Latest Updates
-
நிலாவில் அணுகுண்டை வெடிக்க வைக்க முயற்சி செய்த அமெரிக்கா - இந்த ஆபத்தான திட்டம் ஏன் நிறுத்தப்பட்டது தெரியுமா? -
மணமணக்கும்.. காராமணி முருங்கைக்காய் குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
ஐயங்கார் ஸ்டைல் அவரைக்காய் பொரிச்ச கூட்டு ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - வித்தியாசமா சூப்பரா இருக்கும் -
மறக்க வைத்தே மனிதனை மழுங்கடிக்கும் அல்சைமர் நோய்! காரணம் என்ன? நரம்பியல் நிபுணர் விளக்கம் -
50 ஆண்டுகளாக திருமணமே நடக்காத கிராமம் முதல் இரட்டை குடியுரிமை வரை இந்தியாவின் நம்பமுடியாத வினோத கிராமங்கள் -
கடக ராசியில் குரு-செவ்வாய் கூட்டணி: 12 ராசிகளில் நீச பங்க ராஜயோகம் யாருக்கு? - ஜோதிடர் கணிப்புகள்! -
ராகி ரவா இட்லியும்.. பீர்க்கங்காய் சட்னியும்.. - எப்படி செய்றதுன்னு பாத்து ஒருவாட்டி ட்ரை பண்ணுங்க.. -
செப்டம்பர் 21, 2026: இன்றைய நாள் இந்த 4 ராசிகளுக்கு வீண் செலவுகள் தேடிவருமாம் - கவனமா இருங்க -
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும்
பெண்களுக்கு பிடித்த “ஹாட் பாய்" போல் இருப்பதற்கான சில டிப்ஸ்...
பெண்கள் உங்களைப் பற்றி பேசுவதில்லை என்று கவலைப்படுகிறீர்களா? அவர்களிடம் நெருங்குவதற்கு ஆசையிருந்தும், பயத்தால் விலகி நிற்கிறீர்களா? அப்படியெனில் இந்த டிப்ஸ் உங்களுக்கு நிச்சயமாக உதவும். ஏனெனில் இப்போது பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கும், அவர்கள் உங்களை பற்றி பேசுவதற்கு என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்று கொடுத்துள்ளோம்.
நிச்சயம் இவை பெண்களிடம் நெருங்கி பழகுவதற்கான நிலைக்கு எடுத்துச் செல்லும். மேலும் பெண்களுடன் வெளியே செல்ல, நீங்கள் அவர்களிடம் கெஞ்சுவது போய், உங்களுடன் வருவதற்கு அவர்கள் போட்டியிடும் நிலைமையும் வந்து விடும்.

ஃபேஷனை முடக்கிவிடுங்கள்
சரியான ஆடைகளை தேர்வு செய்வதுடன், அவை தற்கால மார்டன் ஆடைகளாக இருக்குமாறு தேர்வு செய்யுங்கள். மேலும் தேர்வு செய்யும் ஆடைகளின் நிறம் முடி, கண்கள் மற்றும் சருமத்திற்கு பொருந்தக் கூடியதாக இருக்கட்டும்.

உடற்பயிற்சி தேவை
ஒரு ஹார்ட்கோர் பாடி பில்டரின் தோற்றத்தை பெறாவிட்டாலும், நல்ல அழகான தோற்றத்தோடு இருந்தால் தான் பெண்களைக் கவர முடியும்.ஆகவே உடலில் உள்ள திசுக்களுக்கு சக்தி கொடுக்கும் வகையில் உடற்பயிற்சி செய்து மெருகேற்றினால், பெண்களை கவர்ந்திழுக்கலாம்.

இவற்றை கவனிக்கவும்
ஸ்டைலான ஹேர் கட், அழகான ஒழுங்குபெற்ற நகம், ஷேவ்விங் செய்தல், முடியை திருத்தம் செய்தல் போன்றவை மிகவும் முக்கியம். காதுகளிலோ, மூக்கிலோ முடி இருந்தால், அவற்றை நீக்கி விடுவதில் கவனம் கொள்ளுங்கள்.

