Latest Updates
-
மிதுனத்தில் 3 கிரகங்களால் உருவாகியுள்ள திரிகிரக யோகம்: இந்த 4 ராசிகளின் நிதி நிலை இருமடங்கு அதிகரிக்கப்போகுது. -
கோடை வெயிலால் அவதியா? இந்த வாஸ்து செடிகளை வீட்டில் வையுங்க… குளிர்ச்சியும் பணவரவும் தானாக தேடி வரும்! -
செஃப் தீனாவின் சிக்கன் வறுவல் - வெறும் 4 பொருள் வெச்சே செய்யலாமாம்.. எப்படின்னு பாருங்க.. -
ராகி கஞ்சி முதல் கம்பு கஞ்சி வரை - எந்த கஞ்சி குடிச்சா, என்ன நன்மை கிடைக்கும்? - விளக்கும் டாக்டர்! -
கோடை வெயிலில் வீடு சூடாக இருக்கா? இந்த வாஸ்து செடிகளை வைத்தால் குளிர்ச்சியும் பணவரவும் நிச்சயம்! -
சனி பகவானின் நட்சத்திர பெயர்ச்சி: அக்டோபர் வரை எந்த ராசிக்கு சூப்பராகவும், யாருக்கு மோசமாகவும் இருக்கும்? -
பெங்களூரு ஸ்பெஷல் தண்ணி சட்னி - எப்படி செய்றது-ன்னு பாத்து ஒருடைம் ட்ரை பண்ணுங்க.. -
இன்றைய ராசிபலன் 19 மே 2026: இன்று இந்த 4 ராசிக்காரங்களுக்கு மோசமான நாளாக இருக்குமாம் -
புதன் நட்சத்திர பெயர்ச்சி: நாளை முதல் இந்த 3 ராசிக்காரர்களுக்கு நிதி இழப்பு ஏற்பட வாய்ப்பிருக்கு.. உஷார்.. -
சுக்கிரன் கடக ராசிக்கு செல்வதால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 4 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா?
ஆண்களுக்கு பிடித்த பெண்களுக்கு பிடிக்காத செயல்கள்!!!
இந்த உலகில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியான விருப்பங்கள் இருக்கும். அதில் ஒருசில செயல்கள் மட்டும் தான் அனைவருக்குமே ஒத்துப் போகும். ஏன் அனைவருக்குமே தனிப்பட்ட முறையில் பிடித்தவை மற்றும் பிடிக்காதவை என்று இருக்கும். அவற்றில் ஆண்களுக்குப் பிடித்த ஒருசில செயல்கள் பெண்களுக்குப் பிடிக்காது, பெண்களுக்குப் பிடித்த செயல்கள் ஆண்களுக்குப் பிடிக்காது. ஆனால் திருமணம் அல்லது காதல் செய்துவிட்டால், ஒருசிலவற்றை பொறுத்துக் கொண்டு தான் செல்ல வேண்டும். அவ்வாறு நடந்தால் தான், வாழ்க்கை நன்கு சுமுகமாக செல்லும்.
சரி, இப்போது ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும், ஆனால் பெண்களுக்கு பிடிக்காத செயல்களில் சிலவற்றை பட்டியலிட்டுள்ளோம். உண்மை என்னவென்றால், இத்தகைய செயல்களை பெரும்பாலான ஆண்கள் செய்து வருகின்றனர்.

* ஆண்களின் செயல்களில் மிகவும் மோசமானது என்றால், அது வீட்டை அசுத்தமாக வைத்துக் கொள்வது தான். அவர்கள் எப்போதுமே தங்கள் அறைகளை ஒரு குப்பை போன்று தான் வைத்திருப்பார்கள். அதிலும் எந்த ஒரு பொருளும் இருக்க வேண்டிய இடத்தில் இருக்காது. ஆனால் பெண்களுக்கு எப்போதும் சுத்தத்துடன் இருக்க வேண்டும். ஆகவே இத்தகைய மோசமான சூழ்நிலையைப் பார்த்தவுடன், அவர்கள் கோபமடைந்து சண்டைப் போடுகின்றனர். பெரும்பாலான வீடுகளில் இந்த ஒரு காரணத்திற்காகவே பெண்கள் ஆண்களுடன் சண்டை போடுகின்றனர்.
