Latest Updates
-
August Month Rasi Palan 2026: உங்க ராசியை சொல்லுங்க.. ஆகஸ்ட் மாதம் எப்படி இருக்கும்-ன்னு சொல்றோம்... -
சந்திரன் விருச்சிக ராசிக்கு செல்வதால் தொந்தரவுகளையும், துன்பங்களையும் அனுபவிக்கப்போகும் 3 ராசிகள் -
செட்டிநாடு கொண்டைக்கடலை குருமா ரெசிபி - ட்ரை பண்ணி பாருங்க - தோசை, சப்பாத்திக்கு அட்டகாசமா இருக்கும் -
ஆடி வெள்ளி ஸ்பெஷல் தேங்காய் பாயாசம் - எப்படி செய்றதுன்னு பாத்து ட்ரை பண்ணுங்க.. -
சருமம் அதிகமா வறண்டு போகுதா? அப்ப இந்த இயற்கை வழிகளை ட்ரை பண்ணுங்க.. -
சிவன் கோவிலில் ஏன் பக்தர்கள் தங்கள் வேண்டுதல்களை நந்தியின் காதில் மெதுவாக கூறுகிறார்கள் தெரியுமா? -
வக்ர நிவர்த்தி அடையும் புதன்: நாளை முதல் இந்த 3 ராசிக்கு பணம், புகழ், வெற்றி தேடி வரப்போகுது! -
ராகு-கேது ஆசியால் டிசம்பர் மாதம் வரை கொடிகட்டி பிறக்கப்போகும் 3 ராசிகள் என்னென்ன தெரியுமா? -
கிராமத்து ஸ்டைல் முருங்கைக்காய் பொரிச்ச குழம்பு - எப்படி செய்றதுன்னு பாத்து செஞ்சு பாருங்க.. -
இந்தியாவின் அண்டார்டிகா என்று அழைக்கப்படும் நடுங்கவைக்கும் குளிர் நிலவும் இடம் எது தெரியுமா?
1 கப் கோதுமை மாவும் 1/2 கப் ரவையும் வெச்சு.. ஈவ்னிங் இப்படியொரு ஸ்நாக்ஸ் செய்யுங்க... சூப்பரா இருக்கும்..
Wheat Flour Appam Recipe In Tamil: மாலை வேளையில் உங்கள் குழந்தைகள் சாப்பிட ஏதாவது சாப்பிட கேட்டு நச்சரிக்கிறார்களா? அதுவும் இனிப்பாக ஏதாவது சாப்பிட கேட்கிறார்களா? உங்கள் வீட்டில் கோதுமை மாவும், ரவையும் இருந்தால், அவற்றைக் கொண்டு ஒரு சுவையான அப்பம் செய்து கொடுங்கள்.
இந்த கோதுமை அப்பம் செய்வதற்கு மிகவும் சுலபமாக இருப்பதோடு, இதன் சுவையும் அற்புதமாக இருக்கும். இந்த மாதிரியான அப்பத்தை ஒருமுறை உங்கள் குழந்தைகளுக்கு செய்து கொடுத்தால், அடிக்கடி செய்து கொடுக்க கேட்பார்கள்.

உங்களுக்கு கோதுமை மாவு அப்பத்தை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை அப்பத்தின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கோதுமை மாவு - 1 கப்
* ரவை - 1/2 கப்
* சர்க்கரை - 1/2 கப்
* உப்பு - 1 சிட்டிகை
* தண்ணீர் - 1 1/4 கப்
* தேங்காய் - 1 சில்லு
* ஏலக்காய் - 2
* எண்ணெய் - பொரிப்பதற்கு
செய்முறை:
* முதலில் ஒரு பாத்திரத்தில் 1 கப் கோதுமை மாவை எடுத்து, அத்துடன்
1/2 கப் ரவையை சேர்த்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் 1/2 கப் சர்க்கரை மற்றும் 1 சிட்டிகை உப்பு சேர்த்துக்
கொள்ள வேண்டும்.
* பின்பு கொஞ்சம் கொஞ்சமாக நீரை ஊற்றி கட்டிகளின்றி கலந்து கலந்து
கொள்ள வேண்டும். மாவானது மிகவும் கெட்டியாக இருக்கக்கூடாது. ஓரளவு
நீராக இருக்க வேண்டும்.
* பிறகு அந்த மாவை 1/2 மணிநேரம் மூடி வைத்து ஊற வைக்க வேண்டும்.
* பின் மிக்சர் ஜாரில் தேங்காய் மற்றும் ஏலக்காய் சேர்த்து அரைத்து
பொடி செய்து கொள்ள வேண்டும்.
* 1/2 மணிநேரம் கழித்து, அரைத்த தேங்காய் பொடியை மாவுடன் சேர்த்து
கலந்து கொள்ள வேண்டும்.
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, பொரிப்பதற்கு தேவையான அளவு
எண்ணெய் ஊற்றி சூடானதும், தீயைக் குறைத்துக் கொள்ள வேண்டும்.
* பின் ஒரு கரண்டி மாவை எடுத்து எண்ணெயில் ஊற்றி, பொரித்து எடுத்தால்,
சுவையான கோதுமை மாவு அப்பம் தயார்.
Image Courtesy: Aashirvaad Svasti Milk



Click it and Unblock the Notifications