Latest Updates
-
இட்லிக்கு இந்த தண்ணி சட்னியை செய்யுங்க.. வீட்டுல எல்லாரும் 2 இட்லி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இன்றைய ராசிபலன் 07 செப்டம்பர் 2026: இன்று இந்த 4 ராசிகளுக்கு அதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம் -
கடக ராசியில் நீச்சமடையும் செவ்வாய்: இந்த 3 ராசிக்காரர்களின் பிரச்சனை முடிவுக்கு வரப்போகுது! -
தலைமுடி கொத்து கொத்தா கொட்டுதா? அப்ப இந்த எண்ணெயை தயாரிச்சு யூஸ் பண்ணுங்க.. -
இந்த 3 ராசிக்காரர்களுக்கு 40 வயசுக்கு மேல தான் அதிர்ஷ்டம் பிரகாசிக்கும்.. உங்க ராசி இதுல இருக்கா? -
உங்ககிட்ட இந்த 6 அறிகுறிகள் தெரியுதா? அப்ப உடம்புல கெட்ட கொலஸ்ட்ரால் அதிகமா இருக்குன்னு அர்த்தம்.. உஷார்.. -
மணமணக்கும்.. திண்டுக்கல் ஸ்டைல் சீரக சம்பா முட்டை பிரியாணி - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க... -
குரு பகவானால் உருவாகியுள்ள விபரீத ராஜயோகம்: அசுர வளர்ச்சியை காணப்போகும் 3 ராசிக்காரங்க இவங்க தான்! -
மட்டன் வாங்குனா.. இப்படி ஊற வெச்சு குழம்பு செய்யுங்க.. இட்லி, சாதம்-ன்னு எல்லாத்துக்கும் அட்டகாசமா இருக்கும்.. -
இன்றைய ராசிபலன் 06 செப்டம்பர் 2026: இன்று இந்த 3 ராசிகளுக்கு வீண் செலவுகள் அதிகரிக்கும் நாளாக இருக்குமாம்
மஞ்ச பூசணி சாம்பார்
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா?
உங்களுக்கு மஞ்சள் பூசணிக்காய் ரொம்ப பிடிக்குமா? இதுவரை நீங்கள் மஞ்சள் பூசணியைக் கொண்டு பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் அதைக் கொண்டு சாம்பார் செய்யலாம் என்பது தெரியுமா? மஞ்சள் பூசணிக்காய் இனிப்பு சுவையைக் கொண்டிருப்பதால் பலரும் இதைக் கொண்டு சாம்பார் செய்ய யோசிப்பார்கள். ஆனால் இதைக் கொண்டு சாம்பார் செய்தால் சுவையாக இருக்கும். இந்த சாம்பார் சாதத்துடன் சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.

உங்களுக்கு மஞ்ச பூசணி சாம்பார் எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே மஞ்ச பூசணி சாம்பார் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதை படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* துவரம் பருப்பு - 1/2 கப்
* தண்ணீர் - 2 கப்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
சாம்பாருக்கு...
* மஞ்சள் பூசணிக்காய் - 1 கப் (துண்டுகளாக்கப்பட்டது)
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* சீரகம் - 1 டீஸ்பூன்
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (கீறியது)
* மல்லித் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
* மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
* புளிச்சாறு - 2 டேபிள் ஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
செய்முறை:
* முதலில் குக்கரில் துவரம் பருப்பை கழுவிப் போட்டு, அதில் மஞ்சள் தூள் மற்றும் 2 கப் நீரை ஊற்றி, குக்கரை மூடி 3 விசில் விட்டு, 5 நிமிடம் குறைவான தீயில் வைத்துவிட்டு பின் அடுப்பை அணைக்க வேண்டும்.
* பின் விசில் போனதும் குக்கரைத் திறந்து, பருப்பை கரண்டியால் மசித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, சீரகம், கறிவேப்பிலை மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கிக் கொள்ள வேண்டும்.
* அடுத்து அதில் மஞ்சள் பூசணியை போட்டு நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதில் சுவைக்கேற்ப உப்பு, மசாலா பொடிகள் மற்றும் சர்க்கரை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின்னர் அதில் வேக வைத்த பருப்பை சேர்த்து, அத்துடன் புளிச்சாறு மற்றும் தேவையான அளவு நீரை ஊற்றி நன்கு 5-8 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கினால், சுவையான மஞ்ச பூசணி சாம்பார் தயார்.
Image Courtesy: yummytummyaarthi



Click it and Unblock the Notifications
