Latest Updates
-
ஹோட்டல் ஸ்டைல் உருளைக்கிழங்கு வெள்ளை குருமா - இட்லிக்கு இப்படி செய்யுங்க.. ருசி அள்ளும்.. -
கருத்தரிப்பு சிகிச்சைகள் குறித்து பெண்களிடம் இருக்கும் பொதுவான பயங்கள் குறித்து விளக்கும் டாக்டர்! -
இதுல நீங்க என்ன செய்வீங்கன்னு சொல்லுங்க.. உங்களிடம் மறைந்திருக்கும் குணத்தை சொல்றோம்.. -
12 ஆண்டுகளுக்கு பின் நிகழும் குரு-சூரிய சேர்க்கை: ஜூலையில் இந்த 4 ராசிக்கு டபுள் ஜாக்பாட் அடிக்கப்போகுது.. -
பருப்பு உருண்டை குழம்பு - சிம்பிளா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
2 வாரம் தொடர்ந்து முட்டை சாப்பிடுவதால் உடலினுள் என்ன நடக்கும்? - விளக்கும் அமெரிக்க டாக்டர்! -
ராகு நட்சத்திர பெயர்ச்சியால் இன்று முதல் இந்த 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படப்போகுது.. -
ரவா தேங்காய் தோசையும், தக்காளி சட்னியும் - 10 நிமிடத்தில் எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இன்றைய ராசிபலன் 30 ஜூன் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டம் கதவைத் தட்டப்போகுதாம் -
ஜூலையில் அஸ்தமனமாகும் குரு பகவான்: இந்த 3 ராசிக்காரர்களின் அதிர்ஷ்டம் பிரகாசிக்கப்போகுது..
திருமணமாகாத ஆண்களை சந்திக்க 10 இடங்கள்!!
பெண்களே, உங்களுக்கு வீட்டில் பார்க்கும் அறிமுகம் இல்லாத ஒருவரை திருமணம் செய்வதை விட நன்கு பழகி ஒரே ரசனையில் இருக்கும் மனம் கவர்ந்தவரை காதலித்து மணக்க ஆசையா? மனதுக்கு பிடித்தவரை மணப்பது நல்லதே. ஆனால் அவரை தேடி கண்டு பிடிக்க வேண்டும் இல்லையா? ஆனால் முதலில் கல்யாணம் ஆகாத ஆண்களை பார்ப்பது கடினமாக இருக்கும்.
காத்திருந்து தேடி ஏமாறாதீர்கள். அவர்கள் உங்கள் வீடு தேடி வர மாட்டார்கள். நீங்கள் தான் சரியான இடத்தில் அவர்களை சென்று பார்க்க வேண்டும். என்ன புதிராக உள்ளதா? கவலையை விடுங்கள்.
பொதுவாக திருமணம் ஆகாத ஆண்களை காண வேண்டுமென்றால் குறிப்பிட்ட இடங்களுக்கு சென்றால் அவர்களை பாரிக்கலாம். அங்கே சென்று உங்கள் ரசனைக்கேற்ற ஆண் நண்பர்களை உருவாக்கி அதிலிருந்து உங்களுக்கு தகுந்த ஆணை தேர்ந்தெடுக்கலாம். சரி அது எந்த இடங்கள் என்று இப்போது பார்க்கலாமா?

மது அருந்தகம்
மது அருந்தும்(Pub) இடத்தில் அதிகம் காணப்படுவது பெரும்பாலும் திருமணம் ஆகாத ஆண்களே. அவர்கள் தேடுவதும் திருமணம் ஆகாத பெண்களையே. அதனால் அருகில் இருக்கும் மது அருந்தகத்தில் போய் ஒரு நோட்டம் விடுங்கள். கண்டிப்பாக ஏற்ற ஆண்மகன் அங்கே இருக்கலாம்.

உடற்பயிற்சி கூடம்
உடற்பயிற்சி கூடத்தில் திருமணம் ஆகாத ஆண்களின் கூட்டம் நிரம்பி இருக்கும். இங்கு ஆண்களை தேர்ந்தெடுப்பதின் பயன், நல்ல கட்டமைப்புடன் இருக்கும் ஆண்களை அங்கே பார்க்கலாம். திருமணமான ஆண்களையும் இங்கு காணலாம். உங்களுக்கு ஏற்ற ஆன் இங்கே இருக்கலாம்.

