Latest Updates
-
மல்லி தோசையும், தேங்காய் சட்னியும் - எப்படி செய்றது-ன்னு பாத்து ட்ரை பண்ணிப் பாருங்க... -
இன்றைய ராசிபலன் 12 மே 2026: இன்று இந்த 3 ராசிக்காரங்க வாகனம் ஓட்டும்போது கவனமாக இருக்கணும் -
செவ்வாய்-புதன் சேர்க்கையால் உருவாகியுள்ள தன யோகம்: இன்று முதல் இந்த 4 ராசிக்கு பண மழை கொட்டும்.. -
குரு-சுக்கிரன் உருவாக்கும் கஜலக்ஷ்மி யோகத்தால் கோடிகளை குவிக்கப்போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
உள்ளங்கையில் இந்த 'ராஜலட்சுமி யோகம்' இருப்பவர்கள் கோடீஸ்வரராக பிறந்தவர்களாம் - உங்க கையில் இருக்கா? -
விளக்கெண்ணெயுடன் இந்த 5 எண்ணெயை கலந்து யூஸ் பண்ணுங்க.. தலைமுடி 2 மடங்கு வேகத்துல வளரும்.. -
ஆந்திரா கறிவேப்பிலை சட்னி ரெசிபி - அரைச்சு பாருங்க, இட்லி, தோசைக்கு டக்கரா இருக்கும் -
பதவியேற்பு விழாவில் விஜய்யின் குடும்பம் ஏன் வரவில்லை? அந்த ஒரு விஷயம் தான் இப்போ ஹாட் டாபிக்! -
சப்பாத்திக்கு இந்த பக்குவத்துல கருப்பு கொண்டைக்கடலை கிரேவி செய்யுங்க.. 2 சப்பாத்தி எக்ஸ்ட்ரா சாப்பிடுவாங்க.. -
இந்த 4 ராசிக்காரங்க ரொம்ப ஒழுக்கமானவர்களாக இருப்பார்களாம் - வெற்றி இவர்களை தேடிவருமாம்
Vada Pav Recipe : வடா பாவ்
வடா பாவ் என்பது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் விற்கப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இதை பெரும்பாலும் மும்பையின் தெருவோர கடைகளில் காணலாம்.
வடா பாவ் என்பது குஜராத் மற்றும் மகாராஷ்டிரா பகுதிகளில் விற்கப்படும் மிகவும் பிரபலமான ஸ்நாக்ஸ். இதை பெரும்பாலும் மும்பையின் தெருவோர கடைகளில் காணலாம். ஆனால் தற்போது இது இந்தியா முழுவதும் பிரபலமாகி, அனைத்து பகுதிகளிலும் கிடைக்கிறது. இந்த சுவையான ஸ்நாக்ஸ் வயிற்றை விரைவில் நிரப்பக்கூடியது. பெரியோர்கள் முதல் சிறியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் வகையில் சுவையானது. இதுவரை நீங்கள் வடா பாவ் ரெசிபியை கடைகளில் தான் வாங்கி சாப்பிட்டிருப்பீர்கள். ஆனால் இதை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம்.

உங்களுக்கு வடா பாவ் ரெசிபியை எப்படி வீட்டிலேயே செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே வடா பாவ் ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
பூண்டு சட்னி பவுடர் செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டீஸ்பூன்
* எள்ளு - 2 டீஸ்பூன்
* வரமிளகாய் - 5
* பூண்டு - 1/4 கப்
* துருவிய தேங்காய் - 1/2 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
வடா மாவிற்கு...
* கடலை மாவு - 2 கப்
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* ஓமம் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் - தேவையான அளவு
ஆலு வடா செய்வதற்கு...
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - 1 இன்ச் (பொடியாக நறுக்கியது)
* பூண்டு - 4 பல் (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
* உருளைக்கிழங்கு - 4 (வேக வைத்து மசித்தது)
* மஞ்சள் தூள் - 1/2 டீஸ்பூன்
* கொத்தமல்லி - சிறிது (நறுக்கியது)
* சீஸ் க்யூப் - சில துண்டுகள்
* உப்பு - சுவைக்கேற்ப
பிற பொருட்கள்:
* பாவ் பன் - 8
* வெண்ணெய் - டோஸ்ட் செய்வதற்கு
* எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
* முதலில் பூண்டு சட்னி பவுடரை செய்து கொள்ள வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், எள்ளு, வரமிளகாய் சேர்த்து வதக்க வேண்டும்.
* பின் அதில் பூண்டு சேர்த்து பச்சை வாசனை போக வதக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பை தூவி பொன்னிறமாக வறுத்து இறக்கி குளிர வைத்து, மிக்சர் ஜாரில் போட்டு அரைத்து பொடி செய்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து வடா பாவ்விற்கு வேண்டிய வடையை தயாரிக்க வேண்டும். அதற்கு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி, பூண்டு, பச்சை மிளகாய், பெருங்காயத் தூள், வெங்காயம் சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* வெங்காயம் நிறம் மாறியதும், அதில் வேக வைத்து மசித்த உருளைக்கிழங்கு, மஞ்சள் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து நன்கு 3-4 நிமிடம் கிளறி, கொத்தமல்லியைத் தூவி இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* உருளைக்கிழங்கு மசாலா குளிர்வதற்குள், ஒரு பௌலில் கடலை மாவு, மஞ்சள் தூள், ஓமம் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தேவையான அளவு நீரை ஊற்றி, சற்று கெட்டியாக கலந்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பிறகு கையில் சிறிது எண்ணெயை தடவி ஒரு பெரிய எலுமிச்சை அளவில் உருளைக்கிழங்கு மசாலாவை எடுத்து தட்டையாக தட்டி, அதன் நடுவே சில சீஸ் துண்டுகளை வைத்து மூடி, சற்று தட்டையாக தட்டிக் கொள்ள வேண்டும். இதேப்போல் அனைத்து உருளைக்கிழங்கு மசாலாவையும் செய்து கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் வடையைப் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெயை ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள உருளைக்கிழங்கு மசாலாவை கடலை மாவு கலவையில் பிரட்டி, எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். முக்கியமாக வடை பொரித்து எடுக்கும் போது குறைவான தீயில் வைத்து பொரித்து எடுக்க வேண்டும். இதனால் வடை கருகாமல் இருக்கும்.
* பின்னர் ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடேற்ற வேண்டும். பின் பாவ் பன்னை எடுத்து இரண்டாக வெட்டி வெண்ணெய் தடவி, தோசைக்கல்லில் போட்டு டோஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக டோஸ்ட் செய்த இரண்டு பன் துண்டுகளை எடுத்து, அதன் மேல் பூண்டு சட்னி பவுடரைத் தூவி பன்களுக்கு இடையே வடாவை வைத்து, சாண்விட்ச் போன்று செய்து பரிமாறினால், சுவையான வடா பாவ் தயார்.
Image Courtesy: archanaskitchen



Click it and Unblock the Notifications










