ஆண்கள் ஏன் எப்போதும் சொல்வதைக் கேட்பதில்லை என்று தெரியுமா...?

By Super

'சாண் பிள்ளையானாலும் ஆண் பிள்ளை தான்', இந்த பிரபலமான கூற்று உண்மையாகவே உள்ளது. அவர்களுடைய ஈகோவிலோ அல்லது பொதுவாகவோ ஆண்களுக்கு இந்த பழக்கம் இருக்கும். பெரும்பான்மையான ஆண்கள் சொல்வதைக் கேட்பவர்கள் அல்ல மற்றும் பிறருடைய அறிவுரைகளையும் ஏற்க மறுப்பவர்களாக இருக்கிறார்கள். அவர்களை கடுமையாக முயற்சி செய்து சொல்வதை கேட்க வைப்பது முடியாத விஷயம். பிரசித்தி பெற்ற பழமொழி ஒன்றில் கூட, 'உங்களால் குதிரையை ஏரிக்கு அழைத்துச் செல்ல தான் முடியும், ஆனால் தண்ணீர் குடிக்குமாறு நிர்பந்தம் செய்ய முடியாது' என்று சொல்லப்பட்டுள்ளது.

இந்த பழக்கத்தை பெண்கள் விட்டுக் கொடுத்து ஏற்றுக் கொள்வதைப் பார்க்கும், பிற பெண்களுக்கு இச்செயல் மிகவும் எரிச்சல் மூட்டுவதாக உள்ளது. ஆண்களுக்கு பிடித்த அரசியல் அல்லது விளையாட்டு பற்றி பெண்கள் பேச முயன்றாலும் ஆண்கள் அவற்றை கேட்க முனைவதில்லை. சிலர் கேட்பார்கள், சிலா கேட்பது போல நடிப்பார்கள், ஆனால் கூர்ந்து கவனிக்க மாட்டார்கள். இவ்வாறு கேட்பவர்கள் கூட வேறு வேலையற்று இருந்தால் தான் இதை செய்கிறார்கள். தோனி பேட்டிங் செய்வதைப் பார்த்துக் கொண்டிருந்தால் கூட நன்றாக கேட்பவர்களிடம் பேச முயற்சி செய்யுங்கள், அவரைக் கண்டு நீங்கள் சோர்வடைந்தால், அது ஆச்சரியப்படக் கூடிய விஷயமில்லை.

பெரும்பாலான ஆண்கள் நிறைய வேலைகளையும், பலதரப்பட்ட சிந்தனைகளையும் தாங்கிய வண்ணம் இருப்பார்கள். அது அவர்கள் செய்து முடிக்காத வேலை குறித்தோ அல்லது அடுத்து என்ன செய்வது குறித்தோ இருக்கலாம். வேறு சிலர் அவர்களது எதிர்கால பாதுகாப்பை குறித்து எண்ணிக் கொண்டிருப்பார்கள். வேறு சிலர் முடித்திடாத விளையாட்டை தொடர்வதற்காக ஓய்வு கிடைக்காதா என்று ஏங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த காரணங்கள் தான் ஆண்கள் சொல்வதைக் கவனிக்காதவாறு வெளிப்படுத்துகின்றன.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்
முக்கியத்துவம்

முக்கியத்துவம்

சொல்வதைக் கேட்பது எவ்வளவு அவசியமானது மற்றும் முக்கியமானது என்பதை ஆண்கள் உணர்வதில்லை. குறிப்பிட்ட வயதிற்கு பின் அவர்களுடைய பெற்றொர்கள் சொல்வதையோ அல்லது பெண் தோழி அல்லது மனைவி சொல்வதையோ கூட கேட்பதில்லை. ஆண்களின் குணங்களில் சொல்வதைக் கேட்கும் தன்மை இருப்பதில்லை.

தவறாக புரிந்து கொள்ளுதல்

தவறாக புரிந்து கொள்ளுதல்

பெண்களும், பெற்றோர்களும், பெரியவர்களும் கூட ஆண்கள் சொல்வதைக் கேட்பதில்லை மற்றும் ஏற்றுக் கொள்வதில்லை என்ற எண்ணுவார்கள். பல நேரங்களில் ஆண்கள் கவனித்தாலும், கேட்பவைகளை ஏற்றுக் கொள்வதில்லை. இதன் காரணமாக உண்மைகளைக் கூட பலரும் மறுத்து வருகிறார்கள்.

