Latest Updates
-
கல்யாண வீட்டு தஞ்சை வத்தக்குழம்பு - எப்படி செய்றது-ன்னு பாத்து செஞ்சு பாருங்க.. டேஸ்ட் அள்ளும்.. -
World Kidney Day 2026: சிறுநீரகங்கள் ஆரோக்கியமா இருக்கணுமா? அப்ப டாக்டர் சொல்ற இந்த 5 உணவுகளை சாப்பிடுங்க.. -
ராகு-கேதுவால் உருவாகியுள்ள கால சர்ப்ப யோகம்: இந்த 3 ராசிக்கு மார்ச் 26 வரை வெற்றியும், பணமும் குவியப்போகுது... -
இந்த கஞ்சியை தினமும் காலையில் 1 கப் குடிங்க.. உடல் எடை ஜெட் வேகத்தில் குறையும்... -
இன்றைய ராசிபலன் 10 மார்ச் 2026: இன்று இந்த 4 ராசிக்காரர்களுக்கு துரதிர்ஷ்டம் துரத்தும் நாளாக இருக்குமாம்...! -
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க..
1 கப் கோதுமை மாவு இருந்தா, 10 நிமிடத்தில் சூப்பர் டிபன் ரெடி பண்ணலாம்.. எப்படி-ன்னு பாருங்க..
Wheat Flour Masala Dosa Recipe In Tamil: காலையில் எப்போதும் ஒரே மாதிரி தோசை தான் செய்வீர்களா? இதனாலேயே வீட்டில் உள்ளோர் சரியாக சாப்பிடுவதில்லையா? அப்படியானால் அவ்வப்போது வித்தியாசமான மற்றும் ஈஸியான டிபன் ரெசிபிக்களை ட்ரை செய்யுங்கள். உங்களுக்கு உதவவே தினமும் தமிழ் போல்ட்ஸ்கை காலையில் எளிமையான ரெசிபிக்களை பகிர்ந்து வருகிறது. இன்று நாம் பார்க்கப் போவது கோதுமை மாவு மசாலா தோசை பற்றி தான்.
இந்த கோதுமை மாவு மசாலா தோசை, வழக்கமாக செய்யும் கோதுமை தோசை போன்று தான் இருக்கும். ஆனால் அத்துடன் சில பொருட்களை வதக்கி சேர்க்க வேண்டும். இப்படி ஒருமுறை வீட்டில் உள்ளோருக்கு தோசை சுட்டு கொடுத்தால் நிச்சயம் விரும்பி சாப்பிடுவார்கள். முக்கியமாக இந்த தோசைக்கு தேங்காய் சட்னி அற்புதமான சைடு டிஷ்ஷாக இருக்கும்.

உங்களுக்கு கோதுமை மாவு மசாலா தோசையை எப்டி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு மசாலா தோசை ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* உப்பு - சுவைக்கேற்ப
* தண்ணீர் தேவையான அளவு
மசாலாவிற்கு...
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* கடலைப் பருப்பு - 2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 2 (பொடியாக நறுக்கியது)
* வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, தோசை மாவு பதத்திற்கு கலக்க தேவையான அளவு
நீரை கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி கலந்து கொள்ள வேண்டும்.
* பின் தயாரித்த மாவை மூடி வைத்து 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 2 டீஸ்பூன் எண்ணெய்
ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, சீரகம் சேர்த்து தாளிக்க
வேண்டும்.
* அதன் கடலைப் பருப்பை லேசாக வறுக்க வேண்டும்.
* பின்பு பொடியாக நறுக்கிய கறிவேப்பிலை, வெங்காயம், பச்சை மிளகாய்
சேர்த்து நன்கு கண்ணாடி பதத்திற்கு வெங்காயம் வரும் வரை வதக்க
வேண்டும்.
* பிறகு அதில் பொடியாக நறுக்கிய தக்காளியை சேர்த்து, சிறிது உப்பு
தூவி நன்கு வதக்க வேண்டும். ஏற்கனவே மாவில் உப்பு சேர்த்துள்ளதால்,
இதில் பார்த்து அளவாக உப்பு சேர்க்க வேண்டும்.
* தக்காளியும் நன்கு வதங்கியதும் அடுப்பை அணைத்துவிட்டு, குளிர வைக்க
வேண்டும்.
* வதக்கிய பொருட்கள் குளிர்ந்த பின், அவற்றை ஊற வைத்துள்ள கோதுமை
மாவுடன் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
* இறுதியாக ஒரு தோசைக்கல்லை அடுப்பில் வைத்து, கல் சூடானதும், மாவை
தோசையாக ஊற்றி, மேலே சுற்றி எண்ணெய் ஊற்றி, முன்னும் பின்னும் வேக
வைத்து எடுத்தால், சுவையான கோதுமை மாவு மசாலா தோசை தயார்...
Image Courtesy: Madras Virunthu



Click it and Unblock the Notifications






