ஓர் திரில்லர் சினிமா போல உணர வைப்பது நண்பர்கள் தான்.
பெண்களின் நட்பை விட ஆண்களின் நட்பு சம்திங் ஸ்பெஷல் தாங்க...!
ஓர் நல்ல நண்பன் கடவுள் பாதி, மிருகம் பாதி போல தான் இருப்பான். பிரச்சனையை விளையாட்டாக துவக்கி வைப்பவனும் நண்பன் தான். அது வினையாக உருமாறும் போது ஆபத்பாந்தவனாக வந்து காப்பாற்றுவதும் நண்பன் தான்.
பள்ளி நண்பர்களே என்றும் மறக்க முடியாத நண்பர்கள்!!!
சரியாக சொல்ல போனால், பாஸ் என்கிற பாஸ்கரன் ஆர்யா, சந்தானத்தை போல தான் ஓர் சிறந்த நண்பர்கள் இருப்பார்கள். என்னதான் சிறந்த நண்பர்களாக இருந்தாலும் ஓர் வயதிற்கு மேல் சில விஷயங்களை ஜமாய்க்க முடியாது. அப்படி நீங்கள் உங்கள் உயிர் தோழர்களுடன் ஜமாய்க்க வேண்டிய விஷயங்கள் குறித்து இனி காணலாம்...

பிரச்சனையில் மாட்டிக்கொள்வது
பிரச்சனையில் மாட்டிக்கொள்வது என்பது நீங்கlளாக தேடிப்போக தேவையில்லை, அதுவாக உங்கள் பின்னல் வந்து அமர்ந்துக் கொள்ளும் நல்ல நண்பன் என்ற பெயரில். அதுவும் போலிஸிடம் திமிரு பேச்சு பேசி மாட்டிக்கொள்வது எல்லாம் "சிறப்பான" பிரச்சனைகளில் ஒன்று. உங்களுக்கு காதலிக்கும் நண்பன் ஒருவன் இருந்தால் போதும் பிரச்சனைகள் தானாக ரயில் வண்டிப் போல தொடர்ந்து வரும்.

நீண்ட தூர பயணம்
மாநிலம் விட்டு மாநிலம் நண்பர்களுடன் தனியாக கார் அல்லது பைக்கில் பயணம் செய்வது என்பது வாழ்க்கையில் யாராலும் மறக்க முடியாத தருணமாக அமையும். இது போன்ற ஓர் அனுபவம் உங்கள் வாழ்க்கையில் நடக்கவில்லை என்றால் நீங்கள் உங்கள் வாழ்க்கையில் ஓர் பெரிய விஷயத்தை இழந்துவிட்டீர்கள் என்று தான் அர்த்தம்

தேர்வுக்கு முந்தைய நாள் நண்பனின் வீட்டில்
வருடம் முழுக்க கூத்தடித்துவிட்டு தேர்வுக்கு முந்தைய நாளில் நண்பனின் வீட்டில் படிக்க செல்கிறோம் என்று, படித்துக் கொண்டிருக்கும் அவனையும் சேர்த்து கெடுக்கும் சுகம், அது மிகவும் அலாதியானது ஆகும்!!!

நண்பர்களுடன் வெளியூரில் தங்குவது
பெரும்பாலும் அனைவருக்கும் இந்த வாய்ப்பு அமையாது. படித்து முடித்த பிறகு வெளியூரில் நண்பர்களுடன் தனி வீட்டில் தங்கி கூத்தடிக்கும் அனுபவம். நினைத்த நேரத்தில், படம், பார்ட்டி, சுற்றுப்பயணம் என வாழ்க்கை வானில் பறக்கும் காற்றாடியை போல் இருக்கும்.

திரைப்படம்
நண்பர்களுடன் திரைப்படம் பார்ப்பது தான் மிகவும் அதிரிபுதிரியான விஷயம் பேய் படம் கூட நண்பர்களோடு சேர்ந்து பார்க்கும் போது காமெடி படம் ஆகிவிடும். அதிலும், வார இறுதியில் நண்பர்களுடன் சேர்ந்து தொடர்ச்சியாக படம் பார்த்துக் கொண்டிருப்பது ரகளையாக இருக்கும். உடலுக்கு தீங்கேனினும், அந்த நாளோடு ஓர் பீரும், சிக்கனும் சேர்கையில் வீடு சொர்கமாக மாறிவிடும்.

கலாட்டா வீடியோக்கள்
கண்டிப்பாக ஒவ்வொரு நட்பு வட்டாரத்திலும் ஒரு புகைப்பட பைத்தியம் இருப்பான். எங்கு சென்றாலும் போட்டோ, வீடியோ, செல்ஃபி என்று நச்சரிக்கும் குணத்தோடு. ஆனால், சில நாட்கள் கழித்து அந்த புகைப்படங்களும், வீடியோக்களும் கண்ணில் நீர் சுரக்கும் வரை மகிழ்ச்சியடைய வைக்கும்.

மட்டையாவது
நண்பர்கள் சேர்ந்துவிட்டால் குடிப்பது என்பது அந்த ஆண்டவனே வந்தாலும் தடுக்க முடியாது, குடித்து முடித்தவுடன் வாந்தி எடுப்பதையும் கூட. கண்டிப்பாக ஒருவராவது மட்டையாகி உயிரெடுப்பார்கள்.

டேட்டிங்
இன்றைய சூழலில் இது மிகவும் சாதாரணமாகிவிட்டது, டேட்டிங் இல்லாத நட்பும், பேட்டிங் எடுபடாத பிட்சும் ஒன்றுதான் என்று பன்ச்செல்லாம் பேசுகின்றனர் இன்றைய இளசுகள். இந்த அனுபவங்கள் எல்லாம் இல்லாமல் ஓர் நட்பு வட்டம் அமைகிறது என்றால் அது முழுமையான நட்பாக இருக்க முடியாது.



Click it and Unblock the Notifications