Latest Updates
-
குருபகவானின் நட்சத்திர மாற்றத்தால் ஜெயிக்கிற குதிரையாகப் போகும் 3 ராசிகள் - உங்க ராசி இதுல இருக்கா? -
நார்த் இந்தியன் ஸ்டைல் உருளைக்கிழங்கு சப்ஜி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை,சப்பாத்திக்கு சூப்பரா இருக்கும் -
இந்த 4 ராசிக்காரர்களுக்கு இரண்டாவது திருமணம் நடக்க பிரகாசமான வாய்ப்பிருக்காம் - உங்க ராசி இதுல இருக்கா? -
தலப்பாக்கட்டி பன்னீர் பிரியாணி ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - மட்டன் பிரியாணி மாதிரியே இருக்கும் -
அரசு அதிகாரிகளின் குழந்தைகள் வெளிநாட்டில் படிக்க அனுமதிக்காத நாடு - மீறுனா அவ்வளவுதான் - எந்த நாடு தெரியுமா? -
அஸ்ஸாம் ஸ்டைல் சிக்கன் ரெசிபி - இந்த மாதிரி ட்ரை பண்ணி பாருங்க - டேஸ்ட் வித்தியாசமா அட்டகாசமா இருக்கும் -
கறி சுவையை மிஞ்சும் காளான் மிளகு வறுவல் - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. அள்ளும்.. -
செப்டம்பர் 20, 2026: இன்றைய நாள் இந்த 3 ராசிகளுக்கு ரொம்ப துரதிர்ஷ்டமான நாளாக இருக்குமாம் -
வார ராசிபலன் (20 September 2026- 26 September 2026)- இந்த வாரம் இந்த 5 ராசிக்காரர்களுக்கு பணமழை கொட்டப்போகுது! -
ஹோட்டல் சுவையில் பன்னீர் சன்னா சால்னா எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க..
இட்லி சுட மாவு இல்லையா? அப்ப கோதுமை மாவுல 10 நிமிடத்தில் பஞ்சு போல இட்லி செஞ்சு அசத்துங்க...
Wheat Idli Recipe In Tamil: காலையில் உங்கள் வீட்டில் இட்லி சுட மாவு இலலையா? உங்கள் வீட்டில் உள்ளோர் இட்லி தான் கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவு இருந்தால், அதைக் கொண்டு அட்டகாசமான சுவையில் கோதுமை இட்லியை சுடலாம். இந்த இட்லி பஞ்சு போல் மிருதுவாக இருப்பதோடு, செய்வதற்கு மிகவும் சுலபமாகவும் இருக்கும். முக்கியமாக இந்த கோதுமை இட்லியை வெறுமனே கூட சாப்பிடலாம். குழந்தைகளும் விரும்பி சாப்பிடுமாறு இருக்கும்.
உங்களுக்கு கோதுமை இட்லியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை இட்லி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.

தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 1 டேபிள் ஸ்பூன்
* முந்திரி - 7-8
* பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)
* இஞ்சி - சிறிய துண்டு (பொடியாக நறுக்கியது
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது
* கேரட் - 1
* ரவை - 1/2 கப்
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தயிர் - 1/2 கப்
* தண்ணீர் - 1 1/2 கப்
* ஆப்ப சோடா - 2 சிட்டிகை
செய்முறை:
* முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி
சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் முந்திரியை உடைத்து சேர்த்து கிளறி, பச்சை மிளகாய்
மற்றும் இஞ்சியை நன்கு வதக்க வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி
பதத்திற்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் பொடியாக நறுக்கிய கேரட்டை சேர்த்து நன்கு நிறம் மாற
வதக்க வேண்டும்.
* அடுத்து அதில் ரவையை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுக்க
வேண்டும்.
* அதன் பின் கோதுமை மாவை சேர்த்து குறைவான தீயில் வைத்து, நல்ல மணம்
வரும் வரை வறுத்து இறக்கு குளிர வைக்க வேண்டும்.
* பின்னர் அதில் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தயிரை ஊற்றி, அத்துடன் 1
கப் நீரை ஊற்றி முதலில் நன்கு கட்டிகளின்றி கிளறி விட வேண்டும்.
* பின் ஒரு 1/2 கப் நீரை ஊற்றி கிளறி, மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க
வேண்டும்.
* 5 நிமிடம் கழித்து, அதில் ஆப்ப சோடாவை சேர்த்து நன்கு கிளறி,
மிகவும் கெட்டியாக இருந்தால், சிறிது நீரை ஊற்றி இட்லி மாவு
பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக இட்லி தட்டில் எண்ணெய் தடவி, கலந்து வைத்துள்ள மாவை ஊற்றி,
இட்லி பாத்திரத்தில் வைத்து 10 நிமிடம் வேக வைத்து எடுத்தால், சுவையான
கோதுமை இட்லி தயார்.



Click it and Unblock the Notifications
