Latest Updates
-
நவம்பர் 10, 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்களுக்கு தெண்டசெலவுகள் தேடிவரப் போகுதாம் - பர்ஸ் பத்திரம் -
நவம்பர் 22-ல் உருவாகும் லட்சுமி நாராயண ராஜயோகம்: இந்த 4 ராசிக்காரங்க ராஜவாழ்க்கை வாழப்போறாங்க.. -
புதன் விசாக நட்சத்திரத்திற்குள் நுழைவதால் இந்த 3 ராசிகளை ஆபத்துகள் துரத்தப்போகுதாம் - உங்க ராசி இதுல இருக்கா? -
சப்பாத்திக்கு இந்த வெஜிடேபிள் வெள்ளை குருமா செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க! -
சத்தான உளுந்தோரை ரெசிபி - இந்த மாதிரி செஞ்சு சாப்பிட்டு பாருங்க - எலும்பு இரும்பு மாதிரி இருக்கும் -
Kandha Sashti Viradham 2026: கந்த சஷ்டி விரதம் இருக்கும் போது செய்ய வேண்டியவை மற்றும் செய்யக்கூடாதவை! -
Hair Care: முடி நரைப்பதை தாமதப்படுத்தணுமா? அப்ப இந்த உணவுகளை அடிக்கடி சாப்பிடுங்க -
ஆபீஸில் பிரச்சனை அதிகமா இருக்கா? அப்ப உங்க ஆபீஸ் டேபிளில் இந்த பொருளை வாங்கி வையுங்க.. -
சூடான உணவை குளிர்சாதனப் பெட்டிக்குள் வைத்தால் என்ன நடக்கும்? அப்படி வைப்பது பாதுகாப்பானதா? -
2027 ஆம் ஆண்டு பிறப்பதற்கு முன் இந்த 3 ராசிக்காரர்களின் பணப்பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகுதாம்
பெண்கள் காதலனிடம் வாய்விட்டு கேட்காத சில விஷயங்கள்!!!
அனைவருக்கும் வித்தியாசமான விருப்பங்கள் இருக்கும். அதே சமயம் சில வெறுப்பூட்டும் விஷங்களும் இருக்கும். ஆனால் அதனை வெளியே மற்றவர் முன்பு சொல்லமாட்டார்கள். அதிலும் காதலிப்பவர்களுக்கு இருக்கும் விருப்பங்கள் சற்று வித்தியாசமானதாக இருக்கும். அதில் குறிப்பாக பெண்கள், தங்கள் காதலனிடம் சில விஷங்களை வாய்விட்டு கேட்கவே மாட்டார்கள். ஏனெனில் அதில் சிறிது வெட்கம் மற்றும் சரியாக வெளிப்படுத்த தெரியாதவை போன்றவை இருப்பதாலேயே தான்.
ஆம், சில பெண்களுக்கு தங்கள் விருப்பங்களை காதலனிடம் கேட்பதற்கு தயங்குவார்கள். ஆனால் அதனை அவர்களே எதிர்பாராதவாறு செயல்பட வேண்டும் என்று நினைப்பார்கள். என்ன புரியவில்லையா? ஆமாங்க... பெண்களை புரிந்து கொள்வது ரொம்பவே கஷ்டம் தான். ஏனெனில் அவர்கள் எந்த நேரத்தில் எப்படி இருப்பார்கள் என்பதை புரிந்து கொள்வது மிகவும் கஷ்டம் தான்.
இப்போது அந்த வகையில் பெண்கள் தங்கள் காதலனிடம் கேட்காமல், எதிர்பார்க்கும் சில விஷயங்கள் என்னவென்று சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். அதைப் படித்து உங்கள் காதலியை குஷிப்படுத்துங்கள்.

* பொதுவாக ஆண்கள் வெளியே நண்பர்களுடன் செல்லும் போது, காதலியை அழைத்துச் செல்லமாட்டார்கள். ஏனெனில் சில பெண்கள் கூச்சசுபாவம் உடையவர்கள். ஆகவே ஆண்கள், காதலி வரமாட்டாள் என்று நினைத்து கேட்கவும் மாட்டார்கள், அழைத்தும் செல்லமாட்டார்கள். ஆனால் உண்மையில் பெண்கள் காதலன் மற்றும் அவனுடைய நண்பர்களுடன் வெளியே செல்ல விரும்புவார்கள். ஆனால் அதைக் கேட்க மாட்டார்கள். ஆகவே ஆண்களே! உங்கள் நண்பர்களுடன் வெளியே செல்லும் போது, உங்கள் காதலியிடம் வருகிறாயா என்று கேட்டு, அவர்கள் வந்தால் அழைத்துச் செல்லுங்கள்.
* அனைத்து பெண்களுக்கும் பாராட்டு என்றால் மிகவும் பிடிக்கும். சில பெண்கள் அதை வெளிப்படையாக கேட்க மாட்டார்கள். ஆனால் அதற்கான முயற்சியில் மறைமுகமாக ஈடுபடுவார்கள். உதாரணமாக, உங்கள் காதலி திடீரென்று ஆச்சரியப்படுத்தும் வகையில் ஏதாவது உணவை சமைத்துக் கொடுத்தால், அதை சாப்பிட்டு அவர்களை பாராட்டுங்கள்.
* காதலி ஏதாவது வேலையோ அல்லது காத்திருக்கும் போதோ, அவர்களின் பின்புறம் வந்து, அவர்களது இடுப்பை தொட்டாலோ அல்லது பின்புறம் வந்து கட்டிப் பிடித்து முத்தம் கொடுத்தாலோ மிகவும் பிடிக்கும். மேலும், இது காதலியை சமாதானப்படுத்துவதற்கான ஒரு சூப்பரான வழியும் கூட. இதனை பெண்கள் விரும்பினாலும், கேட்கமாட்டார்கள்.
* பெண்கள் அவர்களுடைய தோழிகளின் முன்பு, தன் காதலன் பாசத்தை, அன்பை வெளிப்படுத்த வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். ஆனால் அதை வெளிப்படையாக சொல்லமாட்டார்கள்.
* ஒவ்வொரு பெண்ணும், தன் காதலன் தனக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் என்று ஆசைப்படுவார்கள். அதிலும் ஏதேனும் மன வருத்தத்தில் அல்லது கஷ்டத்தில் இருந்தால், அப்போது மனதை ஆறுதல் படுத்துவதற்கு தன் காதலன் வர வேண்டும் என்று நினைப்பார்கள். குறிப்பாக, தன் கஷ்டத்தை காதலன் தன்னைப் பார்த்த உடனேயே தெரிந்து கேட்க வேண்டும் என்று எண்ணுவார்கள்.
இவையே பெண்கள் தங்கள் காதலனிடம் கேட்காமலேயே எதிர்பார்க்கும் விஷயங்கள்.



Click it and Unblock the Notifications