* சரியாக ஷேவிங் செய்யாமல் இருப்பது. அதுவும் வாரக்கணக்கில் சிலர் ஷேவிங் செய்ய மாட்டார்கள். ஏனெனில் அதைச் செய்வதற்கு சோம்பேறித்தனம் என்பதாலேயே தான். அதுமட்டுமின்றி, அவர்களது சோம்பேறித்தனத்தால், அவர்கள் அழுக்கு சட்டையை கூட இரண்டு நாட்கள் போடுவார்கள். மேலும் எங்காவது வெளியே சென்றுவிட்டு, வீட்டிற்கு வந்தால், உடனே முகம், கை, கால் கழுவாமல், அப்படியே நீண்ட நேரம் உட்கார்ந்து நேரத்தை வீணாக்குவதைப் பார்த்தாலும், பெண்களுக்கு பிடிக்காது.
* நிறைய ஆண்கள் தூங்குவதை விரும்புவார்கள். அதிலும் தனிமையல் மனைவி அருகில் இருந்தால் கூட, அதனைப் பொருட்படுத்தாமல், தூங்குவதையே நோக்கமாக வைத்துக் கொண்டு தூங்குவார்கள். இதில் கொடுமை என்னவென்றால், வார இறுதியில் விடுமுறை நாட்களில் மனைவி அல்லது காதலியுடன் நேரத்தை சிறிது நேரம் செலவழிக்காமல், தூங்கிக் கொண்டிருப்பது தான். இந்த நேரத்தில் மட்டும் கணவன் அல்லது காதலன், மனைவி அல்லது காதலி கையில் கிடைத்தார்கள் என்றால், அவர்கள் சட்னி தான்.
* பொதுவாக ஒருசில ஆண்கள் அவர்களது ஈகோவினால், ரொமான்ஸை சரியான நேரத்தில் வெளிப்படுத்தமாட்டார்கள். ஆகவே பெண்கள் அதனை தாங்காமல், அவர்களே வெளிப்படுத்தி விடுகிறார்கள். உதாரணமாக, பெண்கள் அடிக்கடி ஐ லவ் யூ என்று சொன்னால், ஆண்கள் அதனை மீண்டும் சொல்ல பல மாதங்கள அல்லது வருடங்கள் கூட ஆகும்.
* ஆண்கள் அனைவருக்குமே கிரிக்கெட் என்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் பெண்களுக்கு அறவே பிடிக்காது. ஏனெனில் பெண்கள் நன்கு அழகாக கண்ணைக் கவரும் வகையில் உடை அணிந்து கொண்டு வந்து, கிரிக்கெட் பார்த்துக் கொண்டிருக்கும் ஆண்களிடம் காண்பித்தால், அந்த நேரத்தில் உடுத்திய ஆடையை கவனிக்காமல், டிவியை வாயை திறந்து பார்த்துக் கொண்டிருப்பதால், பெண்களுக்கு கிரிக்கெட் பிடித்தாலும், பிடிக்காமல் போய்விடுகிறது.
* நிறைய தம்பதியர்கள் சண்டை போடுவதற்கு காரணம், வீடியோ கேம்ஸ் தான். ஏனெனில் ஆண்கள் பலர் தங்கள் நேரத்தை செலவழிக்க வீடியோ கேம்ஸை விளையாடுவார்கள். அத்தகைய விளையாட்டை எப்போதாவது விளையாடினால் பரவாயில்லை. ஆனால் அதனையே எப்போதும் விளையாடிக் கொண்டிருந்தால், எப்படி பிடிக்கும்.
* புத்தகம் படிப்பது பெண்களுக்கும் பிடித்த விஷயம் தான். ஆனால் அதே புத்தகத்தை வீட்டில் காலை அல்லது மதிய வேளையில் படித்தால் போதாதா என்ன? ஆம், ஆண்கள் பெரும்பாலும் இரவில் படுக்கும் போது மனைவியுடன் பேசிக் கொண்டே தூங்காமல், புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தால் பிடிக்குமா என்ன?
இவையே ஆண்களுக்குப் பிடித்த, பெண்களுக்கு பிடிக்காத செயல்கள். வேறு ஏதாவது செயல்கள் உங்களுக்குத் தெரிந்தால், அதை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்... என்ன நண்பர்களே! நான் சொன்னது சரிதானா?



Click it and Unblock the Notifications