For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

விவாகரத்தை தவிர்ப்பதற்கான சில டிப்ஸ்...

By Maha
|

இந்த உலகில் எந்த ஒரு உறவுமே நிலையாக நிலைப்பதில்லை. இதற்கு காரணம் ஒவ்வொருவரின் மனநிலையும் வித்தியாசமானதாக இருப்பது தான். மனிதன் என்றால் வித்தியாசம் இருக்கும் தான். ஆனால் அதே சமயம் புரிந்து கொள்ளுதலும், விட்டுக் கொடுத்து நடப்பதும் நிச்சயம் ஒவ்வொருவரிடமும் இருக்க வேண்டும். அத்தகைய மனநிலை இல்லாவிட்டால், அனைத்து உறவுகளுமே பாதியிலேயே பிரிந்துவிடும். மேலும் இந்த நிலைமை திருமணமானவர்களுக்கு கூட உள்ளது. இதற்கு இருவரிடமும் சரியான புரிதலும், மனப்பக்குவமும் இல்லாததே ஆகும்.

அதுமட்டுமின்றி இன்றைய காலத்தில் திருமணம் செய்து கொள்பவர்கள், திருமணத்தை ஒரு விளையாட்டாகவே நினைப்பதால் தான், அந்த உறவுக்கு முடிவை தேடிக்கொள்கின்றனர். இந்த உலகில் இருக்கும் உறவுமுறைகளிலேயே கணவன்-மனைவி உறவு தான் மிகவும் சிறந்தது. இத்தகைய உறவை வாழ்நாள் முழுவதும் தக்க வைத்துக் கொண்டு சந்தோஷமாக வாழ்பவர்களே உண்மையான அதிர்ஷ்டசாலிகள். ஏனெனில் இந்த உறவில் அனைத்து உறவுகளுமே அடங்கும். எனவே இத்தகைய அருமையான திருமண உறவிற்கு முறிவு என்னும் பெயரில் இருக்கும் விவாகரத்து ஏற்படாமல் இருப்பதற்கு ஒரு சில டிப்ஸ்களை பட்டியலிட்டுள்ளோம். அது என்னவென்று படித்து தெரிந்து கொள்ளுங்கள்...

Relationship Tips To Avoid Divorce
* கணவன்-மனைவி இருவருக்குள் சண்டை வருவது சாதாரணம் தான். ஆனால் அந்த பிரச்சனை உடனே தீர்ந்துவிட வேண்டும். இல்லையெனில் அந்த பிரச்சனையே இருவருக்கும் இடையில் பெரும் பிரிவை ஏற்படுத்தும். அதற்கு முதலில் அந்த பிரச்சனையைப் பற்றி இருவரும் பொறுமையாக பேச வேண்டும். இந்த நேரத்தில் ஈகோவை மனதில் கொண்டு நடந்தால், பின் இருவரும் வாழ்நாள் முழுவதும் பிரிய வேண்டி வரும்.

* சந்தோஷமான வாழ்க்கை அமைய வேண்டும் என்று நினைத்தால் மட்டும் போதாது. சண்டைகள் வந்தால், உடனே அந்த சண்டையை நிறுத்துவதற்கான வழிமுறைகளையும் யோசித்து, அவற்றை தீர்ப்பதற்கு முயல வேண்டும். இவ்வாறு தீர்வு கண்டால், நிச்சயம் விவாகரத்தை தவிர்க்க முடியும்.

* விவாகரத்து நிச்சயம் வேண்டும் என்று நினைக்கும் தருவாயில், அதனை தடுப்பதற்கு நடந்த சண்டையை மறந்து, இருவரும் சந்தோஷமாக இருந்த தருணங்களை நினைத்து பார்த்தால், கண்டிப்பாக விவாகரத்தை தவிர்க்கலாம்.

* தவறு செய்வதால் தான், சண்டைகள் வருகின்றன. இந்த உலகில் தவறு செய்யாதவர்களே இருக்கமாட்டார்கள். மேலும் தவறு செய்தவர்கள், தவறை உணர்ந்து மனம் வருந்தி மன்னிப்பு கேட்டால், நிச்சயம் அந்த உறவு மிகவும் அழகாக இருக்கும். எனவே தவறு யார் மீது இருந்தாலும், அப்போது ஈகோ பார்க்காமல், மன்னிப்பு கேட்க வேண்டும்.

* நடைமுறை மற்றும் பழக்கவழக்கங்களை சூழ்நிலைக்கு தகுந்தவாறு மாற்றிக் கொள்ள வேண்டும். அதைவிட்டு எப்போதுமே ஒரே மாதிரி செயல்பட்டால், பின் இருவருக்கும் இடையில் எந்த நேரமும் சண்டை வந்து கொண்டே இருக்கும். ஆகவே ஒருசில மாற்றங்கள் கூட விவாகரத்தை தடுக்கும்.

* திருமண வாழ்வில் சரியான புரிதல் மற்றும் நம்பிக்கை தான் மிகவும் முக்கியமானது. அந்த சரியான புரிதல் மட்டும் இல்லாவிட்டால், அது இறுதியில் நம்பிக்கையின்மையை ஏற்படுத்திவிடும். பின் எந்த நேரமும் சண்டை வருவதோடு, இறுதியில் விவாகரத்து வரை சென்று விடும். எனவே எதுவானாலும் மனதில் கொண்டு செயல்படாமல், அதனை பேசி இருவரும் ஒருவரை ஒருவர் நன்கு புரிந்து கொள்வதன் மூலம், பிரிதலை தடுக்கலாம். ஆனால் அது சற்று தாமதமாகிவிட்டாலும், பின் விவாகரத்து தான் முடிவு.

இவை அனைத்தையும் மனதில் கொண்டு செயல்பட்டால், விவாகரத்து ஏற்படுவதைத் தடுத்து, சந்தோஷமான திருமண வாழ்வை மேற்கொள்ளலாம்.

English summary

Relationship Tips To Avoid Divorce

A marriage cannot always be good. Every couple doesn't end up happy and comfortable with each other. Even in marriages, we get to notice constant conflicts, small tiffs, anger and upset moods. It is nothing new and exclusive with one particular couple. If you want to stay away from getting divorced, then here are few simple tips that can save your relationship. Check out...
Desktop Bottom Promotion