உணர்வுகள்

உணர்வுகள்

பெண்கள் பொதுவாகவே உணர்ச்சிவசப்படுபவர்களாக இருப்பார்கள். அவர்கள் உணர்வுடன் கலந்தே பேசுவார்கள். ஆண்களால் பெண்கள் வெளிபடுத்த முயலும் உணர்வுகளை கண்டறியவோ அல்லது புரிந்து கொள்வதோ முடிவதில்லை. இதன் காரணமாகவே பெண்கள் ஆண்களை தவறாக புரிந்து கொள்கிறார்க்ள்.

விமர்சனம் செய்தல்

விமர்சனம் செய்தல்

ஆண்களோ பெண்களோ, யாராக இருந்தாலும், பொதுவாகவே தங்களை யாரும் விமர்சிப்பதை விரும்ப மாட்டார்கள். முக்கியமாக ஆண்களால் அதை ஒத்துக் கொள்ளவே முடியாது. அவர்கள் தங்களுடைய தோல்வியையும், தவறுகளையும் கூட ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். ஆதலால் அவர்களை பற்றிய விமர்சனங்களை கேட்காமல் தவிர்த்து விடுவார்கள்.

திருத்திக் கொள்ள விரும்பமாட்டார்கள்

திருத்திக் கொள்ள விரும்பமாட்டார்கள்

இது ஆண்களின் ஈகோவை மிகவும் சார்ந்த விஷயமாக உள்ளது. ஆண்களுக்கு அவர்களை திருத்துவது பிடிக்காது. அவர்களாகவே கற்றுக் கொள்ள விரும்புவார்கள். ஒரு வாகனத்தை ஓட்ட கற்று கொள்வதற்கு, யாரிடமும் ஆலோசனை கேட்பதற்கு பதிலாக, பல முறை கீழே விழுந்து தாங்களாகவே கற்றுக் கொள்வதையே விரும்புவார்கள்.

ஆளுமை போராட்டம்

ஆளுமை போராட்டம்

ஆண்கள் மற்றவர்கள் சொல்வதை கேட்பது தங்களுடைய தோல்வியாகவோ அல்லது பிறரின் ஆணைகளை ஏற்றுக் கொள்வதாகவோ கருதுவார்கள். அவர்களுடய ஈகோ அவர்களை அதிக அளவு பேசச் செய்பவராகவும் மற்றும் சும்மா கேட்டுக் கொண்டு இருக்காதவராகவும் இருக்கச் செய்வதில் பெரிய பங்கு வகிக்கிறது. அவர்கள் மற்றவர்கள் சொல்வதைக் கேட்பதன் மூலம், தங்களுடைய அதிகாரத்தை விட்டுத் தர விரும்புவதில்லை.

பகுத்தறிவு

பகுத்தறிவு

பெண்களின் அனைத்து பேச்சுகளும் பகுத்தறிவு மிக்கதாய் இருப்பதில்லை. ஆண்களால் பகுத்தறிவற்ற பேச்சை சகித்துக் கொள்ள முடியாது. ஆதலால் ஆண்கள் தங்களுடைய துணைகளின் அத்தகைய பேச்சுக்களை தவிர்த்துக் கொள்வார்கள். இது போன்ற பேச்சுக்களை ஒரு தருணத்தில் முடித்துக் கொள்ளவும் செய்வார்கள்.

முடிவுகள்

முடிவுகள்

ஆண்கள் அவரது செயல்களைப் பற்றிய இறுதி முடிவை பற்றியே எண்ணுவார்கள். ஒருவேளை அவர்கள் கவனித்துக் கொண்டிருந்தால் அவரது பாதி மனது இதை கேட்பதன் மூலம் என்ன பயன் என்பதை எண்ணிக் கொண்டு இருக்கும். அதிகளவில் உணர்ச்சி மிக்கதாகவோ மற்றும் உணர்வு பரிமாற்றங்களாகவோ பேச்சு இருந்தால் ஆண்கள் கேட்பதை நிறுத்தி விடுவார்கள்.

அறிவற்றவர்கள்

அறிவற்றவர்கள்

பொதுவாகவே ஆண்கள், அழகான பெண்களுக்கு அறிவு இல்லை என்ற கண்ணோட்டம் கொண்டவர்களாவர். எனவே, அவர்களது உணர்வு நிரம்பிய பேச்சுக்களை கேட்காமல் தவிர்க்கவும் மற்றும் அவர்களுடைய கருத்துக்களை கேட்பதை தவிர்க்கவும் முயலுவார்கள். பெண்கள் பேசும் இது போன்ற பேச்சுக்களை பொதுவாகவே ஆண்கள் தவிர்க்கவோ அல்லது கேட்பதாக நடிக்கவோ செய்கிறார்கள். ஆனால் அவர்கள் கண்டிப்பாக கவனிப்பதில்லை.

பேஸ்புக்கில் எங்களது செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்

Desktop Bottom Promotion