திருமண நிகழ்ச்சி
பெண்களுக்கான சிறந்த வேட்டை களம் திருமண நிகழ்சிகள் தான்!!. திருமணம் ஆகாத பல ஆண்கள், நன்றாக ஆடை அணிந்து, நல்ல ஒழுக்கத்துடன், இருப்பதை காணலாம். திருமணம் நேரங்களில் ஏற்றவரை காண வாய்ப்புகள் அதிகம் உள்ளது.

இணையதளம்
திருமணம் ஆகாத ஆண்களை கண்டுபிடிக்க மற்றொரு சிறந்த வழி இணையதளம். இணையத்தளம் மூலன் டேடிங் செல்வதில் பல நம்பகத் தன்மை பிரச்சனைகள் இருக்கிறது. ஆனாலும் ஏற்ற ஆணை கண்டுபிடிக்க இது ஒரு அடிப்படை இடமாக இருக்கிறது. யாருக்கு தெரியும், கனவு ஆண்மகனை இணையதளத்தில் கூட கண்டுபிடிக்கலாம் அல்லவா?

பூங்கா
பூங்காவில் ஒரு ஆண் தனியாக ஜாகிங் செய்கிறாரா? தேடும் ஆண் அவராக கூட இருக்கலாம். திருமணம் ஆகாத ஆண்கள் பூங்காவில் தனியாக உலாவுவதை காணலாம். ஏன், அவர் கூட ஜோடியை தேடி அலைந்து கொண்டிருக்கலாம்.

கச்சேரிகள்
கச்சேரிகளிலும் திருமணமாகாத ஆண்களை காணலாம். ஒரு கச்சேரிக்கு செல்லுங்கள், அங்கே இசை ரசனைக்கேற்ற ஆணை கண்டுபிடித்து அவருடன் இணைப்பை ஏற்படுத்துங்கள். இப்படி சில ஆண்களோடு நண்பர்கள் ஆக வாய்ப்பு இருப்பதால் அவர்களில் ஒருவரை டேடிங் செய்ய தேர்ந்தெடுக்கலாம்.

புத்தக மன்றங்கள்
கல்யாணம் ஆகாத ஆண்களை புத்தக மன்றங்களிலும் அடிக்கடி காணலாம். அது வேலை வெட்டி இல்லாத காரணத்தினால் அல்ல, புத்தகங்கள் மேல் அவர்களுக்கு இருக்கும் ஈடுபாட்டினால். புத்தகத்தின் மேல் ஆர்வம் இருந்தால் அதை சாக்காக வைத்து அவருடன் தொடர்பை ஏற்படுத்தலாம். பொதுவான விருப்பங்கள் உள்ள ஆண்களிடம் நண்பர்களாகி, அவர்களில் ஏற்றவரை தேர்ந்தெடுங்கள்.

கருத்தரங்கு
நகரத்தில் நடக்கும் கருத்தரங்குகளுக்கு செல்லுங்கள்; அது எந்த தலைப்பாக இருந்தாலும் சரி. அங்கே உங்களை போலவே கருத்தரங்கில் ஈடுபாடு இல்லாத கல்யாணம் ஆகாத ஆண்களை கண்டுபிடிக்கலாம். அவருடன் நட்பு ஏற்பட்டால் அங்கயே இருந்து கருத்தரங்கை ரசிக்கலாம் அல்லது வெளியே எங்கேயாவது சென்று பொழுதை கழிக்கலாம்.

நடனப் பள்ளி
கல்யாணம் ஆகாத ஆண்கள் அதிகமாக செல்லும் இன்னொரு இடம் நடனப் பள்ளிகள். உங்களை போல அவர்களும் தங்களுக்கு ஏற்ற பெண்ணை தேடிக் கொண்டிருக்கலாம். ஆகையால் கல்யாணம் ஆகாத ஆண்களோடு நட்பு ஏற்படும். வாழ்க்கை துணையை கூட இங்கே நீங்கள் காண நேரிடலாம்.

கடற்கரை
கடற்கரையிலும் அதிக அளவு திருமண ஆகாத ஆண்களை அவர்களுடைய நண்பர்கள் மற்றும் உறவினர்களோடு காணலாம். அதனால் அப்பப்போ கடற்கரைக்கு செல்லுங்கள். அங்கே கூட ஏற்ற ஜோடி கிடைக்க வாய்ப்பு உள்ளது.



Click it and Unblock the Notifications