Latest Updates
-
மீனத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: தனுசு உள்ளிட்ட 3 ராசிக்கு தொழிலில் நல்ல முன்னேற்றம் ஏற்படும்... -
முடி அதிகமா கொட்டுதா? அப்ப தேங்காய் எண்ணெயுடன் இந்த எண்ணெயை சேர்த்து யூஸ் பண்ணுங்க.. -
300 ஆண்டுக்கு பின் உருவாகும் சுக்ராதித்ய யோகம் 2026: இந்த 3 ராசிக்காரர்களுக்கு கோடீஸ்வர யோகம் தேடிவரப்போகுதாம் -
கொய்யாக்காய் வாங்குனா இந்த மாதிரி சட்னி அரைச்சு பாருங்க... இட்லி, தோசைக்கு வித்தியாசமா சூப்பரா இருக்கும்...! -
1 கப் ராகி மாவும், 1/2 கப் தேங்காயும் இருந்தா.. ஈவ்னிங் டைம்-ல இந்த ஸ்நாக்ஸை ட்ரை பண்ணுங்க.. -
மரணமிலா வாழ்க்கையை வாழ்வதற்கு ஒரு வழி கிடைத்துவிட்டது..ஆனா இதுக்கு எவ்வளவு செல்வாகும் தெரியுமா? ஷாக் ஆகாதீங்க! -
சுக்கிரனின் நட்சத்திர பெயர்ச்சி: மார்ச் 15 முதல் இந்த 5 ராசிக்காரங்க பண விஷயத்துல கவனமா இருக்கணும்.. -
முருங்கைக்கீரையை இந்த மாதிரி கேரளா ஸ்டைலில் தோரன் செஞ்சு சாப்பிடுங்க..சுவையாவும், ஆரோக்கியமாகவும் இருக்கும்..! -
1 கப் தயிர் இருந்தா.. மதியம் 5 நிமிஷத்துல இந்த குழம்பு செய்யுங்க.. ருசியாவும், வெயிலுக்கு இதமாவும் இருக்கும்.. -
செவ்வாயின் நட்சத்திரம் மாற்றம் இந்த 4 ராசிகளுக்கு சகல நன்மைகளையும் அளிக்கப்போகுதாம்... உங்க ராசி இதுல இருக்கா?
2 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தா இந்த சூப்பரான போண்டாவை செய்யுங்க...பஞ்சு மாதிரி டேஸ்டா இருக்கும்..
Wheat Banana Bonda Recipe in Tamil: மாலை நேரம் வந்தாலே அனைவரின் மனமும் நொறுக்குத்தீனிகளை நோக்கி திரும்பும். குறிப்பாக குழந்தைகள் மாலை நேரத்தில் நிச்சயம் ஏதாவது நொறுக்குத்தீனியை சாப்பிட விரும்புவார்கள். தற்போது வானிலை மிகவும் சூப்பராக இருப்பதால் நிச்சயம் வீட்டில் இருப்பவர்களுக்கு ஏதாவது செய்து கொடுத்தே தீர வேண்டும்.
அதிக நேரம் செலவழிக்காமல் மிகவும் எளிதாக, விரைவாக குறிப்பாக சுவையாக செய்யக்கூடிய நொறுக்குத்தீனி ஒன்றை எப்படி செய்வது என்பது பற்றி இப்போது பார்க்கலாம். 2 கப் கோதுமை மாவும், 2 வாழைப்பழமும் இருந்தால் போதும் எளிமையான, அதேசமயம் சுவையான ஒரு போண்டா செய்யலாம். இந்த போண்டா குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியவாறு ருசியாக இருக்கும்.

மேலும் இந்த போண்டாவை ஒருமுறை செய்தால், பின் அடிக்கடி செய்து கொடுக்குமாறு கேட்பார்கள். உங்களுக்கு கோதுமை மாவு இனிப்பு போண்டாவை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே கோதுமை மாவு இனிப்பு போண்டா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
- முக்கால் கப் வெல்லம்
- ½ கப் தண்ணீர்
- 2 நன்கு பழுத்த வாழைப்பழம்
- 2 கப் கோதுமை மாவு
- ¼ டீஸ்பூன் உப்பு
- ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள்
- ¼ டீஸ்பூன் பேக்கிங் சோடா
- எண்ணெய் தேவையான அளவு
செய்முறை:
- முதலில் ஒரு பாத்திரத்தில் முக்கால் கப் வெல்லத்தில் அரை கப் தண்ணீரை ஊற்றவும்.
- இதை நன்றாகக் கிளறி அடுப்பில் வைத்து வெல்லம் முழுமையாகக் கரையும் வரை கொதிக்க விடவும். பின்னர் ஆறவைத்து தனியாக வைக்கவும்.
- ஒரு பெரிய பாத்திரத்தில், 2 வாழைப்பழங்களை உரித்து போட்டு கூழ் போன்ற பதத்திற்கு வரும் வரை மசிக்கவும்.
- மசித்த வாழைப்பழத்தில் 2 கப் கோதுமை மாவு, ¼ டீஸ்பூன் உப்பு, ½ டீஸ்பூன் ஏலக்காய் தூள் மற்றும் ¼ டீஸ்பூன் பேக்கிங் சோடாவை சேர்க்கவும்.
- பின்னர் வெல்லப்பாகை சேர்க்கவும். ஏதேனும் தூசி இருந்தால் அவற்றை நீக்க வடிகட்டி ஊற்றவும்.
- அனைத்தும் ஒன்றோடொன்று கலக்கும்படி நன்கு கலக்கவும்.
- தேவையான அளவு தண்ணீர் சேர்த்து, மாவை நன்றாக அடித்து வைத்துக் கொள்ளவும்.
- இப்போது உங்கள் கையை குளிர்ந்த நீரில் நனைத்து, மாவில் இருந்து ஒரு சிறிய உருண்டை அளவு எடுத்துக்கொள்ளவும்.
- அடுப்பில் ஒரு பாத்திரத்தை அதில் எண்ணெயை ஊற்றி மிதமான தீயில் சூடாக்கவும், எண்ணெய் சூடானதும் அந்த சின்ன சின்ன உருண்டைகளை சூடான எண்ணெயில் போடவும்.
- மிதமான தீயில் வைத்து சீராகக் கிளறி பொரிக்கவும்.
- போண்டா பொன்னிறமாக மாறி மொறுமொறுப்பானதும், எண்ணெயை வடித்து எடுக்கவும்.
- இறுதியாக, ஒரு ஸ்பூன் நெய் ஊற்றி சாப்பிட்டால் சுவையால் கோதுமை இனிப்பு போண்டா தயார்.



Click it and Unblock the Notifications