வாசனை, பெண்களை கவரட்டும்
டியோடரண்டால் முழுவதும் குளிக்காமல், மெல்லியதாக மனம் வீசும் படியாக ஸ்ப்ரே அடித்துக் கொள்ளுங்கள். அதுவும் நன்றாக குளித்து புத்துணர்வுடன் இருங்கள். எவ்வளவு மார்டனாக ஆடை உடுத்தினாலும், ஸ்டைலாக காட்சியளித்தாலும், உங்கள் மீது துர்நாற்றம் வீசினால் கண்டிப்பாக தனிமை தான் மிஞ்சும்.

நல்ல தோற்றத்தை உருவாகி கொள்ளுகள்
நேராக நின்றால் தான் தன்னம்பிக்கை தெரியும். ஆனால் கொஞ்சம் வளைந்தபடி நின்றால், தன்னம்பிக்கை குறைவும், பாதுகாப்பின்மையும் நன்கு வெளியே தெரியும். ஆகவே நேராக நிற்கும் பழக்கத்தை வளர்த்துக் கொள்வது உங்களை நீங்களே ரசிக்கின்றீர்கள் என்று அர்த்தம். அதுவே பெண்கள் உங்கள் மீது ஈர்ப்பு கொள்வதற்கும் உதவும்.

கவர்ந்திழுக்கும் குரலை பழகுங்கள்
ரேடியோ மற்றும் செய்தி வாசிப்பவர்களை போன்று பேசுவதை தவிர்த்து விடுங்கள். அதற்கு பதிலாக, ஒரு திரைப்படத்தில் காட்டப்படும் கவர்ச்சியான ஆண்களின் குரல் மாதிரியாக கொண்டு பேசுங்கள். இவ்வாறு பேசுவதால் பெண்களின் கவனம் உங்கள் பக்கம் திரும்பும் மற்றும் உற்று கவனிப்பார்கள். மேலும் அவர்களிடம் நீங்கள் பேசும் பொழுதும் உருகிப் போவார்கள்.

அமைதியாகவும் அழுத்தமாகவும் இருங்கள்
உங்களிடம் பேசும் பெண் உணர்ச்சி வசப்பட்டு பேசினால், உங்கள் உணர்ச்சிகளை உடனே வெளிக்காட்டாமல் அமைதியாக இருங்கள். அவ்வாறு இருப்பது பெண்களை மிகவும் கவரும்.

நல்ல பழக்கத்தை கையாளுங்கள்
பெண்களுக்காக கதவு திறந்து விட்டு, நன்றி கூறுவது, உங்களை ஜென்டில் மேனாக காண்பிக்கும். ஆனால் சில வேளைகளில் இவ்வகை பொதுவான பழக்கங்களை கையாளும்போது அவர்கள் உங்களை கோபத்துடன் பார்த்தால், நீங்கள் செய்வது அவர்களுக்கு பிடிக்கவில்லையென்றும், அவை இக்காலத்தில் யாரும் செய்யாதது என்றும் உணர்ந்து கொள்ளுங்கள்.

பல வாய்ப்பை பயன்படுத்துங்கள்
பெண்களுக்கு எது பிடிக்கின்றது, எது பிடிக்கவில்லை என்று கண்டுபிடிப்பதற்கு பல முயற்சிகளை செய்ய வேண்டிருக்கும், செய்யவும் வேண்டும். இல்லையென்றால் அவர்களின் கைக்குள் இல்லாமல், நல்ல நண்பர்களின் பட்டியலில்தான் இருக்க முடியும்.

முக்கியமான கட்டம்
ஒரு பெண்ணுக்கு உங்களை பிடித்திருக்கிறது என்று தெரிந்தால், நேரத்தை வீணாக்காமல் உடனே தனியாக எங்காவது அழைத்து செல்லுங்கள். ஏனென்றால் வாழ்க்கையை இயல்பாக எடுத்துக் கொள்ளும் அதே சமயம் உறுதியாகவும் இருக்கும் ஆண்களை பெண்களுக்கு எப்பொழுதும் பிடிக்கும்.



Click it and Unblock the Notifications
