Latest Updates
-
Mahalaya Amavasya 2026:மகாளய அமாவாசை எப்போது வருகிறது? இந்த நாளில் இறந்தவர்களின் ஆசியை பெற என்ன செய்ய வேண்டும் -
உங்க முகம் உடனடியாக பளீச்சுன்னு மாறணுமா? அப்ப ரோஜாப்பூ வெச்சு இப்படி ஃபேஸ் பேக் போடுங்க.. -
விமானத்தை ஓட்டுபவர்கள் கடைபிடிக்க வேண்டிய வினோதமான உணவுமுறை பழக்கம் என்ன தெரியுமா? -
1 கப் கோதுமை மாவு இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல உங்க பிள்ளைகளுக்கு இத செஞ்சு குடுங்க.. விரும்பி சாப்பிடுவாங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் பாவக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - சுவை வேற லெவலில் இருக்கும் -
World Meningitis Day 2026: காய்ச்சல், தலைவலி இருக்கா? மூளைக்காய்ச்சலா இருக்கலாம்! எச்சரிக்கும் டாக்டர்! -
2026 ராகு பெயர்ச்சியால் இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப் போறாங்க.. உங்க ராசியும் இதுல இருக்கா? -
மாத்திரைகள் ஏன் அலுமினியம் ஃபாயில்களில் மட்டுமே பேக் செய்யப்படுகிறது - அதன் ரகசியம் என்ன தெரியுமா? -
இந்த கஞ்சியை அடிக்கடி காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை மடமடன்னு வேகமா குறையும்.. -
அக்டோபர் 05 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு பல ஆசைகள் நிறைவேறப்போகுதாம்
கணவருக்கு மூன்றாவது திருமணம் செய்து வைக்க கஷ்டப்பட்ட முதல் இரண்டு மனைவிகள்... காரணம் என்ன தெரியுமா?
திருமண உறவு என்பது இந்தியாவில் மிகவும் புனிதமான உறவாக கருதப்படுகிறது, அதிலும் நமது கலாச்சாரத்தில் 'ஒருவனுக்கு ஒருத்தி' என்ற கோட்பாடு வலிமையாக உள்ளது. இந்த கோட்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாக முதல் மனைவி உயிருடன் இருக்கும்போது இரண்டாவது திருமணம் சட்ட விரோதம் என்ற சட்டமும் இயற்றப்பட்டுள்ளது.
இந்த சட்டம் திருமண உறவை பாதுக்கப்பதாக இருந்தாலும் இந்த சட்டத்தை மீறி ஒன்றுக்கு மேற்பட்ட திருமணங்கள் செய்பவர்கள் நம் நாட்டில் இருக்கத்தான் செய்கின்றனர். அவ்வப்போது இரண்டாவது திருமணம் நடைபெறுவது சாதாரணமானதாக இருந்தாலும் சிலர் அதையும் மீறி அபத்தமான செயல்களில் ஈடுபடுகின்றனர்.

ஆந்திர பிரதேசத்தின் அல்லூரி சீதாராம ராஜு (ஏஎஸ்ஆர்) மாவட்டத்தின் பழங்குடியின குக்கிராமத்தில் வசிப்பவர்கள் சமீபத்தில் ஒரு விசித்திரமான திருமணத்தை கண்டனர். அங்கு மணமகன் மூன்றாவது முறையாக திருமணம் செய்து கொண்டார் மற்றும் அவரது முதல் இரண்டு மனைவிகள் அந்த திருமணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்தனர். கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி ஆந்திராவின் தொலைதூர பகுதியில் திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை இந்த திருமண வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது.
செய்திகளின்படி, மணமகன், பெடபயலு மண்டலத்திற்கு உட்பட்ட கிஞ்சூரு கிராமத்தைச் சேர்ந்த எஸ் பாண்டன்னா, 2000 ஆம் ஆண்டில் முதல் மனைவி சாகேனி பர்வதம்மாவை மணந்தார், ஆனால் அந்த தம்பதியருக்கு குழந்தை பிறக்கவில்லை.
குழந்தை பிறக்காததால் அவருக்கு ஏற்கனவே திருமணமாகிவிட்டதை மறைக்காமல், 2005-ம் ஆண்டு சாகேனி அப்பலம்மா என்ற மற்றொரு பெண்ணை திருமணம் செய்துகொண்டார் பாண்டண்ணா. இந்த முறை அவரின் முயற்சி பயனளித்தது, 2007-ம் ஆண்டு இந்த தம்பதிக்கு ஆண் குழந்தை பிறந்தது.
அதன்பின் பாண்டன்னா தனது இரண்டு மனைவிகள் மற்றும் ஒரு மகனுடன் ஒரே வீட்டில் வசித்து வந்தார். பின்னர், இரண்டாவது மனைவிக்கு வேறு குழந்தை இல்லாததால், மேலும் குழந்தைகளைப் பெற மூன்றாவது திருமணம் செய்ய முடிவு செய்தார். இதுகுறித்து பாண்டண்ணா தனது மனைவிகளிடம் கூற, அவர்களே ஏற்பாடுகளை செய்ய முடிவு செய்தனர். இந்நிலையில் பாண்டான்னாக்கு லவ்யா என்ற பெண்ணுடன் மூன்றாவது திருமணம் நிச்சயிக்கப்பட்டது. திருமணத்திற்கான அழைப்பிதழ்களை தங்கள் பெயரில் அனுப்புவது மட்டுமின்றி, முதல் இரண்டு மனைவிகளும் தங்கள் கணவரின் மூன்றாவது திருமணத்தை அறிவிக்க கிராமத்தில் போஸ்டர்களை ஒட்டினர்.
ஜூன் 25 அன்று, ஆரவாரம் மற்றும் கூச்சல்களுக்கு மத்தியில் பாண்டன்னா மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொண்டார். பாண்டன்னா தனது மூன்று மனைவிகளுடன் ஒரே வீட்டில் வாழ்வார் என்று உள்ளூர்வாசிகள் தெரிவித்தனர். சில பழங்குடியின பகுதிகளில் ஆண்களுக்கு இரண்டு மனைவிகள் இருப்பது வழக்கம் என்று அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். இருப்பினும், ஒரு மனிதன் மூன்றாவது முறையாக திருமணம் செய்துகொள்வது பழங்குடியினருக்கே அரிது.
இதுபோன்ற சம்பவங்கள் பார்ப்பதற்கு வேடிக்கையாக இருந்தாலும் இவை சமூகத்தில் பெண்கள் மீதான அடக்குமுறையையும், அவர்கள் மீதான சுரண்டலையும் வெளிப்படுத்துகிறது. மேலும் பழங்குடியின மக்களிடையே இருக்கும் அறியாமையையும், சட்டத்தை அவர்கள் எப்படி மதிக்கிறார்கள் என்பதையும் வெளிச்சம் போட்டு காட்டுகிறது.



Click it and Unblock the Notifications

